Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

June 2016
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,328 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா!

   swing1ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீடடில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.

இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.  அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள். இடவசதி குறைவாக உள்ளவர்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.

swing-on-the-porch-of-hunters-beach-houseஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது. மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது.

நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேக மாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.

இது ஒரு நல்ல பயிற்சி

df8443c6533afdf7a7e2c187282df3abகம்ப்யூட்டரில் மணிகணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற் சியை தினமும் செய்தால் முதுகுத்தண்டு வடம் பலம் பெற்று கழுத்துவலி குண மடைய வழி செய்கிறது.

  • தோட்டத்தில் அமைக் கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது.
  • மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும்.
  • இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும்.
  • தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.
  • ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.
  • சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது.
  • சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.
  • கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.
  • வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.
  • பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள்.
  • இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று.

ஊஞ்சல்கள் பலவகை:

  • 6a1aba5f50b618b532a35482be8a1316சங்கிலியால் பிணைக்கப்பட்ட பெரிய பலகைகளை கொண்ட ஊஞ்சல். இது பழையகால ஊஞ்சல் என்றாலும் இதில் ஆடும்போது திரில் அதிகம்.
  • நவீன வகை ஊஞ்சல்கள் “சோபா” வகையை சேர்ந்தது. அமர்ந்து ஆட வசதியாக இருக்கும்.
  • தோட்டம் திறந்த வெளிகளுக்கு மெட்டல் ஊஞ்சல்கள் ஏற்றது.

மூங்கில் ஊஞ்சல்கள் பால்கனி படுக்கை அறைகளுக்கு ஏற்றது.
மூங்கில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் அதனால் வெயில் காலங்களில் குளிர்ச்சியை உடலுக்கு தர வல்லது.

  • குறுகலான இடத்தில் ஊஞ்சல்கள் அமைக்கக் கூடாது.
  • காற்றோட்டமான இடத்தில் தாராளமான இடவசதி உள்ள இடத்தில் ஊஞ்சல்கள் அமைப்பதே நல்லது.
  • கூடுமானவரை ஜன்னல்கள் அருகே ஊஞ்சல் அமைப்பது நல்லது.
  • ரம்மியமான சூழ்நிலையில் ஊஞ்சல் அமைத்தால் இளைப்பாற வசதியாக இருக்கும்.