Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2025
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,179 முறை படிக்கப்பட்டுள்ளது!

இஸ்லாமிய வீடு! AV

நாம் அணைவர்களும் நிம்மதியாக, சந்தோசமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அந்த நிம்மதியைப் பெறும் வழி தெரியாது அங்கும் இங்கும்… யார் யாரிடமோ சென்று தேடுகிறோம். நாம் பெரும்பகுதியாக தங்கும் நமது வீட்டில் நிம்மதியை – அமைதியைக் கொண்டு வந்தால் நம் வாழ்க்கையில் அமைதி நிலவும் என்ற உண்மையை சகோதரர் மெளலவி அலி அக்பர் உமரீ அவர்கள் விளக்குகிறார்கள். அல்லாஹ்வின் பாதுகாப்பை நமது எதிரியாகிய ஷைத்தானிடமிருந்து எப்படி பெறுவது, நமது முழுவாழ்க்கையையும் எப்படி நபிகளார் ஸல் அவர்கள் காட்டிய வழியின்படி அமைப்பது போன்றவற்றை அழகான முறையில் சகோதரர் விளக்குகிறார்கள். வாசகர்கள் இந்த உரையை ஆடியோ – வீடியோ மூலம் கண்டு பயன்பெற வேண்டுகிறோம். நீங்கள் டெளன்லோடு செய்தும் பயன்படுத்தலாம். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,002 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஊழலுக்கு எதிரான முதல் அடி – அண்ணா ஹசாரே

கடந்த ஆண்டு மெகா ஊழல்கள் ஆண்டு என்று சொல்லும் அளவிற்கு இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு, 2ஜி ஸ்பெக்ட்ரம், CVC கமிஷனராக தாமஸ் நியமணம் என ஊழல் கொடி கட்டி பறந்தது. இன்னும் அதற்குண்டான தீர்வுதான் எட்டப்படவில்லை. தமிழக தேர்தலிலும், உலக கோப்பை கிரிக்கெட் வெற்றியிலும் மூழ்கி திளைத்துவரும் பதிவுலகம், இவரை பற்றி எழுத்தாது ஆச்சரியமே.

ஊழலுக்கு எதிரான ஒரு வலுவான சட்ட வரையறையை கொண்டு வரவும், மத்தியில் லோக்பால் மற்றும் மாநிலத்தில் லோகாயுக்த்தா அமைப்பை நிறுவவும் 73 . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,347 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆர்.டி.ஓ., Dr. சங்கீதாவுக்கு குவிகிறது பாராட்டு

திருச்சியில், அமைச்சர் நேரு போட்டியிடும் மேற்கு தொகுதியில், அதிரடியாக செயல்பட்டு, பணப் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வினியோகத்தை கட்டுப்படுத்தியதோடு, நேற்று முன்தினம், தனியாளாக சென்று, ஆம்னி பஸ்சில் பதுக்கி வைத்திருந்த, 5.11 கோடி ரூபாயை பறிமுதல் செய்த ஆர்.டி.ஓ., சங்கீதாவுக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருச்சி ஆம்னி பஸ்சில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்ததன் மூலம், “தேர்தல் நேரத்தில் முறைகேடாக . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,757 முறை படிக்கப்பட்டுள்ளது!

நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன?

நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன.

ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்கிறோம்.

எதிர்ப்பு சக்தி வகைகள்:நமது உடலில், இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity), . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,426 முறை படிக்கப்பட்டுள்ளது!

லாபம் தரும் புதினா விவசாயம்

புதினாச் செடிகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட தாவரம் என்று கூறப்படுகிறது.

தமிழகச் சமையலில் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை இல்லாமல் பெரும்பாலான உணவு வகைகள் இல்லை. உடல் ஆரோக்கியத்துக்குச் சிறந்த புதினா இலைகள், நிறைய மருத்துவ குணங்களை கொண்டது. வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரிமானம் இல்லாமை போன்ற உடல் கோளாறுகளுக்குச் சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.புதினாவை தொடர்ந்து சாப்பிட்டால், ரத்தம் சுத்தமாகும்.தொண்டைக் கரகரப்பைப் போக்கும் பல்வேறு மருந்துகள், மிட்டாய்கள் போன்றவற்றில் புதினா எண்ணெய் (மின்ட்) பிரதான . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,310 முறை படிக்கப்பட்டுள்ளது!

கடமைக்கு எடுத்துக்காட்டு – ஆர்.டி.ஓ., சங்கீதா

போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு போட்டியிடும், திருச்சி மேற்கு தொகுதிக்கு ஓட்டுப் போடுபவர்களுக்கு வீடு, வீடாக பணம் வினியோகம் செய்ய அமைச்சர் நேருவுக்கு நெருக்கமான உதயகுமார் என்பவருக்கு சொந்தமான, “எம்.ஜே.டி., ஆம்னி’ பஸ்சின் மேற்கூரையில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு பணம் கடத்தப்படுவதாக நேற்று முன்தினம் நள்ளிரவில், திருச்சி ஆர்.டி.ஓ.,வும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதாவுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.

ஆர்.டி.ஓ., சங்கீதா. நள்ளிரவு 2.30 மணி என்றும் பாராமல், அவரது டிரைவர் துரை மற்றும் உதவியாளர் ஒருவர் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 69,849 முறை படிக்கப்பட்டுள்ளது!

அட்டகாசமான சுவையில் 30 மசாலா குருமா – 1

தினமும் இதே சாம்பாரும் சட்னியும்தானா? வாய்க்கு ருசியா ஒரு குருமா, ஒரு கிரேவி… ஒண்ணு கிடையாது நம்ம வீட்டுல!’’ என்று உங்கள் இல்லத்தரசரோ, அருமைப் பிள்ளையோ அலுத்துக்கொள்ள..

‘‘நான் எங்கே போவேன் மசாலாவுக்கும், கிரேவிக்கும்! இது என்ன ஹோட்டலா?’’ என்று அங்கலாய்க்கிறீர்களா?

தூக்கியெறியுங்கள், உங்கள் கவலையை! ஹோட்டல் சுவையைவிடவும் பிரமாதமான கைப்பக்குவத்தில் எல்லா சைடு டிஷ்களையும் நீங்களே வீட்டில் தயாரிக்கலாம்.

இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி, ப்ரெட், பூரி, நாண், பரோட்டா, சாதம் என்று அத்தனைக்கும் தொட்டுக்கொள்ள . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,598 முறை படிக்கப்பட்டுள்ளது!

கிளைடர் விமான பயிற்சியாளர் அன்று ஓட்டல் சர்வர்!

சாதாரண ஓர் உணவகத் தொழிலாளி … ஆகாயத்தில் பறக்கிறார். அதுவும் தானே வடிவமைத்த கிளைடரில் 600 அடி உயரத்தில் பறந்து சாகசத்தில் ஈடுபடுகிறார்.

ஆச்சரியமான விஷயம்தானே?

கோவை, சிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த பாபுவை இங்குள்ளவர்கள் பாபு என்று அழைப்பதில்லை.

கிளைடர் பாபு என்றே அழைக்கிறார்கள். இந்த 38 வயது இளைஞரின் பத்துக்குப் பத்து அறையில் அவர் படுப்பதற்குப் பாய்கூட இல்லை. ஆனாலும், அறை முழுவதும் நிறைந்திருக்கின்றன விமான தொழில் நுட்பம் தொடர்பான புத்தகங்கள், அவரே உருவாக்கிய கிளைடர்கள், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,799 முறை படிக்கப்பட்டுள்ளது!

வகுப்பறைக்கு செல்லும் மருத்துவர்கள்

இந்தியாவில் மருத்துவர்களாக பணியாற்றும் அனைவரும், மீண்டும் வகுப்பறைக்குச் சென்று கல்வி பயில வேண்டும் என்று இந்திய மருத்துவக் கழகம் புதிய விதிமுறையை உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் இந்த விதிமுறையை கட்டாயமாக்கவும் இந்திய மருத்துவக் கழகம் திட்டமிட்டுள்ளது. மருத்துவர்கள், தங்கள் துறையில் ஏற்படும் முன்னேற்றத்தை அவ்வப்போது அறிந்து கொள்வதற்காக மருத்துவக் கல்வியை தொடர்வது (கன்டின்யூவிங் மெடிக்கல் எஜுகேஷன்) என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது.

அதன்படி, மருத்துவக் கல்வியை தொடரும் திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு ஒரு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,904 முறை படிக்கப்பட்டுள்ளது!

மரத்துப் போனதா மனிதாபிமானம்?

“மனிதாபிமானம்’ மரத்துப் போனதால், சுட்டெரிக்கும் வெயிலில், ரத்தக் காயத்துடன் நான்கு மணி நேரம் கிடந்தார், மருத்துவமனை ஊழியர் ஒருவர்.

கோவை அரசு மருத்துவமனை வளாகம், பிரேத பரிசோதனை அறைக்கு வெளியே 35 வயது மதிக்கத்தக்க ஆண் ரத்தக் காயங்களுடன் மயங்கி கிடந்தார். மிக அருகில் வெளிப்புற நோயாளிகளை பரிசோதிக்கும் டாக்டர் அறை, புறக்காவல் நிலையம் உள்ளன. காயத்துடன் கிடந்தவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.

வெயிலில் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக கிடந்தவரை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,298 முறை படிக்கப்பட்டுள்ளது!

காட்டாமணக்கு எண்ணெயில் விமானம் இயக்கி சாதனை!

பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆய்வு நடந்து வரும் நிலையில் A320 ரக ஏர்-பஸ் விமானம் ஒன்றை விமான எரிபொருளுடன் 30% காட்டாமணக்கு எண்ணெய் கலந்து ஓட்டி புதிய சாதனையை மெக்சிகோ நடத்திக் காண்பித்துள்ளது. கடந்த சனிக்கிழமை (2-4-2011) இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

டீசலுடன் தாவர எண்ணெயைக் கலந்து ரயில் என்ஜின்களில் இயக்கலாம் என்பதை இந்தியா போன்ற நாடுகள் நிரூபித்துள்ளன. இதற்காக இந்தியாவில் ரயில்பாதை ஓரங்களில் காட்டாமணக்குச் செடிகள் நட்டு பராமரிக்கப்பட்டன. என்ன . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,970 முறை படிக்கப்பட்டுள்ளது!

மதுவிலக்கே மந்திரமாகட்டும்

மதுவை விலக்குகாலம் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்தினாலும் மனித குலத்துக்கு நன்மையை உடனடியாக அது செய்யாதபோது நீண்ட காலத்துக்கான அடிப்படையிலும் அது நன்மை தருவதில்லை. நன்மையைத் தராவிடினும் தீமையைத் தராமலாவது இருக்கலாம். குறிப்பாக பொழுதுபோகுக்கான பழக்கங்கள் ஒரு தலைமுறையை அழிப்பதோடு நான்கைந்து தலைமுறையையும் பாழ்படுத்தாமல் இருப்பதில்லை. பரம்பரையாய் உயிர்க் கொல்லி நோயாய் இருப்பது மதுப்பழக்கம்.

மது என்பது எந்த வகையாக இருந்தாலும் அது ஏதோ ஒரு வகையில் தீமை பயப்பதுதான். இன்றைக்குக் ‘கள்’ இறக்குவதைச் சட்டப்படி குற்றமற்றதாக அறிவிக்க . . . → தொடர்ந்து படிக்க..