|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,421 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th April, 2011 சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 13
குழப்பமும் தெளிவும்
வடபகுதியில் பிரிவினையின் போது இருந்த நிலையில் எவ்வித மாறுதலும் ஏற்படவில்லை. ஆனால் தென்பகுதியின் நிலைமை வேகமாக மாறிக்கொண்டே வந்தது.
ஒரு விஷயத்தை இப்போது புரிந்து கொள்ள வேண்டும். தெற்குவாடி என்று நாம் இதில் குறிப்பிடும் இடம் தற்போது பள்ளிவாசலுக்குத் தென்புறம் உள்ள ஒரு சிறிய தெரு மட்டுமில்லை.
மேற்குத் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,422 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th April, 2011 சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 12
கூட்டம் கலைந்தது. நாலைந்து பேர் – ஏழெட்டுப் பேர் – ஆங்காங்கு தனித்தனியே நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
கண்டதையெல்லாம் வணங்காமல் ஒரே கடவுளை வணங்குங்கள் என்று கூறுகிறார். இதில் ஒன்றும் தப்பில்லையே!
அதிருக்கட்டும் முதலாளி – தொழிலாளி, ஏழை – பணக்காரன், மேல்ஸாதி – கீழ்ஜாதி என்ற பாகுபாடு இஸ்லாத்தில் இல்லை. எல்லோரும் சமம் என்று கூறியதைக் கேட்டீர்களா?
அட நீங்க ஒன்னு! . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,111 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th March, 2011 சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 11
மன்னனை இழந்த சோகம் இன்னும் மக்களை விட்டுப் போகவில்லை. நடைப்பிணம் போல் களையிழந்து கிடந்த இயல்பு வாழ்கை மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பியது.
விஜயனின் மனைவி மக்கள் தலை நகருக்குச் சென்று விட்டார்கள். கோட்டை பராமரிப்பின்றி வெறிச்சோடிக் கிடந்தது.
அதன் அருகே யாரும் போகவில்லை. போனால் பழைய நினைவு வரும் என்பதால்.
கால கட்டத்தில் பழைய சம்பவங்களும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,845 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th March, 2011 சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 10
ஆலோசனை மண்டபத்தில் அமர்ந்திருந்தான் விஜயன். பக்கத்தில் சில அதிகாரிகள்.
ஏதோ முக்கியமான விஷயம் குறித்து கலந்தாலோசனை நடந்து கொண்டிருந்தது.
வீரன் ஒருவன் வந்து அவை முன் நின்றான்.
‘என்ன செய்தி’ என்று கேட்பது போல் விஜயன் அவனை ஏறிட்டான்.
“மன்னரிடமிருந்து ஓலை வந்திருக்கிறது. தூதர் வெளியே காத்துக் கொண்டிருக்கிறார்.” என்று அடக்கமாகக் கூறினான் வீரன்.
“போய் உடனே அழைத்து வா!”
சற்று நேரத்திற்குள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,288 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 16th March, 2011 சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 9
விஜயன் கைவசத்தில் இருந்த தங்கக்காசுகள் நிரம்பிய பை, வேலையைத் துரிதமாக முடிக்கப் பேருதவியாயிருந்தது.
ஒவ்வொரு கட்டமாக நன்கு காய விட்டு வேலை செய்ய வேண்டியிருந்ததால் மொத்த வேலையும் முடிய நாலைந்து மாதங்கள் ஆயிற்று.
நான்கு புறமும் பலம்வாய்ந்த சுற்றுச் சுவர்! உள்புறம் வீரர்களுக்கான விடுதி. குதிரைலாயம், நடு நாயகமாக விஜயன் வசிப்பதற்கான அரண்மனை. முகப்பில் உறுதியான இரட்டைக் கதவு.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,087 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th March, 2011 சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 8
முதியவர் பேசாமல் நின்றார். தலைவன் அவர் பயத்தைப் போக்கும் விதத்தில் அவரைத் தட்டிக் கொடுத்துப் பயப்படாமல் சொல்லுங்கள் பெரியவரே! இனிமேல் யாரும் உங்களைத் தொட மாட்டார்க்ள்’ என்று தலைவன் அவரை ஊக்கப்படுத்தினான்.
முதியவரின் பார்வை மீண்டும் ஒவ்வொருவர் மீதும் பதிந்து இறுதியாக அப்பெண்ணின் மீதும் படிந்தது.
வெட்கத்தாலும், நாணத்தாலும் செக்கச் செவேலென்று சிவந்திருந்த அவள் முகத்தைப் பார்த்ததும் திடீரெனப் பார்வையை பின்னுக்கிழுத்து மீண்டும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,726 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd March, 2011 சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 8
மனதை மயக்கும் மந்த மாருதம் வீசும் இளவேனிற்காலம். பொழுது புலர்வதற்கு இரண்டு நாழிகை இருக்கும்.
கிருஷ்ணபட்சத்துத் தேய்பிறை, மங்கலான வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது.
ஆதவனின் வருகையை தெரிவிப்பதுபோல் கீழ்வானத்தில் செம்மை படர்ந்தது.
இரவு முழுவதும் தங்கள் பேடையுடன் கீச்சுக் குரலில் காதல் மொழி பேசிக் கும்மாளம் அடித்துக்கொண்டிருருந்த பட்சி ஜாலங்கள் கூடுகளில் முடங்கின. ஊர் மொத்தமும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. எங்கும் அமைதி………
ஊரா! . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,279 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd February, 2011 சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 7
‘சசிவர்ணத்தேவரையும் கடம்பனையும் பொட்டல் வெளியில் திண்டாட விட்டு விட்டு இந்த சுற்றுலா அவசியம் தானா?’ என்று வாசகர்கள் கேட்கலாம்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது வாசகர்களின் கேள்வியில் நியாயம் இருப்பது தெளிவாகவே தெரிகிறது.
ஆனால் இந்த அத்தியாயத்தைப் படித்து முடித்த பின்னர் தான் இந்த சுற்றுலா எத்துணை முக்கியமானது என்பது புரியும்.
இந்த கதை ஆரம்பமாகும் 11ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து 12ஆம் நூற்றாண்டின் இறுதி . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,575 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 16th February, 2011 சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 6
சீனத்துப்பட்டு, பீங்கான், சாவகத்தீவின் வாசனைப்பொருட்கள், சிங்களத்தீவின் தேயிலை, பாக்கு மற்றும் நறுமணப்பொருட்கள்!
கண்ணைக்கவரும் வண்ண வண்ணக்கைவினைப்பொருட்கள்! முற்றிலும் அவர் எதிர்பார்த்திராத அபூர்வப்பொருட்கள்.
இவ்வளவு பொருட்களையும் எதற்காக இந்தக்குடிசைக்குள் வைத்திருக்கறீர்கள்? என்று தேவரைப்பார்த்துக்கேட்டார்.
‘விற்பதற்கு’ ஒரே வார்த்தையில் பதில் வந்தது.
‘நானே வாங்கிக்கொள்கிறேன்’.
சரக்குப்பொதிகள் அனைத்தும் செட்டியாரின் சரக்கு உட்பட பிரித்துப்பார்த்து அரபு வியாபாரி வாங்கிக்கொண்டார். இந்த பேரத்தில் தேவர் வகைக்கு நல்ல இலாபம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,902 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th February, 2011 சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 5
அழகன்குளம் சென்ற குழு கையிலிருப்புச் சரக்குகளை விற்று விட்டு, புதிய சரக்குகள் கொள்முதல் செய்து ஆரவாரத்துடன் வந்து சேர்ந்தது.
தேவருக்கும் கடம்பனுக்குமாகச் சேர்த்து வாங்கிய சரக்குகளை முதலியார் விவரித்துக் கொண்டிருந்தார். சரக்கு அதிக அளவில் இருந்தது.
அதே சமயம் மேற்குத் திசையில் இருந்து வேகமாக ஓர் ஆள் வந்து சேர்ந்தான். அவன் வந்த வேகத்தில் மூச்சிரைத்தது.
அவன் யார்? எதற்காக வந்திருக்கிறான் என்பதைத் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,495 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th October, 2009 சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 4
யாரோ தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பிரக்ஞையே இல்லாமல் மேலே மரத்தில் எதையோ உற்று நோக்கிக் கொண்டிருந்தான். பின்னர் கையில் வைத்திருந்த ஆயுதத்தை மரக்கிளைக்கு நேராக உயர்த்திப் பிடித்தான்.
கண் இமைக்கும் நேரத்தில் புலிபோல் பாய்ந்தார் தேவர். அவனுடைய கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, “யார் நீ? என்ன செய்யப் போகிறாய்” என்று அதட்டினார்.
அவன் அலட்சியமாக சிரித்துக் கொண்டே கையில் உள்ள . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,501 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th October, 2009 சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 3
வணிகக்குழு
கதிரவன் மறைந்து இரண்டரை நாழிகையிருக்கும். சுக்கிலபட்சத்து சந்திரனின் மங்கிய நிலவொளி, தெற்கத்திக் காற்றின் சுகமான வருடல் மனதைப் புளகாங்கிதமடையச் செய்தது.
திட்டுப்பிரதேசத்திற்குத் தென்புறம் தூரத்தில் பறவைகள் சிறகடித்து இடம் பெயரும் சப்தம், நரிகளின் ஊளை அபஸ்வரமாக ஒலித்தது. எங்கோ ஓர் ஊமைக்கோட்டானின் குரல் மரணஓலம் போல் பயங்கரமாக ஒலித்தது.
சற்று நேரங்கழித்து காய்ந்த இலை சருகுகளின், “சர சர”வென்ற ஓசை!
புரிந்து . . . → தொடர்ந்து படிக்க..
|
|