Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,844 முறை படிக்கப்பட்டுள்ளது!

மறைக்கப்பட்ட தமிழனின் கண்டுபிடிப்பு

ramarpillaiமூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய ராமர்பிள்ளை, 1996-ல் ஹாட் டாப்பிக்கில் இருந்தவர். 1999-ல் ஒரு நிறுவனத்தையும் தொடங்கி, ஒன்பது மாதங்களில் 15 லட்சம் லிட்டர் ‘மூலிகை பெட்ரோலை’ உற்பத்தி செய்து விற்பனை செய்தார். விலை மலிவு என்பதால் பலரும் வாங்கினர். அதன் பிறகு ராமர்பிள்ளை மீது விதவிதமான குற்றச்சாட்டுகள், ரெய்டு, வழக்கு என்று பல்வேறு அலைக்கழிப்புகள்ஸ தற்போது வழக்கு விசாரணை முடிவடையும் நிலையில் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் அவர்.

இதற்கிடையே நண்பர்கள் மூலம் டச்சு நாட்டின் மிக முக்கிய ஆய்வகத்தில் இவரது மூலிகை எரிபொருள் சோதனை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் அமெரிக்காவில் காப்பு ரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளார், ராமர்பிள்ளை. அந்தக் காப்புரிமையைப் பெறக் காத்திருக்கும் ராமர்பிள்ளையை சென்னை சூளைமேட்டில் சந்தித்துப் பேசினோம்.

’மூலிகை எரிபொருள் ஃபார்முலா, மூலப்பொருட்களைத் தெரிவிக்கவேண்டும் என்று எனக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் கழுத்தை நெரித்தன. என் அம்மா, தம்பி, தங்கைகளையும் கூட அவர்கள் நிம்மதியாக விடவில்லை. என் மீது மோசடி வழக்கு, சகோதரர் மீது கொலைவழக்குப் போட்டனர். ஒரு தங்கையின் கணவரையும் கொலை செய்தனர்.இவ்வளவையும் தாண்டி இன்று நண்பர்கள் உதவியால், எனது கண்டுபிடிப்பு உலக அரங்கில் அங்கீகாரத்துக்குக் காத்திருக்கிறதுஸ” என்று குதூகல மாகப் பேசிய ராமர்பிள்ளை, தொடர்ந்து…

”என் கண்டுபிடிப்பு பற்றிக் கேள்விப்பட்ட டச்சு நாட்டில் உள்ள டேனிஷ்டெக்னாலாஜிக்கல் இன்ஸ்டிட்யூட் விஞ்ஞானிகள், நேரடியாக சென்னைக்கே வந்தார்கள்.அவர்கள் முன்னிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எனது கண்டுபிடிப்பை நிகழ்த்திக் காட்டினேன். மூலிகை எரிபொருள் உருவாக்குவதற்கு முன்னர் அந்தத் தண்ணீரை சோதித்தார்கள். அது எரியவில்லை. பின்னர் நான் மூலிகை பெட்ரோல் செய்து காட்டியதும், அதை பரிசோதித்த அவர்கள், தண்ணீர்தான் எரிபொருளாக மாறியுள்ளது என்பதை ஒப்புக்கொண்டனர்.

அதைத் தங்கள் ஆய்வகத்தில் பரிசோதித்துப் பார்த்து எனக்கு ஆய்வறிக்கை அளித்தவர்கள், ‘உங்கள் கண்டுபிடிப்பால், மிகக் குறைந்த செலவில் எரிபொருளை உருவாக்க முடியும். இதன் மூலம் உலக அளவில் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளீர்கள்!’ என்று எனக்குக் கடிதம் அனுப்பினர் (நம்மிடம் அந்தக் கடிதத்தை காட்டுகிறார்). மேலும், ‘மற்ற மாற்று எரிபொருள்களுடன் ஒப்பிடுகையில், என்னுடையதுதான் மிகக் குறைந்த செலவில் பெட்ரோல் தயாரிக்கக்கூடியது’ என்றும் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில்தான் காப்புரிமை பெற, கடந்த ஆண்டு ஜூன் மாதம் ‘வேர்ல்ட் இன்டலெக்சுவல் பிராப்பர்ட்டி ஆர்கனைசேஷ’னுக்கு (ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அந்தஸ்து பெற்றது) விண்ணப்பித்தேன். அவர்களும் இந்த எரிபொருளால் இயந்திரத்துக்கு ஏதேனும் பாதிப்பு வருமா என்று ஆய்வு செய்து, அதைத் தங்கள் ஜர்னலில் பதிப்பித்துள்ளனர். இந்தப் பதிப்பு எல்லா நாடு களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்திய காப்புரிமை அதிகாரிகளும் என்னைத் தொடர்புகொண்டார்கள். உலக நாடுகள் ஒப்புக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதால், இந்தியாவும் காப்புரிமை தரத் தயாராக உள்ளதாக வாய்மொழியாகச் சொன்னார்கள். அதோடு, பல்வேறு நாடுகளில் இருந்தும் என்னைப் பற்றி தங்கள் தூதரகம் வாயிலாக விசாரித்துத் தொடர்பு கொள்கிறவர்கள்,’மூலிகை எரிபொருள் தயாரிப்பு ஃபார்முலாவை தர வேண்டாம், உங்களுக்குத் தேவை யானவற்றைச் செய்து தருகிறோம், நீங்களே செய்து கொடுங்கள்’ என்றும் கூறுகிறார்கள். ஆனால், காப்புரிமை முறைப்படி வரட்டும் என்று காத்திருக்கிறேன்.

கலப்பட பெட்ரோலை வேறு ஒரு இடத்தில் இருந்து பெற்று, விநியோகித்ததாக என் மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதைப் பற்றி நான் எதுவும் கூற முடியாது. ஆனால், டச்சு நாட்டில் இருந்து பெறப்பட்ட ஆய்வறிக்கையின் அடிப்படையில், அவர்கள் மேற்கொண்ட சோதனையை கோர்ட்டில் காட்டினோம். அப்போது, ‘ஐரோப்பிய நாடுகளின் தர அடிப்படையில் என்னுடைய மூலிகை எரிபொருளை பரிசோதித்து ஆய்வறிக்கை கொடுத் துள்ளனர். அதில் வெறும் நான்கு சோதனையைக்கூட நடத்தும் வசதி இந்தியாவில் இல்லை. பிறகு எப்படி இது உண்மையில்லை?’ என்று அரசு தரப்பைக் கேட்டபோது, அவர்களால் பதில் கூற முடியவில்லை.

இந்த 10 ஆண்டுகளில் என் மூலிகை எரிபொருளை நவீனப்படுத்தியுள்ளேன். முன்பு 16 ரூபாய்க்கு மூலிகை எரிபொருளைத் தயார் செய்தேன். இப்போது வெறும் எட்டு ரூபாய்க்கே லட்சக்கணக்கான லிட்டர்களை தயாரிக்கத் தயாராக இருக்கிறேன். இந்த மூலிகை எரிபொருள் நிச்சயம் ஐரோப்பிய யூனியன் தரத்தில் இருக்கும்.

13 ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சென்னை, டெல்லி, ஹைதராபாத்தில் நான் நடத்திய ஆய்வுகள், தோல்வியடைந்ததாக அதிகாரிகள் கூறினார்கள். அப்போது அதிகாரிகள், ‘ஒரு குழாயில் பெட்ரோலை மெழுகால் அடைத்து வைத்ததாகவும், தண்ணீர் வெப்பநிலையில் மெழுகு உருகியபோது பெட்ரோல் கலந்ததாகவும்’ சொன்னார்கள். டச்சு விஞ்ஞானிகளிடம் இதைக் கூறியபோது, ‘சமையல் உப்பைக்கொண்டு தண்ணீரை அடைத்து வைக்க முடியும் என்பதுபோல அது ஒரு தவறான வாதம்’ என்றனர்.

நான் இந்திய அரசிடம் எனது கண்டுபிடிப்புக்கு பாதுகாப்புதான் கேட்டேன்.பாதுகாப்பு அளித்தால், முழுக் கண்டுபிடிப்பையும் தருவதாகக்கூறினேன். இப்போது காப்புரிமைக்காக என் முழுக் கண்டுபிடிப்பையும் சர்வதேச அமைப்பிடம் கொடுத்துள்ளேன். எனது வழக்கும் முடிவடையும் நிலையில் உள்ளது. தீர்ப்பு வரும்போது மக்களுக்கு நிஜம் புரியும். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவன் எப்படி இப்படிக் கண்டுபிடிக்கலாம் என்ற எண்ணம் தான் நம் நாட்டில் மெத்தப் படித்தவர்களிடம் உள்ளது. இந்த 10 ஆண்டுகளில் எத்தனையோ கஷ்டம், தொல்லைகள்,அவமானங்கள் எல்லாம் பட்டேன். ஆனால், எனது கண்டுபிடிப்பை எதிர்காலத்தில் ஒவ்வொரு மனிதனும் பயன்படுத்துவான்!” என்கிறார் ராமர்பிள்ளை.

அடுத்தடுத்து பல சர்சைகளை சந்தித்த மனிதர், இப்போது சர்வதேச அளவில் சவாலுக்குப் போயிருக்கிறார், பார்க்கலாம். நல்லது நடந்தால் நாட்டுக்குப் பெருமை!

குறிப்பு :

தானிஷ் பல்கலைகழகம் இவரின் ஆராய்ச்சியை உறுதிபடுத்தி குறைந்த விலையில் மாற்று எரிபொருள் தயாரிக்க முடியும் என்று சான்றிதல் வழங்கியுள்ளது.

மேலும் இவர் இதை மூலிகை பெட்ரோல் என்று கூறவில்லை மாற்று எரிபொருள் என்று தான் சொன்னார். ஊடகங்கள் வைத்த பெயர் தான் மூலிகை பெட்ரோல். கல்வி அறிவு இல்லாததால் அவரால் போராட முடியவில்லை.

நன்றி : ஜூனியர் விகடன்