Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2015
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,372 முறை படிக்கப்பட்டுள்ளது!

சர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2

2*வெந்தயம்:

தினமும் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என்பது ஓரளவுதான் உண்மை. வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். இதில் உள்ள டிரைகோனெல்லின் என்ற வேதிப்பொருள் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மைக் கொண்டது. வெந்தயம் மட்டுமே சர்க்க்ரை நோய்க்கு மருந்து என்று நினைப்பது தவறு. தினமும் 100 கிராம் வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

*தேன்:

சிலர் சர்க்கரைக்கு பதில் வெல்லம் (அ) தேன் சேர்த்துக் கொள்வார்கள். இது தவறு. ரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிக்கும் அளவீடும் தேனுக்கும் சர்க்கரைக்கும் அதிகம். சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து தேன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதுடன் உயர் ரத்த அழுத்தம், நரம்பு பாதிப்பு, விழித்திரை பாதிப்பு, மாரடைப்பு என பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

*சைவம்/அசைவம்:

எந்த உணவானாலும் சரி… சாப்பிடும் உணவின் அளவைப் பொறுத்தும், அந்த உணவின் ரத்தச் சர்க்கரையை உயர்த்தும் அளவைப் பொறுத்தும்தான் சைவம் நல்லதா, அசைவம் நல்லதா என்பதைக் கூற‌ முடியும். ஆனால், பொதுவாக, சர்க்கரை நோயாளிக்கு சைவ உணவுதான் நல்லது. காரணம், நார்ச்சத்து, சைவ உணவுகளில்தான் அதிகம் இருக்கிறது. மேலும், கலோரி, கொழுப்பு குறைவாகவே இருக்கிறது.

*பாகற்காய்:

பாகற்காயில் அல்கலாய்ட்ஸ் என்ற இரண்டு வேதிப் பொருள்கள் இருப்பதால், சர்க்கரை குறைவதற்கு வாய்ப்பு உண்டு. இதில் காணப்படும் ஒரு புரதத்தின் வேதியியல் அமைப்பு இன்சுலினை ஓரளவுக்கு ஒத்துப் போகிற‌து. தவிர, பாகற்காயில் உள்ள நார்ச்சத்து சர்க்கரையைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு நல்ல உணவு. ஆனால், தினமும் பாகற்காய் மட்டுமே சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகிவிடும் என்று உறுதியாக கூறுவதற்கு இல்லை.

*கைகுத்தல் அரிசி: கைக்குத்தல் அரிசி சாப்பிட்டால் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்காது என்று சிலர் நினைப்பதுண்டு. உண்மைதான். கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து இருப்பதால் உடனடியாக ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்காது. ஆனால், கைக்குத்தல் அரிசியையும் அளவோடு சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

நன்றி-விகடன்

சர்க்கரை நோயா..? இனி கவலை வேண்டாம்! – படியுங்க பயன் பெறுங்க..!

 1சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இங்கு பல்வேறு ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருகின்றன, * எப்பொழுதுமே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உணவினைப் பொறுத்தே அமைகின்றது. என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என்பதனை நீங்கள் அறிந்தால் மிக ஆரோக்கியமான வாழ்க்கை உங்கள் கையில்தான். உங்கள் குடும்பத்தில் தாய், தந்தையருக்கு சர்க்கரை நோய் தாக்குதல் இருந்தாலோ அல்லது சர்க்கரை நோய் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தாலோ நீங்கள் `டயட்’ முறையினை பின்பற்ற வேண்டும். * நல்ல நார்ச்சத்து, கொழுப்பில்லாத பால், மோர், பரிந்துரைக்கப்பட்ட பழங்கள், பச்சைக் காய்கறிகள், கீரைகள் இவற்றினை அளவோடு உண்டாலே நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இங்கு பல்வேறு ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருகின்றன,

* எப்பொழுதுமே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உணவினைப் பொறுத்தே அமைகின்றது. என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என்பதனை நீங்கள் அறிந்தால் மிக ஆரோக்கியமான வாழ்க்கை உங்கள் கையில்தான். உங்கள் குடும்பத்தில் தாய், தந்தையருக்கு சர்க்கரை நோய் தாக்குதல் இருந்தாலோ அல்லது சர்க்கரை நோய் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தாலோ நீங்கள் `டயட்’ முறையினை பின்பற்ற வேண்டும்.

* நல்ல நார்ச்சத்து, கொழுப்பில்லாத பால், மோர், பரிந்துரைக்கப்பட்ட பழங்கள், பச்சைக் காய்கறிகள், கீரைகள் இவற்றினை அளவோடு உண்டாலே நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

* ஒரு டீஸ்பூன் வெந்தயத்தினை இரவில் 100 மி.லி., தண்ணீரில் ஊற வைத்து, காலை அந்த நீரினையும், வெந்தயத்தினையும் எடுத்துக்கொள்ள இன்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது.

* 60:20:20 என்ற விகிதத்தில் நார்ச்சத்து மிகுந்த கார்போ ஹைடிரேட், புரதம், நல்ல கொழுப்பு இருக்கவேண்டும். 1500-1800 கலோரி சத்து அவரது வயது, உழைப்பினைப் பொறுத்து கூறப்படுகின்றது.

* உலர்ந்த பழங்கள் உடலுக்கு நல்லது என்றாலும், சர்க்கரை அளவை கூட்டி விடும். ஆனால், பாதாம் 4-6 வரை எடுத்துக் கொள்ளலாம்.

* தக்காளி ஜுஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

* முழு தானியம், ஓட்ஸ், சிறு தானியங்கள், முளை தானியங்கள் இவையே பிரதான உணவாக இருக்கவேண்டும்.

* கொழுப்பற்ற பால் தினமும் 2 கிளாஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

* பட்டாணி, பீன்ஸ், பசலை, பயறு வகைகள் மிக மிக சிறந்தவை.

* ஒமேகா-3 என்ற சத்து மாத்திரையாவது எடுத்துக் கொள்ளுங்கள். மீன் உண்ணும் பழக்கம் இருந்தால் அவர்கள் நன்றாக மீன் எடுத்துக் கொள்ளலாம்.

* பப்பாளி, ஆப்பிள், கொய்யாப்பழம், பேரிக்காய், ஆரஞ்சு இவைகளை அளவோடு எடுத்துக் கொள்ளலாம்.

* பெரிய உணவாக ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளாமல் சிறு சிறு உணவாக நாள் ஒன்றுக்கு 5 முறை எடுத்துக்கொள்ளுங்கள்.

* மூன்று வேளை உணவு அவசியம். 4-5 மணிக்கொரு முறை உணவு எடுத்துக் கொள்வது சர்க்கரை அளவினை சீராய் வைக்கும். எப்போதுமே குறைந்த கார்போஹைடிரேட் கொண்ட ஏதாவது ஒரு உணவினை வெளியில் செல்லும்போது உடன் எடுத்துச் செல்லுங்கள்.

* உங்கள் சர்க்கரை அளவினை நீங்களே தெரிந்துக் கொள்ளும் உபகரணத்தினை கண்டிப்பாய் உடன் வைத்திருங்கள். இதில் நீங்களே உங்களை பரிசோதித்துக் கொள்ளலாம்.

* உடலுக்குச் சத்தான உணவை தேர்ந்தெடுங்கள். சர்க்கரை, உப்பு இரண்டுமே குறைவாக இருப்பதே நல்லது.

* வேக வைத்த உணவுகள், நார்ச்சத்து உணவு, கொழுப்பில்லாத பால், பால் சார்ந்த பிரிவுகள், முழுதானிய உணவு, காய்கறி, பழ உணவுகள் மிக சிறந்தது.

* 3-4 மாதத்தில் உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு என்பதனை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

* பிதீ கி1சி எனப்படும் இந்த பரிசோதனையில் 6-7சதவீதம் என்ற அளவு முறையானது. அதற்கு கூடுதலாக இருப்பின் கடந்த சில மாதங்களாக சர்க்கரை அளவு அதிகரித்து உள்ளது என்பதனையும் அதன் எண்ணைக் கொண்டு (உ-ம் 10.5 சதவீதம்) எந்த அளவு அதிகரித்து உள்ளது என்பதனையும் தெரிந்து உடனடி சீர்ப்படுத்த முயல வேண்டும்.

* ஆல்கஹால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானது. இதில் எந்த சத்தும் இல்லை. ஆனால் கலோரி சத்து மட்டுமே அதிகமாக உள்ளது. மது, நீரிழிவு மருந்துடன் இணைந்தால் பிரச்சினைகளை உருவாக்குகின்றது. வெறும் வயிற்றில் ஆல்கஹால் எடுத்துக் கொண்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு கூடுதல் ஆபத்தை விளைவிக்கும்.

* உடற்பயிற்சி மூலம் எடை குறைப்பு செய்யுங்கள்.

3* வருடத்திற்கு 4 முறையாவது ரத்த அழுத்தத்தினை பரிசோதனை செய்து பாருங்கள்.

* பாதங்களை அன்றாடம் கவனியுங்கள். அடி, காயம் இவை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பாதங்களை சாக்ஸ் அணிந்து கூட சிறிது வெது வெதுப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

* முறையான சர்க்கரை அளவு இல்லாவிடில் சிறு சிறு ரத்தக்குழாய்கள் பாதிப்பிற்குள்ளாகும். குறிப்பாக, கண்கள் பாதிக்கப்படும். எனவே, வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

* நீரிழிவு பல், ஈறு இவற்றினை பாதிக்கும். கவனம் தேவை.

* பிரிவு 2 வகை நீரிழிவு நோயாளிகளுக்கு உணவில் மாற்றமும், உடல் உழைப்பு கூடுதலும் 80 சதவீதம் வரை சர்க்கரை அளவை சீராக்கி விடும்.

* ஆப்பிள் சுமாரான அளவு ஒன்று 21கி கார்போ ஹைடிரேட், 3.7 நார்ச்சத்து, .5கி கொழுப்பு, .3கி புரதம், கலோரி 81 உடையது.

* ஒரு சாதரண சிறிய வாழைப்பழம் 23.7கி கார்போ ஹைடிரேட், 2.4கி நார்ச்சத்து, .5கி கொழுப்பு, 1.0கி புரதம், 93 கலோரி சத்து உடையது.

* காபி குடித்த பிறகு பலருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுகின்றது. பால் இல்லாத காபி குடித்தாலும் சிலருக்கு இது இருக்கின்றது. சிலருக்கு க்ரீன் டீ, சத்து பானம் போன்றவைக் கூட சர்க்கரையின் அளவினை கூட்டுகின்றது. காபியின் சில ரசாயனங்கள் பிரிவு 2 நீரிழிவினை தடுக்கவும் செய்கின்றன. பொதுவில் அவரவர் உடல் வாகினை தெரிந்து இவற்றினை எடுத்துக்கொள்வது நல்லது.

* சர்க்கரை இல்லாதது என எழுதப்பட்ட உணவினாலும் ஏன் இதனை எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு ஏறுகின்றது என சிலர் எண்ணலாம். அந்த உணவில் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து கூடுதலாக இருக்கலாம். கவனம் தேவை.

* நோய் காலத்தில் உடல் அந்த நோயினை எதிர்த்துப் போராடும் பொழுது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடும். நன்கு தண்ணீர் குடியுங்கள். மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பொழுது இவை சர்க்கரையின் அளவினை கூட்டுபவையா என்ற மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.

* அதிக மன உளைச்சல் உள்ள பொழுது உடலில் வெளியாகும் ஹார்மோன்களால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடலாம். இது பிரிவு 2 வகை நீரிழிவு நோயாளிகளிடையே சாதாரணமாகக் காணப்படும் ஒன்று. எனவே, பிராணாயாமம், யோகா, தியான முறையில் மனதினை அமைதியாய் வைத்திருங்கள்.

* பச்சை நிற காலிப்ளவர், பசலைக் கீரை, பீன்ஸ் இவை நிறைய நார்ச்சத்து கொண்டவை. மாவுச்சத்து குறைவாகக் கொண்டவை.

* சைவ உணவும், காய்கறிகளை அதிகமும் உட்கொண்ட 43 சதவீதம் மக்கள் (பிரிவு 2-வைச் சார்ந்த நீரிழிவு நோயாளிகள்) மருந்திலிருந்தே வெளிவர முடிந்தது என அமெரிக்க நீரிழிவு ஆய்வகக் குறிப்பு கூறுகின்றது.

* நீரிழிவு நோயாளிகள் எளிதில் இருதய நோய்க்கு ஆட்படுவர். ஆகவே மேற்கூறிய உணவுமுறை அவர்கள் எடையை குறைத்து, கெட்ட கொலஸ்டிராலையும் குறைக்க பெரிதும் உதவுகின்றது.

பொருத்தமான உணவு :

ஓட்ஸ் போல் சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தி, சீராக்கும் ஒரு உணவுக்கு நிகர் ஓட்ஸ் மட்டுமே. ஓட்ஸ் உணவும் கார்போ ஹைடிரேட் வகையினைச் சேர்ந்ததுதான். இருப்பினும், இது நல்ல கார்போ ஹைடிரேட். செரிக்க கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும். எளிதில் ரத்தத்தில் சர்க்கரை அளவினை ஏற்றாது.

அடிக்கடி அல்லது அன்றாடம் ஓட்ஸ் உணவினை எடுத்துக்கொள்ள ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். இதிலுள்ள நார்சத்து வயிற்றினை நிறைவாக வைப்பதோடு எடை குறைப்பிற்கும் உதவும். டைப் 2 நீரிழிவு பிரிவினரின் எடை குறைப்பிற்கு உதவும்.

சர்க்கரை நோயும்  சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2