Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,380 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி!

ஐம்பத்தி ஏழாயிரம் கோடி ரூபாய் முதல் ஒன்றே முக்கால் கோடி ரூபாய் வரை மத்திய அரசுக் கருவூலத்துக்கு வரவேண்டிய பணத்தில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது…” என்று நாட்டின் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை கூறுகிறது.

ஊழல் என்பது சரித்திரத்தில் புதிய செய்தி அல்ல. அதனுடைய பரிமாணம் மாறும்போது சில சரித்திரத்தில் இடம்பெறும் தன்மையைப் பெறுகிறது. நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு அமைந்த அமைச்சரவை அமைச்சர்களின் மனதில் ஊழல் புரிந்து தமக்குப் பணம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,119 முறை படிக்கப்பட்டுள்ளது!

விஜய பாண்டியன்

சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 8

முதியவர் பேசாமல் நின்றார். தலைவன் அவர் பயத்தைப் போக்கும் விதத்தில் அவரைத் தட்டிக் கொடுத்துப் பயப்படாமல் சொல்லுங்கள் பெரியவரே! இனிமேல் யாரும் உங்களைத் தொட மாட்டார்க்ள்’ என்று தலைவன் அவரை ஊக்கப்படுத்தினான்.

முதியவரின் பார்வை மீண்டும் ஒவ்வொருவர் மீதும் பதிந்து இறுதியாக அப்பெண்ணின் மீதும் படிந்தது.

வெட்கத்தாலும், நாணத்தாலும் செக்கச் செவேலென்று சிவந்திருந்த அவள் முகத்தைப் பார்த்ததும் திடீரெனப் பார்வையை பின்னுக்கிழுத்து மீண்டும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,740 முறை படிக்கப்பட்டுள்ளது!

வெறுப்பு என்பது விஷமாகும் (Poison)!

சோதனைகள் சில சமயங்களில் தனித்து வருவதில்லை. ஒருவர் வாழ்விலேயே அவை கூட்டமாகவும், அடுக்கடுக்காகவும் தொடர்ந்து வந்து விடுகின்றன. அப்படி வருகையில் சிலர் உடைந்து போகிறார்கள், சிலர் தங்கள் சுற்றத்தின் பாசத்தையும், நட்பின் ஆழத்தையும் அளந்து பார்க்கிறார்கள், சிலர் புடம் போட்ட தங்கமாக ஜொலித்து எழுகிறார்கள். அப்படி ஜொலித்து எழுந்த ஒருவர் தான் பாலஸ்தீனிய டாக்டரான இஸ்ஸெல்டின் அப்யுலைஷ் (Izzeldin Abuelaish) என்பவர்.

திடீரென்று மனைவி நோய்வாய்ப்பட்டு இறக்கும் வரை அப்யுலைஷ் வாழ்க்கை அமைதியாகத் தான் போய்க் கொண்டிருந்தது. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,522 முறை படிக்கப்பட்டுள்ளது!

கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்

கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரித்தறிவது..?

ஆங்கிலத்தில் paradigm என்றொரு வார்த்தை உண்டு. அதற்கு தமிழில் அர்த்தம் சொல்வதென்றால் ‘ஒரு மனிதரைப் பற்றியோ, ஒரு பொருளைப் பற்றியோ, ஒரு சம்பவத்தைப் பற்றியோ நாம் நம் மனதிற்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் மனப்பிம்பம், அல்லது அதைப்பற்றிய நமது கண்ணோட்டம், கருத்து’ எனலாம். அவ்வாறு நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் கருத்து சரியானதாகத்தானிருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. கண்ணால் காண்பதும் பொய்.. காதால் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,433 முறை படிக்கப்பட்டுள்ளது!

கழுத்தை நெரிக்கும் வங்கிக் கடன் அட்டைகள்

எல்லா இடத்துக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு அலைய முடியாது. ஓர் அட்டையை கொண்டு சென்றால் நமக்குத் தேவையான பொருள்களை வீட்டுக்குக் கொண்டு வரலாம். இப்படி ஒரு சுலபமான வசதியை வங்கிகள் உருவாக்கிக் கொடுத்துள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு என்று வங்கிகள் பல்வேறு அட்டைகளை கொடுத்துள்ளன. இந்த அட்டைகள் ஒரு வகையில் வசதியாக இருந்தாலும் மற்றொரு வகையில் வாடிக்கையாளர்களுக்குத் தொந்தரவாக மாறி வருகின்றன.

இதுவரை போலீஸ் நிலையம், நீதிமன்றத்தை எட்டிக்கூட பார்க்காத நடுத்தர குடும்பத்தினர் பலர், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,688 முறை படிக்கப்பட்டுள்ளது!

பதவிக்கு மட்டும் ஆசை; பிரெசென்ட் ஆக மனசில்லை!

ஐந்து ஆண்டுகளில், சட்டசபைக்கு எம்.எல்.ஏ.,க்களின் வருகையை பொறுத்தவரை, விஜயகாந்த், என்.கே.கே.பி.ராஜா, ஜெயலலிதா ஆகியோர் மிகக் குறைந்த அளவில் கலந்து கொண்டுள்ளனர்.

சட்டசபை கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, நுழைவாயிலில் வருகைப் பதிவேடு வைக்கப்படும். அதில் கையெழுத்திட்டுச் செல்வர். அவ்வாறு கையெழுத்து போடுபவர்களுக்கு தான், கூட்டத்தில் கலந்து கொண்டதற்கான படிவழங்கப்படும். சில எம்.எல்.ஏ.,க்கள் தாங்கள், சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும், ஆனால், வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடவில்லை என்றும் குறிப்பிட்டு, வருகையை குறிப்பிட்ட தேதிகளில் பதிவு செய்து கொள்ளும்படி, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,760 முறை படிக்கப்பட்டுள்ளது!

பார்வையற்ற மாணவி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி

திண்டிவனத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி சுஜிதா, ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மல்லியபத்தர் தெருவில் வசிப்பவர் ஜோதி. இவருக்கு சுஜிதா (22), ஹேமபிரியா (16) என்ற இரு மகள்கள் உள்ளனர். சுஜிதா பிறவியிலேயே பார்வையற்றவர். படிப்பில் மிகவும் ஆர்வமும், திறமையுடனும் திகழ்ந்தார்.10ம் வகுப்பை, திண்டிவனம் மான்போர்ட் பள்ளியில் படித்து முடித்தார். பின், தொலைதூர கல்வி மூலம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து விழுப்புரம் தெய்வானை அம்மாள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,384 முறை படிக்கப்பட்டுள்ளது!

டென்சனை குறைங்க!

நேற்றைக்கு ரொம்ப நேரம் விவேக் ஜோக்குகளை பார்த்துக்கிட்டிருந்ததால் நானும் ஏதாவது கருத்து சொல்லலாம்னு கிளம்பிட்டேன். படிச்சிட்டு டென்சனாகாதீங்க. ஏன்னா, பதிவே டென்சனைக் குறைப்பது எப்படின்றதுதான்.

நீங்க கடவுள் இல்லை!

உங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்கள் நிறைய இருக்குன்னு தெரிஞ்சிக்கோங்க. அப்படிப்பட்ட விஷயங்களுக்காக நீங்க வருத்தப்படாமல், பேசாமே அந்த வருத்தங்களை outsource பண்ணிடுங்க. அதுதான் உடம்புக்கு நல்லது. உதா: வடநாட்டுப் பெண்மணியும் தென்நாட்டுப் பெண்மணியும் தொலைபேசியதை உங்களால் வெறும் கேட்கத்தான் முடியும். வேறெதாவது செய்ய முடியுமா?

தமிழக அரசுக்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,546 முறை படிக்கப்பட்டுள்ளது!

உணவு விஷயத்தில் கவனம் (ஜன்க் ஃபுட்)

இன்றைய நிலையில் எந்த ஒரு வளரும் பருவ மாணவரிடமும், பிடித்த உணவு எது என்று கேட்டால் நமக்கு அதிர்ச்சியே மிஞ்சும்.

பலரும் தங்களுக்கு பிடித்த உணவாக பீசா, பஸ்டா, வடா பாவ், பாவ் பாஜி, நூடுல்ஸ் மற்றும் ப்ரைட் ரைஸ் போன்ற உணவு வகைகளையே சொல்வார்கள். இந்த உணவு வகைகள் பயனற்ற உணவுகள் அல்லது ஆங்கிலத்தில் “ஜன்க் புட்” என்று அழைக்கப்படுகின்றன. இத்தகைய உணவு வகைகளில் ஒன்றுகூட பயனுள்ள மற்றும் சத்துள்ள உணவுப் பொருள் கிடையாது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,148 முறை படிக்கப்பட்டுள்ளது!

பறவைகள் பலவிதம்

நமது விரல் நீளமும் (இரண்டேகால் இஞ்ச்) 1.6 கிராம் எடையுமே உள்ள மிகச் சிறிய பறவையான ‘ஹம்மிங்பர்ட்’ (பாடும் பறவை) முதல் 9அடி உயரமும் 156கிலோ எடையும் கொண்ட நெருப்புக் கோழி வரை பறவைகள் பலவிதம் தான்.

அதிக எடையுள்ள ‘பறக்கும்’ பறவையான ‘பஸ்டார்ட்’ 18கிலோ வரை பெருக்கும்.

பறவைகளின் உள்ளமைப்பு மற்ற வகைகளின் கலவையாக உள்ளது. பறவைகள் முதுகெலும்புள்ளவை. பாலூட்டிகளைப் (அம்மல்ச்) போல நான்கு அறை இதயத்தையும் வெதுவெதுப்பான இரத்தத்தையும் கொண்டவை. இதன் காரணமாக சீரான . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,465 முறை படிக்கப்பட்டுள்ளது!

கிரகங்கள் என்ன செய்யும்?

கிரகங்கள் நம்மை பாதிக்கிறது உண்மைதான். பூமி சுத்தறதால தான் இரவு பகல், பருவ காலம்,நில நடுக்கம் சுனாமி எல்லாம். சூரியனாலதான் உலகத்துக்கு எல்லா சக்தியும் கிடைக்குது. ஆனா பில் கேட்ஸ் ஆறதுக்கு அம்பானியாறதுக்கும் கிரகம் தான் காரணம்னு சொன்னா எப்படி? தனிப்பட்ட ஒரு மனிதன் வாழ்வில் கிரகங்கள் உண்டாக்கும் மாற்றம் பற்றிய அடிப்படையில்லாத பழைய ஜோதிடக் கருத்துகளும், பிழைப்புக்காக அதை விடாப்பிடியாக பரப்பி ஒரு கூட்டம் மக்களை இருட்டில தள்ளுறது தான் வருத்தமான விஷயம்.

வானத்துல கிரகங்களும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,552 முறை படிக்கப்பட்டுள்ளது!

முன்மாதிரி அரசியல் தலைவர்

ஹதீஸ் விளக்கம் : புஹாரி 2739 – மௌலவி இஸ்மாயில் ஸலபி

‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளிக் காசையோ, தங்கக் காசையோ), அடிமைகளையோ, வேறு எதனையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளைக் கோவேறு கழுதையையும், தம்முடைய ஆயுதங்களையும் தர்மமாக வழங்கிச் சென்ற ஒரு நிலத்தையுமே அவர்கள் விட்டுச் சென்றார்கள்’ அறிவிப்பவர்: ஜுவைரியா பின்த் ஹாரிஸ் (ரலி) நூல்: புகாரி 2739, 2839, 2912, 3098, 4461

பத்து . . . → தொடர்ந்து படிக்க..