Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2013
S M T W T F S
« Oct   Dec »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,866 முறை படிக்கப்பட்டுள்ளது!

அரேபிய குச்சி சிக்கன்

குச்சி மிட்டாய் கேள்ப்பட்டிருக்கிறோம்.. அதென்ன குச்சி சிக்கன்..? வாங்க பார்த்துடலாம்…
stick chicken-thangampalani
குழந்தைகளுக்கு குச்சி மிட்டாய் நிரம்பப் பிடிக்கும். ஏன் சில பெரியவர்கள் கூட இன்னும் குச்சி மிட்டாய் சாப்பிடுவதை விரும்புவார்கள்… சரி நேராக விஷயத்துக்கு வந்துடலாம்.. குச்சிமிட்டாய் குச்சி ஐஸ் இப்படி எல்லாம் கேள்விப்பட்ட எனக்கு குச்சி சிக்கன் அப்படின்னு படிச்சதுமே அதையே நம்மை சமையல் பக்கத்துலப் போட்டா எப்படி இருக்கும் நினைத்தேன்

.. போட்டுட்டேன்.. படிச்சுப் பாருங்க..பெண்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. ஏன்..சமையல் பிரியர்கள் அனைவருக்கும் பயன்படும் என்னும் நோக்கில் இப்பதிவு..

தேவையானவை:
எலும்பில்லாத சிக்கன் – 200 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
குடைமிளகாய் – ஒன்று
மிளகுப் பொடி – ஒரு ஸ்பூன்
கடுகுப் பொடி – ஒரு ஸ்பூன் (கடைகளில் கிடைக்கும்)
தயிர் – 50 மில்லி
உப்பு – தேவைக்கேற்ப
எலுமிச்சை சாறு – அரை மூடி
எண்ணெய் – வதக்கும் அளவிற்கு
நீளமான குச்சி (சாஸ்டிக்) – இரண்டு (கடைகளில் கிடைக்கும்)

செய்முறை:
stick_chickent_thangampalaniசிக்கன், வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை ஒரே அளவான சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இவற்றுடன், மேற்குறிப்பிட்ட அனைத்து பொடி வகைகள், உப்பு, தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி லேசாக காயவிட வேண்டும்.நீளமான குச்சியில் சிக்கன், வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை ஒன்றன் பின் ஒன்றாக செருகி, தோசைக்கல்லில் வேகவிட வேண்டும். சதுர துண்டுகளாக இருப்பதால், நான்கு பக்கமும் திருப்பி வேகவிட வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் வெந்தபின், தக்காளி கெட்ச் அப் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். சற்றே காரம் வேண்டுமென விரும்புபவர்கள், மிளகுப் பொடியை கூடுதலாக சேர்த்து கொள்ளலாம்.

சமையல் நேரம்: ஊற வைக்கும் நேரம் தவிர 25 நிமிடங்கள்.

நன்றி: தினமலர்

தொடர்புடைய ஆக்கங்கள்

  1. செட்டிநாடு பெப்பர் சிக்கன்