Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2016
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,871 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை மழை, குளிர்கால உணவுகள்! 1/2

 p101aது மழைக்காலம். மழை மண்ணை நனைத்ததுமே, ‘சூடா ஏதாச்சும் ஸ்நாக்ஸ் சாப்பிடலாமே’ என மனம் தேடும். அந்த சிற்றுண்டிகள் சத்துள்ளதாகவும் இருந்துவிட்டால், மழைக்கால நோய்களில் இருந்து நம்மைக் காப்பாற்றுவதாகவும் அமைந்துவிடும். சூப் முதல் அடைவரை, அப்படியான டேஸ்ட்டி மற்றும் ஹெல்த்தி ‘ரெய்னி டேஸ் ஸ்நாக்ஸ்’ ரெசிப்பிகளை இங்கே வழங்கியிருக்கிறார், சுதா செல்வக்குமார்.

வாழைப்பூ சீரகக் கஞ்சி

1தேவையானவை:
வாழைப்பூ இதழ் – 15, இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், சீரகச்சம்பா அரிசி – கால் கப், பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காயம் – 6 (பொடியாக நறுக்கவும்), தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித்தழை – சிறிது,  நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

 

செய்முறை:
வாழைப்பூவை காம்பு நீக்கி, நறுக்கி மோரில் போடவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, சீரகம், இஞ்சித் துருவல், வாழைப்பூ (மோரிலிருந்து எடுத்துப் பிழிந்து) சேர்த்து வதக்கி,  அரிசி, பாசிப்பருப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் இந்தக் கஞ்சியைச் சுடச்சுடக் குடிக்கலாம்.


பனிவரகு கஞ்சி வித் பப்பட்

2தேவையானவை:பனிவரகு – ஒரு கப், கேரட் – 3 டேபிள்ஸ்பூன் (சதுரமாக நறுக்கியது), மிளகு – ஒரு டீஸ்பூன் (ஒன்றிரண்டாக உடைத்தது), பல்லாக நறுக்கிய தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – சிறிது, உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க: கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், பூண்டுப் பல் – 2, பச்சை மிளகாய் – ஒன்று (கீறியது), பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது (நசுக்கியது), சுட்ட அப்பளம் – தேவைக்கேற்ப.

 

செய்முறை: 
பனிவரகு அரிசியை 2 மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து தாளித்து, கேரட் சேர்த்து வதக்கி, தேவையான தண்ணீர், உப்பு சேர்க்கவும். கொதி வந்ததும் பனிவரகு அரிசியை சேர்த்து, 3
விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கி, மிளகுத்தூள் தூவி, தேங்காய்ப் பல் சேர்த்து அலங்கரித்து சுட்ட அப்பளத்துடன் சாப்பிடவும்.


டொமேட்டோ- ஃப்ரெஞ்ச் ஆனியன் சூப்

3தேவையானவை: பழுத்த தக்காளி – 4, பூண்டு – ஒரு டேபிள் ஸ்பூன் (நறுக்கி நசுக்கியது), வெள்ளை பெரிய வெங்காயம் – 2,  சர்க்கரை – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

 

செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். தக்காளியை சிறுதுண்டுகளாக நறுக்கவும். குக்கரில் வெண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, உப்பு, தண்ணீர் சேர்க்கவும். 5 நிமிடம் வேகவிட்டு அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட்டு மிக்ஸியில் அரைக்கவும். பெரிய கண் உடைய வடிகட்டியால் வடிகட்டவும். பிறகு சூப்பில் உப்பு (தேவைப்பட்டால்), சர்க்கரை, நசுக்கிய பூண்டு சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கும்வரை சூடாக்கவும். மிளகுத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.


வெஜ் – ஹெல்த் சூப்

4தேவையானவை:பச்சைப்பயறு, கொள்ளு, ராஜ்மா, கொண்டைக் கடலை – தலா 2 டேபிள்ஸ்பூன்  (முளைகட்டியது), தக்காளி – ஒன்று, மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், உப்பு – சிறிது.

 

செய்முறை:
தக்காளியைத் தண்ணீரில் வேகவைத்து எடுத்து தோல் நீக்கவும். முளைகட்டிய பயறு வகைகளுடன் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும். தண்ணீரில் குழைய வெந்திருக்கும் பயறுகளுடன் தக்காளியைச் சேர்த்து நன்கு மசித்து, பெரிய கண் உள்ள வடிகட்டியால் வடிகட்டவும். வடிகட்டிய சூப்புடன் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள் தூவி சூடாகப் பரிமாறவும்.


ஓட்ஸ் – புரூக்கோலி சூப்

5தேவையானவை: ஓட்ஸ் – அரை கப்,  புரூக்கோலி – 3 மொட்டுகள், ஓமம் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, பிரிஞ்சி இலை – ஒன்று,  இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு (தட்டியது), பால் – ஒரு கப், சர்க்கரை – அரை டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

 

செய்முறை: 
பிரஷர் பானில் வெண்ணெயை சூடாக்கி, பிரிஞ்சி இலை, புரோக்கோலி மொட்டு களைச் சேர்த்து சில நிமிடங்கள் கிளறி, ஒரு கப் பால், ஓட்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து குறைந்த தீயில் ஒரு விசில் வரும்வரை வேக விடவும். பிறகு இஞ்சி, மிளகாயை நீக்கிவிட்டு (இல்லையென்றால் மிகவும் காரமாக இருக்கும்), கலவையை மிக்ஸியில் விழுதுபோல் அரைத்து, பெரிய கண் உள்ள வடிகட்டியின் மூலம் வடிகட்ட வும். மீண்டும் அடுப்பில் வைத்து உப்பு, சர்க்கரை, ஓமம், தேவையெனில் பால் (அ) தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் ஒரு கொதி விடவும். பரிமாறுவதற்கு முன் மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகுத்தூள் தூவவும்.


சுக்கு சூப்

7தேவையானவை:சுக்குப் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன் (ஒன்றிரண்டாக உடைத்தது), தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று (நறுக்கவும்), துளசி, புதினா இலை – சிறிது, சோம்பு – அரை டீஸ்பூன், வெள்ளைப் பூசணி – ஒரு துண்டு  (2 இஞ்ச் அளவு), வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

 

செய்முறை:
அலங்கரிப்பதற்கு சில புதினா இலைகளை தனியாக எடுத்துக்கொள்ளுங்கள். பிரஷர் பானில் வெண்ணெயை சூடாக்கி கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் (உப்பு நீங்கலாக) சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு விசில் வரும்வரை வேகவிடவும். பிரஷர் நீங்கியதும் பெரிய கண் உள்ள வடிகட்டியால் வடிகட்டி, சூப் கிண்ணத்தில் ஊற்றி, புதினா சேர்த்துப் பரிமாறவும். விரும்பினால் வறுத்த ரொட்டி துண்டுகளை மேலே தூவிக்கொள்ளலாம்.


காளான் க்ரீமி சூப்

6தேவையானவை:காளான் – 100 கிராம்,  கோதுமை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், பால் – ஒரு கப், ஃப்ரெஷ் க்ரீம் – ஒரு டேபிள்ஸ்பூன்,  சர்க்கரை, மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், கொரகொரப்பாக அரைத்த சீரகம் – அரை டீஸ்பூன், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

 

செய்முறை:
காளானை தண்ணீரில் கழுவி நறுக்கவும். பிரஷர் பானில் வெண்ணெயை சூடாக்கி, காளான் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். பிறகு, கோதுமை மாவை தூவி ஒரு நிமிடம் வதக்கி, பால், சீரகம், உப்பு சேர்த்து, ஒரு விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். ஆறியதும் கலவையை மிக்ஸியில் ஒருமுறை சுற்றி, பெரிய கண் உள்ள வடிகட்டியால் வடிகட்டவும். வடிகட்டியதை மீண்டும் அடுப்பில் வைத்து சர்க்கரை சேர்த்து ஒரு கொதி விடவும். பரிமாறுவதற்கு முன் மிளகுத்தூள் தூவவும். சூப் கிண்ணத்தில் ஊற்றி, துருவிய சீஸ் (அ) ஒரு டேபிள்ஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: காளான் சூப்புக்கு வேகவைப்பவற்றை குறைந்த நேரம் வேகவைத்தால் போதுமானது.
அப்போதுதான் அதன் நறுமணம் தக்கவைக்கப்படும்.


மசாலா டீ

9 தேவையானவை: பால், தண்ணீர் – தலா ஒரு டம்ளர், ஏலக்காய் – 2, சுக்குப்பொடி – அரை டீஸ்பூன், துளசி இலை -4, தோல் நீக்கி தட்டிய இஞ்சி – சிறிது, டீத்தூள் – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – தேவைக்கேற்ப.

 

செய்முறை:
பாலைக் காய்ச்சவும். மற்றொரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை வைத்து  ஒரு கொதி வந்தவுடன் தட்டிய ஏலக்காய் மற்றும் இஞ்சி, சுக்குப்பொடி, துளசி இலை, டீத்தூள், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். தண்ணீரில் அனைத்துப் பொருட்களின் சாறும் இறங்கி மணம் வரும் சமயம் அடுப்பை அணைக்கவும். பிறகு வடிகட்டி பாலில் சேர்த்து, தேவையெனில் சிறிது சர்க்கரை கலந்து பரிமாறவும்.


இஞ்சி-பூண்டு – மிளகு ரசம்

8தேவையானவை:
துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் – ஒன்றரை கப், பூண்டு – 6 பல், மிளகு – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – அலங்கரிக்க, இஞ்சி – 2 அங்குலத் துண்டு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், கறி வேப்பிலை – சிறிது, நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

 

செய்முறை: 
இஞ்சி, பூண்டு மற்றும் மிளகை அம்மியில் நசுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்து, சீரகம், நசுக்கிய இஞ்சி, பூண்டு, மிளகைச் சேர்த்து வதக்கி, பருப்புத் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். பிறகு, பெருங்காயத்தூள் தூவி ஒரு கொதிவிட்டு இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். கொத்தமல்லித்தழை தூவவும். இதை அப்படியே பருகலாம். சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம்.


கற்பூரவல்லி கஷாயம்

11தேவையானவை:
கற்பூரவல்லி இலை – 5, துளசி இலை – 10, இஞ்சி – அரை அங்குலத்துண்டு (கழுவி, தோல் நீக்கி தட்டியது), சுக்குப்பொடி, ஓமம் – தலா அரை டீஸ்பூன், பனங்கற்கண்டு – 2 டேபிள்ஸ்பூன் (பொடித்தது).

 

செய்முறை:
பனங்கற்கண்டு தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒரு பெரிய பாத்திரத்தில் சேர்த்து சூடாக்கி, 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அவை ஒரு டம்ளராக வற்றியதும் இறக்கி வடிகட்டவும். இத்துடன் பொடித்த பனங்கற்கண்டு சேர்த்து கரைந்ததும் குடிக்கவும். நல்ல மணத்துடன் தொண்டைக்கு இதமாக இருக்கும்.


பாஸ்தா சுண்டல்

10தேவையானவை:
மக்ரோனி பாஸ்தா – ஒரு கப், கடுகு – அரை டீஸ்பூன்,  தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சைப் பட்டாணி – கால் கப், மாங்காய் – 2 டேபிள்ஸ்பூன் (சதுரமாக வெட்டியது), கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிது, எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

 

செய்முறை:
தண்ணீரில் உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து, அதில் பாஸ்தாவை மிருதுவாக வேகவைத்து நீரை வடிகட்டவும். பச்சைப் பட்டாணியைக் குழையவிடாமல் வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த பாஸ்தா, பச்சைப் பட்டாணி, தேங்காய்த் துருவல், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். மாங்காய் துண்டுகள், கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


முள்ளங்கி சூப்

13தேவையானவை: வெள்ளை முள்ளங்கி – 2,  மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெயில் பொரித்த பிரெட் துண்டுகள் – 5, உப்பு – தேவைக்கேற்ப.

 

செய்முறை:
முள்ளங்கியை கழுவி, தோல் சீவி நறுக்கவும். பிறகு, முள்ளங்கியை உப்பு போட்டு வேகவைத்து தண்ணீரை வடிகட்டி மசிக்கவும். வடி கட்டிய தண்ணீருடன் மசித்த முள்ளங்கி, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து ஒருகொதிவிட்டு இறக்கி, பொரித்த பிரெட் துண்டுகளை சூப்பின் மேலாக தூவிப் பரிமாறவும்.


வெற்றிலை கஷாயம்

12தேவையானவை:
வெற்றிலை – 5, நாரத்தம் இலை – 2, புதினா இலை, கொத்தமல்லித்தழை – சிறிது, முழு மிளகு – ஒரு டீஸ்பூன், அச்சு வெல்லம் – 2 (பாகு எடுத்து ஆறவிடவும்), உப்பு – ஒரு சிட்டிகை.

 

செய்முறை:
ஒரு பாத்திரத் தில் வெல்லம் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்துக் கொதிக்கவிட்டு வடி கட்டவும். ஆறிய வெல்லப் பாகு கலந்து பருகவும். நோய் எதிர்ப்புச் சக்தி தரவல்ல மூலிகைகள் அடங்கிய இந்த கஷாயத்தை வாரத்துக்கு ஒரு முறை பருகுவது நல்லது.


ரிச் வடை

15 தேவையானவை:
கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு – தலா அரை கப், சோம்பு – ஒரு டீஸ்பூன், வேகவைத்த ஸ்வீட் கார்ன்  – கால் கப், இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, சோள ரவை (மொறுமொறுப்புக்கு) – ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று (நறுக்கியது), எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

 

செய்முறை: 
கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பை ஊறவைத்து தண்ணீரை வடிக்கவும். பருப்பு களுடன் சோம்பு, உப்பு, இஞ்சித் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். அந்தக் கலவையுடன் சோள ரவை, வெங்காயம், வேக வைத்த ஸ்வீட்கார்ன் சேர்த்துப் பிசைந்து  வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.


ஆனியன் புடலை ரிங்ஸ்

14தேவையானவை: சின்ன புடலை, பெரிய வெங்காயம் – தலா ஒன்று, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடலை மாவு – அரை கப், பச்சரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், இஞ்சி-பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

 

செய்முறை: 
புடலையை வட்டமாக நறுக்கி விதைகளை நீக்கவும். வெங்காயத்தை வட்டமாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்துக் கலந்து, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைக்கவும். புடலை, வெங்காய ரிங்ஸை அதில் முக்கி எடுத்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சாஸ் உடன் சாப்பிடலாம்.

நன்றி: விகடன்