Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 18,581 முறை படிக்கப்பட்டுள்ளது!

காய்ச்சல்-ஒரு நோய் அல்ல

உடம்பு நெருப்பாய் கொதிக்கிறது. நாக்கு கசந்து எதுவும் சாப்பிடப்பிடிக்க வில்லை. அலுப்பு , அமைதியின்மை, உடல் வலி , உடல் பாரம், அடித்து போட்டது போல் உடம்பு துவண்டு விடும். இது தான் காய்ச்சலின் அடையாளம். ஒரு சராசரி மனிதனின் உடல் வெப்பநிலை 98.6°F (37°C). இது ஆளாளுக்கு,நேரத்திற்கு நேரம் சிறிது மாறுபடலாம். ஆனால் இது 100.5°F அல்லது அதற்கு மேலே போகும்போது அதைக் காய்ச்சல் , ஜுரம் என்கிறோம். இதனை அனுபவப்படாதவர்களே இல்லை என்னுமளவு சர்வ . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,852 முறை படிக்கப்பட்டுள்ளது!

காபி போதை மருந்து மாதிரிதான்?

மெட்ராஸ் ஃபில்டர் காபி, கும்பகோணம் டிகிரி காபி, டிக்காக்ஷன் காபி, வடிகட்டாத எஸ்ப்ரஸ்ஸோ காபி, இன்ஸ்டன்ட் காபி, மைசூர் மங்களூர் காபி, பிளாட்பாரக் காபி என்று காபிகள் பல ரகம்.

இந்தக் காபியைக் கண்டுபிடித்தது நோபல் விஞ்ஞானிகள் அல்ல. காபி நிறத்தில் ஓர் இடையர். முன்னொரு காலத்தில் அபிசீனியா நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கால்தி என்பவர். அவர் மேய்த்துச் சென்ற ஆட்டு மந்தை காட்டில் எதையோ தின்றுவிட்டு அதிக உற்சாகத்துடன் துள்ளி ஓடி ஆடி நடந்தன. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,410 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆபரேஷன் இன்றி சிறுநீரகக்கற்கள்

ஆபரேஷன் இல்லாமல் சிறுநீரகக் கற்களை அகற்றும் முறை

ஆபரேஷன் செய்யாமல் நவீன இயந்திரத்தின் மூலம் சிறுநீரகக் கற்களை அகற்ற முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

மதுரை விநாயகா லேசர் ஆஸ்பத்திரியின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.ராஜேந்திரன், சிறுநீரகத்துறை நிபுணர் டாக்டர் கோபாலன் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கற்கள் உருவாவது எப்படி?

ஒருவருக்கு சிறுநீரகத்தை ஒட்டிய இடுப்பு பகுதியில் தொடர்ந்து தாங்க முடியாத அளவு வலியிருந்தால் அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,112 முறை படிக்கப்பட்டுள்ளது!

உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன?

உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா?

முன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம். ஒரு கட்டத்தில் கிணறுகள் குறைந்து அடிபம்புகள் வந்தன. அதற்கடுத்து ஜெட்மோட்டார்கள், சப்மர்சிபிள் என்று பூமியின் ஆழத்தில் கிடக்கும் மோட்டார் கொண்ட ஆழ்துளை குழாய் என்று படிப்படியாக உருமாறின. இந்த மோட்டார்களில் எல்லாம் இல்லாத ஒரு சிறப்பம்சம் கிணற்றுக்கு உண்டு.

அது, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 79,179 முறை படிக்கப்பட்டுள்ளது!

எடை குறைய எளிய வழிகள்

அதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தண்ணீர் வைத்தியம்:

தண்ணீர் அதிகம் குடிப்பதன் மூலமும் எடையினைக் குறைக்க இயலும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கீழ்க்கண்ட முறையில் நீர் அருந்துவதின் மூலம் எப்படி எடையை இழக்கலாம் என நோக்குவோம். தண்ணீர் அதிகம் அருந்துவதன் மூலம் எடை குறைய கீழ்க்கண்ட வழிகளைப் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,089 முறை படிக்கப்பட்டுள்ளது!

பேரீச்சையின் பயன்கள்

இரத்த விருத்திக்கு பேரீச்சை

இயற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.

இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,719 முறை படிக்கப்பட்டுள்ளது!

இருமல் மருந்துக்கு அடிமையான பார்மஸிக்காரர்

மத்திய கிழக்கு நாடுகளில் மது அருந்துவது பொதுவாகவே விருப்பத்துக்குரிய ஒன்றல்ல. பல நாடுகள் மது பாவனைக்குத் தடை விதித்துள்ளன. அதே சமயம் வேறு சில நாடுகளில் அனுமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் குடிப் பிரியர்கள் பல வழிகளைக் கையாண்டு தமக்கு வேண்டிய போதையை பெற்றுக் கொள்கிறார்கள். இதன் பொருட்டு ஆபத்தான வழிகளையும் இவர்கள் பின்பற்றத் தவறுவதில்லை.

மனம் போதைக்கு அடிமையானதும் அதை எப்படியாவது பெற்றுக்கொள்ள உடலைத் தூண்டும். விளையாட்டாக ஆரம்பிக்கும் குடிப் பழக்கம் அல்லது போதைப் பொருள் பாவனை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,562 முறை படிக்கப்பட்டுள்ளது!

கட்டுப்பாடற்ற தூக்கம் உடல் பருமனாவதற்கு வழிவகுக்கும் !

பொழுபோக்குகள் பல பல. அதில் ஒன்று தூங்குவது. நிறைய பேர் கேப் கிடைச்சா தூங்கி விடுவர். பள்ளி நேரத்தில் தூக்கம் தூக்கம், தூங்கி கொண்டே இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று பல பேர் ஆசைப்படுவர்.

தூக்கம் வரவில்லையே என புலம்புகிறவர்கள் ஒருபுறம் இருக்க, ஒரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கு மேல் தூங்குபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். நீண்ட நேரம் தூங்குவதால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் வருவதுடன் நம் வாழ்நாளில் 17 சதவீதம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,732 முறை படிக்கப்பட்டுள்ளது!

காலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்!

காலை உணவை, தவிர்க்க கூடாது. இன்றைய அவசர உலகத்தில், பெரும்பாலானவர்கள், காலை உணவை ஒழுங்காக சாப்பிடாமல், தவிர்த்து விடுகின்றனர் என்பது தான் உண்மை.

இதற்கு நேரமின்மையே காரணமாக பலரும் தெரிவிக்கின்றனர். இரவு சாப்பிட்ட பின், 6 முதல் 10 மணி நேரங்கள் வரை, எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு பின், காலையில் உணவு சாப்பிடுகிறோம்.

எனவே, காலையில் நாம் சாப்பிடும் உணவு தான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்கு தேவையான சக்தியை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,670 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

by: Ravoof Rahman

நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இரண்டு நாட்கள் முன், சக பதிவர் ” தோழி” என்பவரின் பதிவு படித்தேன்.

அதை படித்ததிலிருந்து, நான் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கல் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,446 முறை படிக்கப்பட்டுள்ளது!

கொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் !

முஜீப்

தனியார் நிறுவனங்களில், கொள்ளை லாபத்துடன் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான துறை மருத்துவத்துறை. உலக வர்த்தக ஒப்பந்தம் என்கிற போர்வையில் அமெரிக்கா மாதிரியான வளர்ந்த நாடுகளில் விற்கப்படும் விலைகளுக்கு ஈடாக நம் நாட்டிலும் விற்று வருகிறார்கள். நடுத்தர குடும்பத்தினரே வாங்கிட தடுமாறும் நிலையில்,கடைநிலை மக்களின் நிலைமையை கேட்கவே வேண்டாம். இந்த லட்சணத்தில் இந்த மருந்து கம்பெனிகள் நடத்தும் ஆராய்ச்சிகளுக்கு நம் மக்களை சோதனை எலிகளாக பயன்படுத்தும் கொடுமையும் நடந்து . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 40,700 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிறுநீரக செயலிழப்பை கண்டறிவது எப்படி?

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி

இடுப்புக்குச் சற்று மேலே முதுகுத் தண்டுக்கு இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மூத்திரக் காய்கள் உள்ளன. இது முந்திரிக் கொட்டையைப் போன்ற வடிவமும், ஏறக்குறைய நான்கு அங்குல நீளமும், இரண்டு அங்குல அகலமும், ஒரு அங்குலப் பருமனும் கொண்டதாக இருக்கும். இதன் உட்பகுதி முழுவதும் மயிரிழை போன்ற மிகச்சிறிய இரத்தக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்பட்டு வலை போலக் காணப்படும். இதை நம் உடலின் வடிகால் . . . → தொடர்ந்து படிக்க..