Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,588 முறை படிக்கப்பட்டுள்ளது!

பகிர்ந்து கொள்ளுங்கள் பகிரங்கமாக

நிர்வாகவியல் நிபுணர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜாக் வெல்க். நிறுவங்களின் வளர்ச்சிக்கான நடைமுறை வழிகளைப் ‘பளிச்’சென்று சொல்வதில் வல்லவர். செயல்படுத்தக்கூடிய சூத்திரங்கள் பலவற்றைத் தந்துள்ள அவரின் புகழ்பெற்ற வழிகாட்டுதல்களில் சில:

  1.  
    1. வெற்றிக்கு இருப்பது ஒரே வழி. அதுதான் நேர்வழி. உங்கள் நிறுவனத்தின் வழிமுறைகள் நேராக, நேர்மையாக அமையட்டும்.
    2. எங்கு வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் நிகரில்லாத ஆலோசனைகளை நல்க முடியும். படித்த விஷயங்களை நிறுவனத்தில் எல்லோரும் எல்லோரோடும் பகிரங்கமாகப் பகிர்ந்து கொள்ளச் செய்யுங்கள்.
    3. சரியான ஆட்களை சரியான பொறுப்புகளில் அமர்த்துங்கள். திட்டமிடுதலின் சுமை பாதிக்குப்பாதி குறைந்துவிடும்.
    4. அன்றாடப்பணிச்சூழல் எதார்த்தமானதாக இருந்தால், அது உங்கள் நிறுவனத்தின் பலங்களிலே ஒன்று.
    5. நிறுவனத்தில் ஒவ்வொருவருக்கும் மதிப்பு உண்டு. அதே நேரம், அவரவர் மதிப்பு என்னவென்று அவர்களுக்காவது தெரிந்திருக்க வேண்டும்.
    6. திறந்த நிலையில் உங்கள் செயல்பாடுகளை வைத்திருப்பதுதான் நம்பிக்கையின் நிகரற்ற அடையாளம்.
    7. பணியிடங்களில் கொண்டாட்டங்களுக்கும் இடம் வேண்டும். அது நிறுவனத்தை உயிர்ப்புள்ளதாய் ஆக்குகிறது.
    8. யாரையும் குறைவாக எடை போடாதீர்கள்.
    9. உங்கள் நிறுவனத்தின் மதிப்பைப் பெருக்கும் செயல்கள் எவையென்று பாருங்கள். சரியானவர்களையே அங்கு நியமியுங்கள்.
    10. கட்டுப்படுத்தவேண்டியது எப்போது, சுதந்திரம் தரவேண்டியது எப்போது என்றெல்லாம் சரியாக தெரிந்து செயல்படுத்துங்கள்.

– பிரதாபன் – http://www.namadhunambikkai.com/2011/03/01/1601/#more-1601