|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,843 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st December, 2009 ராஜகிரி தந்த நன்முத்து – ‘ஜமால்’ மெருகேற்றிச் செதுக்கிய மாண்பாளர், சமுதாய நற்பணியாளர் அப்துல் மாலிக் அவர்கள் நமையெல்லாம் விட்டுப் பிரிந்து, படைத்தவனின் அழைப்பில் பறந்துவிட்டார் என்ற செய்தி தந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாத நிலையிலேயே இந்த வரிகளைப் பதிவு செய்கிறோம்.
மாலிக் ஓர் அற்புதமான மனிதர் -விலைமதிக்க முடியாத மாணிக்கம் என்பதை அவருடன் பழகியவர்கள்-பயன்பெற்றவர்கள் தங்கள் உள்ளத்தில் மட்டுமல்ல -உடல்களின் ஒவ்வோர் அணுவிலும் சுமந்துகொண்டே சுவாசிப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு வழியே இல்லை!
அவரது ஆர்ப்பாட்டமில்லாத அணுகுமுறை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,817 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st November, 2009 இந்தியாவின் பிரதமராவதற்கு மிகவும் தகுதி வாய்ந்த மனிதர் நரேந்திர மோடி தான் என்று பாஜகவில் ஒரு பிரிவினர் குரல் கொடுத்த மறுநிமிடம் பாஜகவின் வெற்றிவாய்ப்பில் ஓட்டை விழுந்தது. தேர்தலில் அக்கட்சி தோல்வியைத் தழுவியது மட்டுமல்லாமல் “உன்னால நான் கெட்டேன்; என்னால நீ கெட்டே” என்று ஒருவர் மீது ஒருவர் ஏசிக்கொள்ளும் அசிங்கம் அரங்கேறி வருகிறது.
தேர்தல் தோல்வியை ஆய்வு செய்த உயர்மட்டக் குழு மோடியின் கோரமுகத்தையும், குட்டி மோடியாகிவிடக் கொக்கரித்த வருணையும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,495 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th October, 2009 சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 4
யாரோ தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பிரக்ஞையே இல்லாமல் மேலே மரத்தில் எதையோ உற்று நோக்கிக் கொண்டிருந்தான். பின்னர் கையில் வைத்திருந்த ஆயுதத்தை மரக்கிளைக்கு நேராக உயர்த்திப் பிடித்தான்.
கண் இமைக்கும் நேரத்தில் புலிபோல் பாய்ந்தார் தேவர். அவனுடைய கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, “யார் நீ? என்ன செய்யப் போகிறாய்” என்று அதட்டினார்.
அவன் அலட்சியமாக சிரித்துக் கொண்டே கையில் உள்ள . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,095 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th October, 2009 இறுதி வார்த்தைகள்…
1920 – இல் ஈரோட்டில் நடைபெற்ற மஜ்லிசுல் உலமாவின் மூன்றாவது மாநாட்டிற்கு வருகை தந்த மௌலானா முகம்மது அலி – க்கு வரவேற்பு அளித்த ஈ.வே.ரா பெரியார், அவ்வரவேற்புரையின் போது :
காந்திஜிக்குள் இந்த தேசம் இருக்கிறது. ஆனால் அந்த காந்தியோ மௌலானா முகம்மது அலியின் ஜேப்பிற்குள் இருக்கிறார்!
என்றார். அந்த அளவிற்கு தனது தேசிய நடவடிக்கைகளால் மிகப்பெரும் தாக்கத்தை இந்த மண்ணில் ஏற்படுத்தியவர் மௌலானா முகம்மது அலி.
1930 – இல் லண்டனில் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,501 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th October, 2009 சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 3
வணிகக்குழு
கதிரவன் மறைந்து இரண்டரை நாழிகையிருக்கும். சுக்கிலபட்சத்து சந்திரனின் மங்கிய நிலவொளி, தெற்கத்திக் காற்றின் சுகமான வருடல் மனதைப் புளகாங்கிதமடையச் செய்தது.
திட்டுப்பிரதேசத்திற்குத் தென்புறம் தூரத்தில் பறவைகள் சிறகடித்து இடம் பெயரும் சப்தம், நரிகளின் ஊளை அபஸ்வரமாக ஒலித்தது. எங்கோ ஓர் ஊமைக்கோட்டானின் குரல் மரணஓலம் போல் பயங்கரமாக ஒலித்தது.
சற்று நேரங்கழித்து காய்ந்த இலை சருகுகளின், “சர சர”வென்ற ஓசை!
புரிந்து . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,201 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st October, 2009 2008-ம் ஆண்டு நோன்புப் பெருநாளுக்கு முந்தைய தினம் மாலேகானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 6 பேர் பலியானார் கள். 150 பேர் காயம் அடைந்தனர். இந்த தீவிரவாதச் செயலின் பின்னணியில் சங்பரிவார் சதிகள் இருந்ததாக ஹேமந்த் கார்கரேயின் தலைமையி லான மகாராஷ்டிர மாநில தீவிர வாதத் தடுப்புப்படை கண்டுபிடித்தது. ராணுவத்தில் பணியாற்றும் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித், பெண் சாமியார் பிரக்யாசிங் உட்பட 11 பேர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கார்கரே . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,726 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th September, 2009 சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 2
தென் நாட்டின் சூழ்நிலை
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை பாண்டிய நாடு தாயாதிச்சண்டையாலும், ஆட்சிப் போட்டியாலும் தனது தனித்தன்மையை இழந்து சோழ அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.
வாரிசுப் போட்டியில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் தங்களுக்கு ஆதரவாக வெவ்வேறு அரசுகளிடம் உதவி கோரினர். விளைவு? சேரநாட்டுப்படை, சோழர்படை, கொங்கு நாட்டுப்படை, இலங்கைப்படை, இத்தனையும் போதாதென்று பிளவுபட்டு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,792 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th September, 2009 கீழ்க்கோடி இந்தியரில் ஆயிரக்கணககான பேர்கள் தங்கள் சொத்துக்களை எல்லாம் இந்திய தேசிய ராணுவத்திற்குக் கொடுத்து விட்டு, கையில் தம்படிகூட இல்லாமல் ராணுவத்தில் குடும்ப சகிதமாகச் சேர்ந்து, தாய் நாட்டுக்காகப் பக்கிரிகளாக ஆனதை என் கண்களால் நானே பார்த்திருக்கிறேன்.* – INA கேப்டன் ஷா
நவாஸ்கான். ஸேவக் கி ஹிந்த்
1943 ஜுலை 2 – ஆம் தேதி சிங்கப்பூரில் ‘ஆஸாத் ஹிந்த் சர்க்கார்’ (Azad Hind Government) என்ற இந்திய தேசிய தற்காலச் சுதந்திர அரசை நிறுவிய . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,253 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th September, 2009 நாட்டின் எல்லா திசைகளிலுமிருந்தும் மக்களின் அமோக ஆதரவுடன் காங்கிரஸ் தலைமை அரசு அமைந்துவிட்டது. திரு மன்மோகன் சிங் வரலாற்றுப் பூர்வமாக இரண்டாம் முறையாகப் பிரதமராகியிருக்கிறார்.
அத்வானி அன் கோ சொன்னது போல ‘பலகீனமான’ பிரதமராக அல்ல; அவர்களை மிகவும் பலகீனப் படுத்திவிட்ட ‘பலமிக்க’ பிரதமராக -கம்பீரத்துடனும்- நிமிர்ந்து நிற்பவராக நிர்வாகப் பொபேற்றிருக்கிறார்.
மந்திரிசபை அமைப்பில் அவர் சோனியாவுடன் இணைந்து எடுத்த முடிவுகள் மாறியிருக்கிற அரசியல் சூழ்நிலையின் யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. ‘கூட்டணிக் கட்சிகளின் உரிமைக்குரலுக்கு மதிப்பு;
அதே . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,551 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd September, 2009 நம் மீது இரக்கமுள்ள அல்லாஹ் நமது இம்மை வெற்றிக்கு சம்பாதித்துக் கொள்வதற்காக இன்னொரு ரமலானைத் தந்து இன்னருள் பாலித்திருக்கிறான்!
வருடம் முழுக்க அழுக்கேறியிருந்த கல்பை சுத்தி செய்துகொள்ளும் வாய்ப்பாக்கித் தந்திருக்கிறான்!
சில வருடங்களாக நாம் ஒவ்வொரு ரமலானிலும் ஒரு சங்கல்பம் செய்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறோம்!
அதனை ஒட்டி இதோ நம் பார்வைக்கு ஓர் ஆலோசனை!
நமது குடும்பவாழ்வியல் சமீப காலமாக பலவிதமான நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதை மறுப்பதற்கில்லை. பொருளாதார மந்தம் ஒருவகை நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறதென்றால், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,451 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st September, 2009 நடந்து முடிந்த நாட்டின் பதினைந்தாம் பொதுத்தேர்தல் அனைத்து ஊடகக் கணிப்புகளையும் தகர்த்து விட்டு ஒரு புதிய ராஜபாட்டைக்குச் சாளரம் திறந்திருக்கிறது! மதமாச்சரிய சக்திகள் வீறுகொண்டெழும் என்று எந்த முன்னுரைப்பும் அறியத்தராவிட்டாலும், மாறிய கூட்டணிக் காட்சிகளும், கொள்கையற்ற கோஷ்டி சேரல்களும் வாக்குச் சிதறலுக்கு வழியமைத்து உறுதியான அரசமைவுக்கு இடைஞ்சலாகிவிடுமோ என்ற அச்சம் இருந்தது. இடதுசாரிகள் திடீரென ஞானோதயம் வந்ததுபோல திசைமாறிப் பயணித்தது வேறு நாட்டின் மீது அக்கறை கொண்டவர்களை அலைக்கழித்தது. அதிலும் குறிப்பாக காங்கிரஸ் வடக்கே எந்த முன்னேற்றத்தையும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,623 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th August, 2009 சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 1
* சீர்மிகு சித்தார்கோட்டை. வந்தாரை வாழ வைக்கும் சித்தார்கோட்டை * சித்தார்கோட்டை என்று சொன்னாலே உள்ளத்தில் உவகை பொங்கும்.
சின்ன ஊராகயிருந்தாலும் சுற்றுப்புற ஊர்களில் இதன் மதிப்பு அதிகம். குறிப்பாக மலேசியாவில் ‘சபாக்பெர்னம்’ என்ற ஊரையும் பர்மாவில் ‘உவாக்கேமா’ என்ற ஊரையும் ‘சின்ன சித்தார்கோட்டை’ என்று குறிப்பிடுவது வழக்கம். அந்த இரு ஊர்களிலும் இவ்வூர் மக்கள் தொழில் நிமித்தமாக அதிக அளவில் குடியேறியுள்ளார்கள்.
. . . → தொடர்ந்து படிக்க..
|
|