2. தொழில் வளம்
10 மடங்கு முதல் தொழிலை 10 மடங்கு விரிவுபடுத்தும் என்பதை அனைவரும் அறிவர். இன்றுள்ள முதலில் தொழிலை10 மடங்கு விரிவுபடுத்த முடியும் என்பது பலர் வாழ்வில் நடந்தாலும், எவர் மனதையும் தொடாத உண்மை அது. டெக்னாலஜி 10 மடங்கு உயர்ந்ததானால் தொழில் அது போல் பெருகும். மார்க்கட் 10 மடங்கு விரிவடைந்தால் தானே தொழில்10 மடங்கு விரிவடையும். வேலை செய்பவர்கள் இன்று போல்10 மடங்கு உற்சாகமாக இருந்தாலும் தொழில் அதேபோல் விரிவடையும். Organisationயை 10 மடங்கு உயர்த்தினால் அதே பலன் உண்டு. இன்று தொழிலதிபர்கள் உள்ள நிலையில் இக்கருத்துகள் எடுபடா. முதலை மட்டும் விரிவுபடுத்தாமல், மற்ற 4 அம்சங்களையும் ஒவ்வொன்றையும் 10 மடங்கு விரிவுபடுத்தினால் தொழில் 100 மடங்காகிறது என்பதை இன்று நாட்டில் சில கம்பனி விஷயத்தில் காண்கிறோம். ஆனால் அது மனதைத் தொடுவதில்லை.
தொழிலுக்கு energy தேவை. Energy அதிகமானால் தொழில் பெருகும். தொழிலில் energyயை 10 மடங்கு உயர்த்த தெளிவும், முயற்சியும் போதும். அதை மட்டும் செய்ய ஒருவர் முன் வந்தால் அவர் தொழில் 10 மடங்கு உயரும். எல்லாஅம்சங்களையும் உயர்த்த முடிவு செய்பவர் நினைத்ததைச் சாதிக்கலாம்.
மனித மனம் energy நிறைந்தது. வாடி வதங்கி சோகமே உருவாக உள்ளவர் தவிர மற்ற அனைவர் மனத்திலும் ஏராளமான energy உண்டு. அது infinite energy. அளவு கடந்த energy. தொழிலில் முதலாளி இக்கருத்தை ஏற்பாரானால், தம் மனதில்உள்ள அளவு கடந்த energy (infinite)யை அவர் அறிவாரானால், அதை இப்பொழுதுள்ள திசையிலிருந்து திருப்பி தம் தொழிலுக்குக் கொடுக்க முன் வருவாரானால், அவர் தொழிலை அபரிமிதமாக விரிவுபடுத்தலாம். 10 மடங்கு நிச்சயமாக விரிவுபடுத்தலாம்.
ஆன்மீகச் சட்டப்படி கூழாங்கல்லைப் படைக்கவும், மனிதனைப் படைக்கவும் இறைவன் ஒரே அளவு energy யைச் செலவு செய்துள்ளான். ஆன்மா அளவில் எல்லா மனிதர்களும் சமம். எல்லோரும் ஒரே வகையாக வளர்ந்து வந்தால் இன்று எல்லோரும் சமமாக இருப்பார்கள். வேறுவேறு திசைகளில் மனிதர்கள் வளர்வதால் நாம் சிலரை உயர்வாகவும், மற்றவரைத் தாழ்வாகவும் காண்கிறோம்.
நடைமுறையில் நாம் டிரைவர், வண்ணான், குமாஸ்தா, பெட்டிக்கடைக்காரர் போன்றவர்கள் உழைப்பால் உயர்ந்து 100 பஸ் விடுவதையும், மந்திரியாவதையும், கோடிக்கணக்காகச் சம்பாதிப்பதையும் பார்க்கிறோம். அதனால் மனம் ஓரளவு இவ்வான்மீக உண்மையை ஏற்க முன்வரலாம். நடைமுறையில் தொழிலுக்கு எப்படி energyயைச் சேர்ப்பது என்று பார்ப்போம்.
Energy எங்கிருக்கிறது? எப்படி அதை மாற்றுவது?
மேற்சொன்ன கருத்துகளை ஓரளவு ஏற்ற உழைப்பாளிகள் நடைமுறையில் அவர்கள் தொழில் 3 ஆண்டில் மடங்கானதையும், 5 ஆண்டில் 10 மடங்கானதையும், வருமானம் ஒரே ஆண்டில் 50 மடங்கானதையும் கண்டுள்ளனர். ஒரேஆண்டில் 15 மடங்கான தொழிலும் உண்டு.
அன்னை மீது நம்பிக்கையுள்ளவர் இக்கருத்தை ஏற்றபொழுது இரு பக்தர்கள் அவர் எண்ணத்தைப் பூர்த்தி செய்ய முன் வந்த முதல் நாள் முழுமனதுடன் பழைய படி தொழிலைக் காலையில் ஆரம்பித்த பொழுது அன்று மாலை வியாபாரம் 3 மடங்கானதையும், மற்றொரு சமயம் 4 மடங்கானதையும் கண்டார்கள். இதைத் தொடர்ந்து செய்யமுடியுமா? நிலைக்கச் செய்ய முடியுமா? நாம் energy கோணத்தில் மட்டுமே பார்க்கிறோம். மற்ற அம்சங்களை இரண்டாம்பட்சமாகக் கருதுகிறோம் என்பதை மீண்டும் கூறுகிறேன். அவர் கடையில் நடந்த சில காரியங்களையும், அவர் செய்யக் கூடிய மற்ற பலகாரியங்களையும் காண்போம்.
- முடிவு தம் சக்தி, திறமை, முயற்சி, சிந்தனை, செயல் ஆகியவற்றின் முழுப் பலன் தொழிலுக்கு முதலிலும், அடுத்தபடி வீட்டிற்கும் என்று முடிவு செய்தார். முடிவு என்பது மனத்திலுள்ள முடிச்சு. முடிச்சுப் போட்டால் அதனுள் உள்ளவை அதை விட்டு நகரா. முடிச்சில்லாத பல நூல்கள் ஒன்று சேர்ந்தால் அலையும், சிக்கலாகும், நூலாகவும் பயன்படாது. அது தடையாகவுமாகும். முடிவு என்பதைத் தீர்மானம் என்கிறோம். முடிவு என்பது நம் மனத்தின் energyயைச் சேர்த்து நம் செயலுக்கு முறையாகப் பயன்படுத்தும் திறனுடையது. முடிவுகள் பலதரத்தவை. பல நிலைகளில் உள்ளன. நாம் கூறுவது முதல் நிலை முடிவு. நம் energy முதலாக நம் தொழிலுக்குப் பயன்பட வேண்டும் என்ற முடிவை ஒருவர் எடுத்ததால் அவர் தொழில் பெருகும். அப்படி ஒரு முடிவு இவர் எடுத்ததால் முதல் நாளில் 3 மடங்கும், அடுத்த முயற்சியின் பொழுது முதல் நாளில் 4 மடங்கும் வியாபாரமாயிற்று. கீழ்க்கண்டவை பல தரங்களுக்குரிய முடிவுகள்.
- முதலாளி எடுத்த முடிவு.
- முதலாளியின் குடும்பம் அவர் தொழில் சிறக்க அவரைப் போல் எடுத்த முடிவு.
- சிப்பந்திகள் கம்பனி வளர முதலாளி எடுத்ததைப் போல் எடுக்கும் முடிவு.
- இலக்கைக் குறித்து – கம்பனி 10 மடங்கு வளரவேண்டும் என்பது இலக்கு – அதை நிறைவேற்ற முதலாளி, குடும்பம், சிப்பந்திகள் எடுக்கும் முடிவு.
- இலட்சிய முடிவு – நாணயமான கம்பனி என்று பெயர் எடுக்க வேண்டும்.
- Organised decision – நாம் முடிவெடுத்தாலும், நம்முடிவை மற்றவர் ஏற்றுக் கொண்டாலும், முடிவை நாம் நிறைவேற்றுவதற்குப் பதிலாகச் சட்டங்களும், பழக்கங்களும் அதற்கேற்ப அமைந்து அவை மூலம்நம் முடிவு நிறைவேறுதல்.
- இந்த முதல் முடிவுக்கு – முதலாளி மட்டும் எடுத்தமுடிவுக்கு – அது தரமான முடிவானால் 10 மடங்கு கம்பனி வளர முடியும். மற்றவை அவற்றை விட உயர்ந்த பலன் தரவல்லவை.
- அபிப்பிராயம் நம் தொழிலைப் பற்றிய நம் அபிப்பிராயம் ஊரில் உள்ள மற்றவர்கள் அபிப்பிராயம் போன்றது. அதற்கு அவர்கட்கு வரும்பலன் தான் வரும். தொழில் 10 மடங்கு உயர வேண்டுமானால் நமது எல்லா அபிப்பிராயங்களையும் நம் இலட்சியம் பூர்த்தியாகும் வகையில் மாற்றிக்கொள்ள வேண்டும்.நல்ல அபிப்பிராயங்களை உயர்ந்த அபிப்பிராயங்களாக மாற்ற வேண்டும். தப்பு அபிப்பிராயங்களை நல்ல அபிப்பிராயங்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். முடிவு எப்படி தன்னுள் ஏராளமான சக்தி energy பெற்றிருந்ததோ, அதேபோல் அடுத்த நிலையில் அபிப்பிராயங்களுள் ஏராளமான சக்தி energy உறைகிறது.திவாலானவர் இனி வழியில்லை என்ற அபிப்பிராயத்துடன் கடையைக் கட்டும் நிலையில் அவர் அபிப்பிராயத்தை மாற்றிக்கொண்டால் வழி பிறக்கும் என்றறிந்து அதிலிருந்து மீண்டார். திவாலாகி 15 வருஷமாக டிரைவராக வேலை செய்தவர் இனி தமக்கு வழியில்லை என்ற அபிப்பிராயத்தின் ஆளுகைக்குட்பட்டிருந்தபொழுது, அதை மாற்ற முன் வந்த 10ஆம் நாள் புதுவழி பிறந்து இழந்ததைப் பெற்றார்.
தொழிலை பாதிக்கும் அபிப்பிராயங்கள்
|
அவற்றை மாற்றி தொழிலுக்குகந்தவையாக உள்ள புதிய அபிப்பிராயங்கள்
|
1. தானே நடக்கும், பேசாமலிருப்போம்.
|
எதையும் திட்டமிட்டு, முன் யோசனையின் படி, முடிவுடன்,
நாமே நடத்த வேண்டும்.
|
2. விஷயம் மாறினால் நாமும் மாறிக்கொள்ள வேண்டும்.
|
எதுவும் மாறலாம். நானும் என்
கொள்கைகளும், முறைகளும்,
இலட்சியங்களும் மாறக் கூடாது.
|
3. கணக்கு எழுத வேண்டிய அவசியமில்லை.
கையில் பணம் வருவதைப் பார்த்தால் போதும்.
|
கணக்கு எழுதாமல் கடையை மூடக்கூடாது, தூங்கப்
போகக்கூடாது.
|
4. பிடியை விட்டால் எல்லாம் போய்விடும்.
|
பிடியைக் கெட்டியாகப் பிடித்தால்
சிறு வியாபாரம் திறமையாகநடக்கும். பெருகாது. பிடியை விட வேண்டிய இடத்தில் விடவேண்டிய அளவு அவசியம் விடவேண்டும்.
|
5. சிப்பந்திகள் அவர்கள் விஷயத்தை அவர்களே கவனித்துக் கொள்ள
வேண்டும்.
|
நமக்குப் பொறுப்புள்ள இடத்தில்
அவர்கள் காரியங்களை நாம்எடுத்து நடத்த முன்வர வேண்டும்.
|
6. நாலு பேர் செய்தால் நாமும் செய்யலாம். நாலு பேர் செய்வது தானே சரி.
|
சரியானதைச் செய்யவேண்டும்.
தவறானதைச் செய்யக் கூடாது.
யார் செய்கிறார்கள் என்பது நமக்கு விஷயமில்லை.
|
7. பணம் வேண்டுமானால் கடன் வாங்கிக் கொள்ளலாம்.
|
பணம் விற்று முதலிலிருந்து
வரவேண்டும். அன்றாடக் கடைச்
செலவுக்குப் பணம் கடன்
வாங்கினால் வியாபாரம் தன்னைத் தானே கவனிக்கும்
நிலையிலில்லை என்று பொருள்.
|
8. எலக்ட்ரிக் பில்வந்தால் எப்பொழுது வேண்டுமானாலும் கட்டினால் போதும்.
|
பில் வந்தால், அது கட்ட வேண்டிய
தேதியை நாம் ஒரு சட்டப்படி குறித்து, குறித்த நாளில் கட்ட வேண்டும்.
|
9. Stock பத்திரமாக இருந்தால் சரி.
|
பத்திரமாக இருந்தால் மட்டும் போதாது. ஒழுங்காக அழகாக, எளிதில் எண்ணும்படி stock அடுக்கி வைக்கப்பட்டு, ரிஜிஸ்டரில் எழுதப்பட வேண்டும்.
|
10. வீட்டுச் செலவை
முதலில் பார்க்கவேண்டும். கடை
அடுத்தபடி.
|
வீட்டுச் செலவுக்கு ஒரு திட்டமான தொகை குறிக்கப்பட்டு அதற்குள் கடையிலிருந்து பணம் எடுக்க வேண்டும். அந்த லிமிட்டை மீறக் கூடாது.
|
எவருக்கும் அவரை ஆளும் அபிப்பிராயங்கள் 15, 20 இருக்கும். அவற்றை வரிசையாக எழுதி அவற்றை எப்படி மாற்ற வேண்டுமோ, அதுபோல் மாற்றுவது அவசியம். இந்த மாற்றம் தொழிலுக்கு ஏராளமான energyயைத் தரும்.
- எதிர்பார்ப்பு ஒரு நாள் அதிக வியாபாரம் – உதாரணமாக 4 மடங்கு – நடந்தவுடன் அடுத்த நாள் மனம் அதேபோல் வியாபாரத்தை எதிர்பார்க்கிறது. எதிர்பார்ப்பது நம் energyயை விரயம் செய்யும்.எதிரான பலன் தரும். நம் மனம் நம் கட்டுப்பாட்டிலில்லையே, எப்படி எதிர்பார்க்காமலிருப்பது என்று கேட்கலாம். எதிர்பார்த்தால் பலன் எதிராக வரும் என்பதை மனம் உணர்ந்து விட்டால், சற்று கட்டுப்படும். கடமைகளைப் பூர்த்தி செய்ய முனைந்தால் அதற்கு ஏராளமான energy தேவைப்படும். எதிர்பார்க்கக்கூடாது என்ற முடிவும், கடமைகளில் ஆர்வமும் சேர்ந்து எதிர்பார்ப்பைப் பலவீனப்படுத்தும். இன்று என்ன sales என மனம் எதிர்பார்க்கும் பொழுது மனத்தின் அவ்வளவு energyயும் துடித்துப் போய் அதிலேயே இருப்பதைக் காணலாம். எதிர்பார்ப்பை விட்டொழித்த பின் துடிப்பு போய், மனம் நிதானமாகக் கடமையில் ஈடுபடுவது தெரியும். அப்படி மாறிய பொழுது கடமைகட்குப் பலமடங்கு energy வருவதும், பலன் பலமடங்காக மாறுவதும் தெரியும்.
- திருவுருமாற்றம் தவறு செய்து பலன் கெட்டுப் போகிறது, தவற்றை உணர்ந்தவுடன் மனம் மாறத் தயாராகிறது. அப்படி மாறினால், அந்நிலையில் அன்னையை அழைத்தால், கெட்டுப் போன பலன்மாறி நல்ல பெரிய பலன் உடனே வருவதைக் காணலாம். இது அன்னை முத்திரை. தவறு நடக்காமலிருக்கப் பழக வேண்டும். நடந்தால் அதை உணர்ந்து திருவுருமாற வேண்டும். இன்று நடப்பவற்றில் இதுபோல் செய்வது அவசியம். கடந்த காலத்தில் நடந்தவற்றையும் இதுபோல் மாற்றினால் பெரும் பலனுண்டு.
- சத்தமாகப் பேசுதல் வியாபாரம் நடக்குமிடத்தில் மரியாதையாக அழகாக மட்டும் பேசினால் காரியம் நடக்காது. சத்தம் போடவேண்டிய நேரம் உண்டு. அந்த நேரம் நாம் சாதுவாகப் பேசினால் நாம் ஏமாந்து போவோம். ஏமாற ஆரம்பித்தால் வெகு சீக்கிரம் தொழிலை மூட வேண்டும்.சத்தமாகப் பேசும்பொழுது physical energy உடலின் குரல்செலவாகிறது. இது energy விரயமாகும் வழி. அதனால் காரியம் அந்த நேரம் கூடி வந்தாலும், நாம் தாழ்ந்த நிலைக்குப் போய் விடுகிறோம். சத்தமாகப் பேசாமல், நிதானமாகப் பேச அதிக energy தேவை. அதுபோல் பேசும் பொழுது உள்ளே அதிக energy உற்பத்தியாகும். மெதுவாகப் பேசுவதால் அந்த energy செலவாகாது. Energy மிச்சப்படுவதால் நாம் செய்யும் காரியங்கள் அதிகமாகக் கூடிவரும்.
- Silent will வேண்டியதைக் கேட்டுப் பெறுகிறோம். கேட்காமலிருந்தால்எதுவும் கிடைக்காது. கேட்காமலிருந்தால், அதுவும் பொறுமையாக இருந்தால், கேட்டுக் கிடைப்பதைவிட அதிகமாகக் கிடைப்பதைக் காணலாம். இது மிகக் கடினமான கட்டுப்பாடு. ஒருவருக்கு silent will பலித்து விட்டால் அதன் மூலம் மட்டுமே செயல்பட அவர் முடிவு செய்தால் அது மட்டுமே தொழிலை 10 மடங்காக்கப் போதும் என்று அவர் சீக்கிரம் காண்பார். Silent will ஒருவர் தொழிலை 2 கோடியிலிருந்து 700 கோடியாக உயர்த்தியுள்ளது.
- உழைப்பு, முறைகள், பண்புகள் (values) உழைப்பவன் உயர்வான். உழைப்பில்லாதவனுக்கு உயர்வில்லை. உழைப்பவனுடைய உயர்வு சர்க்கார் குமாஸ்தாவுக்கு வரும் பிரமோஷன் போன்றது. முறைகள் அவசியம். முறைகளைப் புறக்கணிப்பவருக்கு முதல் நிலை உயர்வுக்கு மேல்இல்லை. உழைப்பவன் குமாஸ்தா போன்றவன் எனில், முறைகளைப் பின்பற்றுபவன் direct recruit ஆபீசர் போன்றவன். இவற்றை ஒப்பிட முடியாது. குமாஸ்தா எந்த வேலையில் ரிடையர் ஆவானோ அந்த வேலையில் direct recruit ஆபீசர் முதலில் சேருவான். பண்புகள் முடிவானவை. நாணயம், நேர்மை, வாக்குதவறாதது, விஸ்வாசம், பொய் சொல்லாதது, standard of the product, quality of the product போன்றவையும், punctuality போன்றவையும் பண்புகளாகும். இது கலை, அரசியல் துறை போன்றது. கலைஞன் நேரம் வந்தால் நாடெங்கும் புகழ் பெறுகிறான். அரசியல்வாதி எந்த நிலையிலிருந்தாலும், நேரம்வந்தால் மேல் மட்டத்திற்குப் போகிறான். நேரம் வருவது தானே வருவது, அது அரசியல்வாதி கையிலில்லை. அன்னை பக்தனுக்கு உழைப்பும், முறையுமிருந்தால் 10 மடங்கு உயர்வான். பண்புகளிருந்தால், நேரம் வருவது அவன் கையிலிருப்பது எனக் காண்பான். அன்னை நேரத்தை அவனிடம் ஒப்படைத்துள்ளார். தம் பங்குக்குரியவற்றை பக்தன் முடித்த நேரம், அன்னையை அழைத்தால், உடனே உரிய நேரம் வரும்.முதலாளி முதலிலிருந்தே இதைப் பல ரூபங்களில் பார்த்தாலும் சிறு விஷயங்களாக இருப்பதால் அவர் மனதில்படாது. பெரிய விஷயமானால் தான் மனதில் படும். தன்னை மறந்து செயல்படும் அன்பர் அன்னையை அழைத்தால், அவர் நேரத்தை அழைக்கின்றார், அதிர்ஷ்டத்தை அழைக்கின்றார். ரூ.70,000 தினசரி வியாபாரமான இடத்தில் 1,68,000-உம் 2,72,000-உம் முயற்சியை ஆரம்பித்த முதல் நாட்களில் பார்த்த வியாபாரி, மேற்சொன்னவற்றை மனதிலிருத்தி, energyயைச் சேகரம் செய்து, உழைப்பையும், முறையையும் பூரணமாக மேற்கொண்டு முயற்சியின் முதல் மாதத்திலேயே அன்னையை அழைக்க ஆரம்பித்தால், 3 நாட்களுக்குள் அவர் தினசரிவியாபாரம் 7 லட்சமாவதைக் காண்பார். இது அவருக்கு 10 மடங்கு வியாபாரம்.இதை ஒரு நாளில், முதல் மாதத்தில் மேற் கண்டபடி சாதிக்கலாம். ஒரு நாள் சாதனை வருஷ வியாபாரமாகாது. ஆனால் ஒரு நாளாவது சாதித்துவிட்டால், அதன் பின் அதை நிலைப்படுத்த முறைகள் உண்டு. ஒரு நாள் சாதிப்பது ஆரம்பம்.
- மார்வாரியின் சொத்து
மார்வாரிகள் பணக்காரர்கள். அவர்கள் செல்வம் பெருகும். காரணம் அவர்கள் பைசாவைக்கூட விடமாட்டார்கள். அது பணம் பெறும் கவனம். அக்கவனத்தைப் பாராட்டி பணம்அவர்களிடம் சேருகிறது என்கிறார் பகவான். கவனம் செலுத்தினால் பணம் சேருகிறது எனில் பணத்தின் மீது ஆசைக்காகக் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, பணம் அன்னைக்குரியது, அன்னைக்குச் சேவை செய்ய வல்லது எனகவனம் செலுத்தினால், முழு கவனத்தைத் தீவிரமாகச் செலுத்தினால், முழுப்பணமும் நம்மை வந்தடையும். பணம் சேர வேண்டுபவர், பணத்திற்குக் கவனம் செலுத்த வேண்டும். கவனத்தை நாம் உயர்ந்த முறையில் செலுத்த முடியும். உயர்ந்த அளவு பணம் அதனால் சேரும். - மனத்தில் energy கடல் போலிருக்கிறது (Infinite). அது மற்ற விஷயங்களில் இன்று மறைந்துள்ளது. அதைத் திருப்பித் தொழிலுக்குக் கொடுக்க வேண்டும் என்றேன்.An experiment: 3, 4 நாட்களாக மனத்தை மேற் கண்டமுடிவை ஏற்கும்படித் தயார் செய்து பார்த்தால் இது முடியாத காரியம் எனத் தெரியும். தெருவில் மேள சத்தம் நம் காதில் விழக்கூடாது, என்பது எப்படி நடவாத காரியமோ, பசித்தால் சாப்பிடக்கூடாது என்பது எப்படி முடியாதோ, அது போல் மனம் திசை திரும்ப எளிதில் இசையாது. ஆனால் மன உறுதியுடன் தொழில் முக்கியம், முதன்மையானது, தொழிலே என் வாழ்வு மையம் எனமுடிவு எடுத்தவருக்கு மனம் கட்டுப்படும், கொஞ்சம் கொஞ்சமாக மனத்தை நம் முயற்சியை ஏற்க வைக்க வேண்டும். முடிவு பூரணமானால் மனம் ஒத்துழைக்கும்.அம்முடிவு முழுமையானதால், எரிச்சல், கோபம், விருப்பு, வெறுப்பு, அபிப்பிராயம், பழக்கம், வழக்கம், நாலுபேர் என்ன சொல்வார்கள், பயம், கர்வம், திமிர், ஏமாற்றுவது, பேச்சைமாற்றுவது போன்ற தவறான உணர்வு எழும்பொழுது மனதைக்கட்டுப்படுத்தி, தொழிலுக்கு அதிலுள்ள energyயைத் திருப்பினால் பாதி வெற்றி கிடைப்பது தெரியும். கெட்டபழக்கத்தை விடுவதுபோல் நல்ல பழக்கத்தை விட முடியாது. வாடிக்கைக்காரருடன் பேசும் பொழுது பழைய நண்பர் வந்தால்மரியாதை காரணமாக வாடிக்கைக்காரரைச் சிப்பந்தியிடம் விட்டு விட்டு நண்பருடன் பேசும் நல்ல பழக்கத்தை இன்று மாற்றி வாடிக்கைக்காரரைக் கவனிப்பது கஷ்டம்.என்றாலும் மனத்தின் energy தொழிலுக்குத் திரும்புவது தெரியும். வியாபாரம் கூடும்.மனம் ஓரிரு மாதங்களில் ஒருவருக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அதன் பின் 3 நாள் அல்லது 1 வாரம் மனத்தின் அனைத்து energyகளையும் தொழிலுக்கு மாற்ற முயன்றால் பெரும்பாலும்வெற்றி கிடைக்கும். இந்த வெற்றிக்குக்
குறைந்தபட்சப் பலன் 10 மடங்கு வியாபாரம். அதிகபட்சப் பலன் அளவிட முடியாதது.
ஏற்கனவே கூறியதுபோல் 1 நாள் 10 மடங்கு வியாபாரத்தைப் பார்த்து விட்டால், இனி அதற்குரிய முறைகளைப் பயன்படுத்தி அதை நிரந்தரமாக்கிக் கொள்ளவேண்டும். 1 வாரம் அல்லது 3நாள் 10 மடங்கு வியாபாரம் தொடர்ந்தால் அந்நாட்களில் நடப்பவற்றைக் கவனித்தால் முறையே – நிரந்தரமாக்கும் முறையே – என பெரும்பாலும் விளங்கும். எது எப்படியாயினும்
மனம் 10 மடங்கு வியாபாரம் கிடைக்கும் என உறுதியாக நம்பும். இது பெரிய விஷயம்.
- தன்னலமற்றவர்கள் இவர்கள் பிறர் வேலையைத் தம் வேலைபோல் செய்து கொண்டேயிருப்பார்கள். சொந்த வேலை நினைவு வாராது. இவர்கள் பரந்த உள்ளம் படைத்த பெரிய ஆத்மாக்கள். மனம்பரந்தில்லாமல் இதைச் செய்ய முடியாது. இப்படிப்பட்டவர்கட்குப் பிறருக்கு உதவி செய்யாமலிருப்பது முடியாத காரியம். சுயநலமிக்குப் பிறரை எப்படி நினைக்க முடியாதோ, அதேபோல் இவர்களால் பிறரை நினைக்காமலிருக்க முடியாது. மனத்தின் எல்லா energyயும் இவர்கட்கு உதவுவதிலேயே இருக்கும். அதேபோல் ஒவ்வொருவருக்கும் மனத்தில் எல்லா energyயும் அவர்கள் சுபாவத்தைப் பூர்த்தி செய்வதிலேயே இருக்கும். நமக்கு அதுபோல் எங்கு energy போகிறது என அறிந்து அதை முழுவதும்தொழிலுக்குத் திருப்பினால் தொழில் பெருகும்.
- ‘நாம்’ என்பதென்ன? 24 மணி நேரமும் நம் மனம் எதிலிருக்கிறதோ அதுவே ‘நாம்’ எனப்படும். எனக்கு என் பிள்ளை என்றால் உயிர் என்பவருக்கு அவர் மனத்தின் energy முழுவதும் பிள்ளை மேலிருக்கிறது எனப் பொருள். காலையில் டிபன் சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்கும் பொழுது மதியச் சாப்பாட்டை மனம் நினைக்கிறது. மதியம் சாப்பாடு வரும் வரை அதையே நினைக்கிறது எனில் அவர் மனத்தின் energy முழுவதும் சாப்பாட்டில் இருக்கிறது. சன்னியாசத்தை மேற்கொண்ட ஒருவருக்குப் பணம் அதைப் போல் மனத்தை அரித்தது. உயர்ந்த மனிதர் ஒருவருக்கு உயர்ந்த வாழ்வு அமையவில்லை. அவரைச் சுற்றியுள்ள அனைவருக்கும் உயர்ந்த வாழ்வு அமைந்துவிட்டது. இவர் மனம் இருக்கும் உயர்வை – உள்ளே ஆன்மாவில் உள்ள அம்சத்தைக் – கருதாது இல்லாத வாழ்வின் உயர்வை நினைத்து உருகுகிறது. மேலும் சுற்றியுள்ள உறவினர்கள் தங்கள் உயர்வை நிமிஷத்திற்கு நிமிஷம் சுட்டிக்காட்டியும், இவருக்கு உயர்ந்த வாழ்வில்லை என்பதை உறுத்திக் காட்டியும் உள்ளனர். நாவினால் சுட்ட வடு ஜீவன் முழுவதும் பரவியது. இவர் மனம் 24 மணி நேரமும் எப்படித் தம் ‘உயர்வை’ உலகில் நிலை நாட்டலாம் எனத் தீவிரமாக, அதிதீவிரமாக முயல்கிறது. இவர் மனத்தின் energy முழுவதும் இவ்வுயர்விலிருக்கிறது. அன்னையிடம் வந்தபின் ஆயிரமாயிரம் நன்மைகள் நடக்கின்றன. ஆனால் இந்த விஷயம் மட்டும் தலைகீழாகப் போகிறது. மனம் பாடுபடுகிறது. அவதிப்படுகிறது.இவருக்குள்ள உயர்வு ஆன்மீக உயர்வு. அன்னையிடம் வந்தபின் அவ்வுயர்வு பொலிவு பெற்று, கிடைத்தற்கரியன கிடைத்தன. கிடைத்தவை உடல் வரைக்கும் வந்து உடலில் ஆன்மீக மணம் வீசுகிறது. எந்தப் பொருட்களைப் பார்க்க முடியவில்லையோ, அவை அபரிமிதமாக நாடி வருகின்றன. எவரும் கவனிக்காதவரை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். மனம் அவ்வகையில் ஆனந்த சொரூபியாக இருக்கிறது. அவர் மனம் தேடும் விஷயம் பொக்கையாக இருக்கிறது.
அவர் கடமை என்ன? வாய்ப்பு என்ன?
அவர் மனம் மாற வேண்டும்.
அவர் உலக வாழ்வில் உயர்வை நாடாமல், உள்ளுயர்வை நாடவேண்டும்.
மனம் மாறி உள்ளுயர்வை நாடினால், உலகம் மாறி உயர்வைத் தரும்.
இவருடைய இன்றைய முயற்சி தலைகீழேயுள்ளது.தொழிலை நடத்துபவர் காலையில் எழுந்து பேங்க்குக்கும், சென்னைக்கும் போய் தம் ‘பிரச்சினை’களைத் தீர்க்கமுயன்றால், எதைத் தீர்க்க முயல்கிறாரோ, அது வளருகிறது. அது அவர் கண்ணில்படவில்லை. காலையில் எழுந்து கடைக்குப் போய் அங்குள்ள வேலையில் தம்மை இழக்கும்வரை ஈடுபட்டு, வேலை செய்தால், வியாபாரம் பெருகும், சென்னைக்குப் போய் தீர்க்க முனையும் பிரச்சினைகள் தாமே தீரும். இன்று 8 லட்ச ரூபாய் செக் கலக்க்ஷனுக்கு வருகிறது எப்படிப் பணம் புரட்டிக் கட்டலாம் எனில் வாழ்நாள் முழுவதும் பணம் புரட்ட வேண்டியிருக்கும். புரட்டலுக்குரிய வட்டி நாளுக்கு நாள் அதிகமாகி முடிவில் இலாபம் முழுவதும் வட்டியாகும். இனி முடியாது, புரட்ட முடியாது என்ற நிலை சீக்கிரம் வரும். அப்பொழுது புரட்டமுயல்வது தானே நின்று விடும். அன்று என்ன செய்கிறோம் நஷ்டத்தை ஏற்று மனம் புழுங்கி, அதன் விளைவுகளை வருஷக்கணக்காக அனுபவித்து இனி கடன் வாங்குவதில்லை என்ற முடிவுக்கு வருகிறோம். இது அனுபவத்தால் பெற்ற அறிவு. இதைப்பெற பல ஆண்டு பெரு நஷ்டத்தையும், அதற்குரிய கஷ்டத்தையும் அனுபவிக்கிறோம். அன்னை வழி என்ன?நம் மனம் புரட்டலை விட்டுத் தொழிலை நாட வேண்டும்.
பணம் தொழில் மூலமாக மட்டுமே வரும் என்று நம்ப வேண்டும்.
இந்த நம்பிக்கை உயர்ந்து முதிர்ந்தால் 8 லட்சம் வியாபாரம் மூலம் வரும்.
15 or 20 ஆண்டு நஷ்டமும், கஷ்டமும் கொடுக்கும் அனுபவத்தை அன்னை அறிவு 15 அல்லது 20 நாளில் தரும். அத்துடன் புரட்டல் நின்றுவிடும். வியாபாரம் 10 மடங்கு பெருகும். - வர வேண்டிய பணம்கடன் கேட்காமல் கெட்டது என்று நாம் கேள்விப்படுகிறோம். பலனைப் பெற்றவர் தாமே அதற்குரிய கடமையைச் செய்வார் என்று நினைத்தால், சர்க்கார் வரிவசூல் செய்யாமல் மக்களே வரியை கடமையை உணர்ந்து கட்டுவார்கள் என்றிருப்பதைப் போலிருக்கும். பள்ளி, கல்லூரி, மின்வாரியம், முனிசிபாலிட்டி பணம் வசூலிக்காவிட்டால் எவ்வளவு பணம் வருமோ அதுபோல் கேட்காத பணம் வரும்.வர வேண்டிய பணத்தைக் கேட்டுப் பெறுவது அவசியம், முறை.அன்னையை முழுவதும் பின்பற்றுவதில் இம்முறை மாறுகிறதா? அன்னை வரவேண்டியதை வசூல் செய்யச் சொல்கிறார். அதைவிட உயர்ந்த முறையை அன்னை தம்வாழ்வில் பின்பற்றியுள்ளார். பெற வேண்டியவர் நிலை என்ன? கொடுக்க வேண்டியவர் நிலை என்ன? பக்தர் ஒருவருக்காக வேலை செய்தவருக்கு வேலைக்குரிய பீஸ் ரூ.2000/-. சில சலுகைகளைப் பக்தருக்குச் செய்ததால் அதில் பீஸ் கொடுக்க பக்தர் மனம் இசைந்தது. வேலை செய்தவர் செய்து கொடுத்த பொருளை, 15 நாளில் தருவதற்குப் பதிலாக 3 மாதத்தில் கொடுத்தார். பொருள் பயன்படவில்லை. ரூ.4000/- பீஸ் கேட்டார். பக்தர் கொடுத்துவிட்டார். பொருள் தூக்கி எறியப்பட்டது. மீண்டும் செய்ய வேண்டும். 1 வருஷம் தாமதமாயிற்று. மீண்டும் செய்தார். ஏற்கனவே சரிவரச் செய்யாததால், இம்முறை சீக்கிரம் சரியாகச் செய்து தரவேண்டும். இம்முறை 6 மாதம் எடுத்துக் கொண்டார். மீண்டும் பொருள் பயன்படவில்லை. ரூ.6000/- சார்ஜ் செய்தார். பக்தர் பீஸைக் கொடுத்து விட்டு அன்னையை இப்பொழுது நினைத்துக் கூப்பிட்டார். வேறொருவர் அன்புடன் வந்து தம்செலவில் கெட்டுப் போன பொருளைச் சரிசெய்து கொடுத்தார். ரூ.6000 பீஸ் வாங்கியவர் மானேஜர், முதலாளி கையெழுத்துப் போட்டுக் கொடுத்த blank cheque புத்தகத்தில் ஒரு செக் எடுத்து 60,000/- என்று எழுதி bankக்குப் போய் பணம் பெற்று அத்துடன் வேலையை விட்டுப் போய் விட்டார்.பக்தருக்கு ரூ.6000/- நஷ்டம் வைத்தால் தொழில் செய்பவருக்கு 60,000/- நஷ்டம் வருகிறது. இதனால் பக்தர் பெறுவது என்ன? எதுவுமில்லை. பக்தர் உயர்ந்த முறையைக் கடைப்பிடிக்க நினைத்தால் – அது அவசியமில்லை – அவர் புரிந்து கொள்ள வேண்டியன சில.பணத்தைக் கேட்காததால் கொடுக்க வேண்டியவர் தரவில்லை.
இடம் இருப்பதால் அதைத் தவறாகப் பயன்படுத்துகிறார்.
அவர் இரண்டு லட்சம் தாராவிட்டால் அவருக்கு 20 லட்சம் நஷ்டம் வந்திருக்கும்.
நாம் அவர் போலிருப்பதால் அவர் பணம் தரவில்லை என பக்தர் அறிய வேண்டும்.நம்மைக் கேட்காத இடத்தில் நாம் கடமையில் தவறுகிறோம் என்று பக்தர் அறிந்தால் அன்றே வர வேண்டிய பணம் வரும். நமக்கு கடமைப்படாதவர் சந்தர்ப்ப விசேஷத்தால் பல வேலைகளைச் செய்வதை நாம் சௌகரியமாக அனுபவிக்கிறோம். சுருக்கமாகச் சொன்னால் நம் பணத்தைத் தாராதவர் மனநிலையும் நம் மனநிலையும் ஒன்றே, செயலும் ஒன்றே.
தாராதவரும் பக்தராக இருக்கும் நேரம் உண்டு. அவர் அறிய வேண்டியதென்ன? இவருக்கு வாங்கிய பணத்தைத் தாராதது சிறு வயது பழக்கமாக இருக்கும். சுபாவமாக இருக்கும். இவர் தம் மனத்தைச் சோதனை செய்தால் இவர் மனத்தின் energy முழுவதும் எப்படிப் பணம் தாராமலிருக்கலாம், என்ன சால்சாப்பு சொல்லலாம் என்பதில் செலவாகும். இவர் நடைமுறையைக் கவனித்தால் இவர் நிறுத்தி வைத்த பணத்தைப் போல் 10 மடங்கு, 100 மடங்கு இவருக்கு நின்றுவிடும். வாய்ப்புகள் அழிந்து போகும். இவர் அன்னையை நம்புபவராக இருந்தால் மனத்தின் போக்கை மாற்றி எல்லாப் பாக்கிகளையும் கொடுத்துவிட்டு, இனி பாக்கியே வைப்பதில்லை என முடிவுசெய்தால், இன்றைய வியாபாரம் தானே 10 மடங்கு பெருகும்.
Energy மனத்திலிருக்கிறது.
அது ஏராளமானது infinite.
அது தொழிலபிவிருத்திக்குப் பயன்பட மனம் மாறவேண்டும்.
நம் பழக்கங்களை மாற்றி, உயர்ந்த பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். - பொறாமை பொறாமைப்படுபவர்கள் மனத்தில் ஏராளமான energy உண்டு. இவர்களுக்கு அன்னை பொதுவாக அதிகமாகப் பலிக்கும். நினைத்தவையெல்லாம் நடக்கும்பொழுது பொறாமை எழுந்தால் யார் மீது பொறாமைப்படுகிறோமோ அவர் அழிவார். அத்துடன் பொறாமைப்பட்டவருக்கு சர்வ நாசம் வரும். பொறாமை தம்மைத் தரைமட்டமாக்குகிறது என்று அறியாமல், அன்னை என்னைக் கைவிட்டுவிட்டார் என்றே மனம் கருதும். பெரிய சம்பளமும், நல்ல industry-உம் இருந்தவர் பட்ட பொறாமையால் எதிரி அழிவின் எல்லைக்கு வந்து அன்னை பக்தியால் நிலைமை மாறி உயர்ந்து, உன்னதம் பெற்று அதிர்ஷ்டத்தில் திளைக்கும்பொழுது, பொறாமைப்பட்டவருக்கு industry போய், அத்துடன்சொத்தும் போய், பயம் வந்து, உயிருக்கு ஆபத்து நிலையாக வந்த சமயம் மனம் பொறாமையை விட ஏற்றுக் கொண்ட நேரம், ஆபத்து விலகியது.பொறாமைப்படுபவர்கள் பெரும்பாலும் உறவினர், உடன் பிறந்தவர், நெடுங்கால நண்பர்கள் மீது பொறாமைப்படுவார்கள். இவர்கள் மனம் எரிமலை போலிருக்கும். இன்று எரிமலை எதிரியை அழிக்கும். நாளைக்கு நாம் சர்வ சமடைந்து நடுத்தெருவில் நிற்போம்.வேண்டுமென்றே பிறர் அழிவை நாடினால் தவறாது அது திரும்பி நம்மை அழிக்கும், அடியோடு அழிக்கும் என்பது அன்னை வாக்கு.அன்னை அன்பர்கட்குப் பொறாமை வரக் கூடாது. வந்தால் குறைந்தபட்சம் அவர்கள் அதை ஏற்று, மாற முன் வர வேண்டும். பொறாமை உணர்ச்சி தீவிரமானது. மாறினால் தீவிரஅதிர்ஷ்டமாகும். இன்றுவரை வந்த அதிர்ஷ்டம் அபரிமிதமாகப்பெருகும். இதுவரை இதைச் செய்தவரில்லை. செய்ய முன் வந்துஆபத்தைத் தவிர்த்தவருண்டு. அதிர்ஷ்டமாக மாற்றியவரை நான் கண்டதில்லை. இனியொருவர் செய்தால் அவரே அன்னைக்கு இச்சேவையைச் செய்ய முன் வந்த முதல் மனிதராவார்.பக்தர் பொறாமையைத் தாராள மனப்பான்மையாக மாற்றுவது அன்னைக்குச் செய்யும் ஆன்மீகச் சேவையாகும். அதுவே தமக்குச் செய்யும் அதிர்ஷ்டச் சேவையாகும். குறைந்தபட்சம் பேராபத்தைத் தடுக்கும் வழியாகும்.
- எந்த அதிகாரமுமில்லாதவர் எல்லோரையும் அதிகாரம் செய்கிறார் இவர் சாதாரண மனிதரானால், உற்றாராலும், நண்பர்களாலும் ஒதுக்கப்பட்டு, வேலை செய்யுமிடத்தில் கடுமைக்குட்பட்டு புன்னகையை இழந்து, சமூகத்தின் அடிமட்டத்தில் இருப்பார்.இவரே அன்னை பக்தரானால், இவருக்கு அதிகாரம் செய்ய ஆயிரம் வாய்ப்பு எழும். அபரிமிதமாகத் தம் கர்வத்தை நிலைநாட்டுவார். கோபத்தால் பிறரைப் பொசுக்குவார். அநாகரீகத்திற்கு எடுத்துக்காட்டாக வெட்கங்கெட்டவராகச் சந்தோஷப்படுவார். இவர் வாழ்வில், எவர் மீதெல்லாம் இவர் கோபப்பட்டாரோ, அவர்களுக்கு இவர் மனதிலுள்ள ஆழ்ந்த ஆசை பூர்த்தியாகும்.Extra dose of humility அதிக அடக்கத்தை மேற்கொண்டு, தனக்குக் கீழிருப்பவர்களை முதலாளியாக நடத்தினால், வாழ்வு பெருவாழ்வாகவும், அன்னை வாழ்வாகவுமாகும்.
- இவர் நல்ல மனதுடன் செய்த பெரிய சேவைக்கு பதிலாக தண்டனை, வசவு, குற்றச்சாட்டு வரும்.
- முழுமனதுடன், முழுத்திறமையுடன் செய்து அபரிமிதமாக வெற்றி பெற்ற காரியம் சீக்கிரத்தில் சூன்யமாகும்.
- எவர் மீது இவர் அக்கறை காட்டுகிறாரோ, அவர்கள் பெருநஷ்டப்படுவார்கள்.
- பெரிய வாய்ப்புகள் வந்து உடனே ரத்தாகும்.
- முதலாளியை எப்படி ஏமாற்றலாம் என மனம் கணக்குப் போட்டபடியிருப்பவர் எல்லோருக்கும் மனம் சுறுசுறுப்பாக இருக்காது. புத்திசாலிக்கே அது உண்டு. முதலாளியை எப்படி எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்பதில் மனத்தின் பெரிய energy புதைந்துள்ளது. அதை மாற்றி எப்படி நம் பொறுப்பை நிறைவேற்றலாம் என அதே energyயைச் செலவிட்டால் ஓராண்டில் அவர் முதலாளியாவார்.முதலாளிகளில் சிலருக்கு எப்படிச் சிப்பந்திகளை ஏமாற்றலாம், tax-ஐ எப்படிக் குறைக்கலாம், பாக்கிதாரருக்கு எப்படிச் சாக்கு சொல்லலாம், யாரை எப்படிப் பயன்படுத்தலாம் என மனம் வேலைசெய்யும். இங்கு ஏராளமான energy புதைந்துள்ளது. இப்படிப்பட்டவர் எப்படிச் சிப்பந்திகட்கு நல்லது செய்யலாம், எப்படி tax-ஐ சரிவரக் கட்டலாம், பாக்கிதாரருக்கு 1 நாள் தவணைகூறாமல் எப்படிப் பணம் தரலாம், யார் யாருக்கு எப்படி உதவியைச் செய்யலாம் என இடைவிடாது யோசனை பிறக்குமானால் அவருடைய 5 கோடி கம்பனி 50 கோடியாகி, 500 கோடியாகும் என்பதை அவர் அறியார். அன்னை அன்பரானால் அன்னை இம் மனநிலைக்கு அதைச் செய்து தருகிறார்.
- தொழில் வளம் பெற முதலாளி செய்ய வேண்டியவை என்ன?
- தொழிலுக்குத் தேவையானவை பணம், டெக்னாலஜி, மார்க்கட், மனிதன், நிர்வாகம் இவற்றிற்கெல்லாம் அடிப்படையானது energy. அது மனதில் மட்டும் உள்ளது. அபரிமிதமாகவுள்ளது. அதை நாம் வெளியிடலாம். வெளியிட்டால் தொழில் 100 மடங்கு பெருகும் என்று அறிய வேண்டும், நம்ப வேண்டும், நம்பியதன் அடிப்படையில் செயல்பட வேண்டும்.
- மனம் பொதுவாகத் தவறானது. தவறான நினைப்பு ஏராளமான சக்தியை எடுத்துக் கொள்கிறது. எல்லாத்தவற்றையும் அழிக்க முன்வர வேண்டும்.
- தவற்றை மேலும் அதற்கெதிரான நல்லதாக மாற்ற வேண்டும்.
- தொழிலை முதன்மையாக்கித் தன் energyக்குத் தொழிலில் முதலிடம் தர வேண்டும்.
- வெளிப்பட்ட energy-யால் தொழில் 5 மடங்கு அல்லது50 மடங்கு பெருகிய பொழுது, பெருகிய நிலையை நிரந்தரமாக்கும் நிர்வாக முறைகளை ஏற்க வேண்டும்.
- மனம் எந்த நேரமும் சந்தோஷத்தால் பொங்கி வழியவேண்டும்.
நன்றி: கர்மயோகி.நெட்