உலகம் முழுவதும் 59 நாடுகளைச் சேர்ந்த 7 கோடியே 70 லட்சம் நிறுவனங்களின் கணக்குத் தகவல்கள் குற்றவாளிகளால் களவாடப்பட்டுள்ளன.
ப்ளே ஸ்டேஷனில் ஓன்லைன் விளையாட்டுப் பொருட்கள், மென்பொருள், திரைப்படம், இசை தரவிறக்க நிகழ்வுகளுக்கு குறிப்பிட்ட நபர் தனது கடனட்டை மற்றும் தனது தனித் தகவல்களை அளிக்க வேண்டும். இந்த தகவல்கள் தான் தற்போது கணணி திருடர்களால் களவாடப்படுகின்றன.
பிரிட்டனில் மட்டும் 30 லட்சம் பிரிட்டிஷ் விளையாட்டு வாடிக்கையாளர்களின் கணக்குகள் திருடப்பட்டுள்ளன. ப்ளே ஸ்டேஷன் விளையாட்டு பொருட்களின் பெயர்கள், முகவரிகள், பிறந்த நாள் விவரம் மற்றும் பாதுகாப்புத் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
ப்ளே ஸ்டேஷன் தகவல் திருட்டு குறித்து செவ்வாய்கிழமை சோனி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியது. மிக விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவதாகவும் உறுதியளித்துள்ளது. தகவல் திருட்டு எந்த திகதியில் நடந்துள்ளது என்ற விவரத்தை சோனி நிறுவனத்தால் உடனடியாக பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
தகவல் திருட்டு காரணமாக ப்ளே ஸ்டேஷன் இணையதளச் சேவை முடங்கியது. சோனியின் இசைச் சேவையும் பாதித்தது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
நன்றி: lankasri World