வரலாறு காணாத மழையை பார்த்தாச்சு. ‘மழை வருமா’ என, வானிலை அறிக்கை கொடுக்க ரமணன் இருக்கார்; ஆனால், ‘மிஸ் கொசு’ உபயத்தால், எளிதில் பரவும் மழைக்கால நோய்கள் பற்றி, நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக, மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களின் நலனை கருதி, இதோ…
மஞ்சள் காய்ச்சல்:
கிருமி: ப்ளாவி வைரஸ்
பரவும் முறை: தொற்றுநோய் கொசுக்களால் மட்டும் பரவும். இதில், மூன்று நிலைகள் உள்ளன.
ஆரம்ப நிலை:தலைவலி, உடல்தசை மட்டும் மூட்டுக்களில் வலி, காய்ச்சல், முகத்தில் சிவப்புத்தன்மை, பசியின்மை, வாந்தி, மஞ்சள் காமாலை பொதுவானது. இந்த அறிகுறிகள் உடனே மறைந்துவிடும் வாய்ப்பு உண்டு.
ஆற்றல் குறையான கால அளவு நிலை: 3 – 4 நாட்களில் காய்ச்சலும், மற்ற அறிகுறிகளும் மறைந்து போகும். இதனால், மக்கள் பலர் சுகமாகி விடுவர். ஆனால், சிலர் அபாயமான மூன்றாம் நிலையை, 24 மணி நேரத்தில், மயக்க நிலையை அடைவர்.
அதிமயக்க நிலையின் கால நிலை: பல உறுப்புகளின் செயலிழப்பு, இதயம், ஈரல், சிறுநீரகம், ரத்தக்கசிவு, மூளையில் ரத்தக்கசிவு, மூளை செயலிழத்தல் ஏற்படலாம்.
அறிகுறிகள்: தாறுமாறான இதய துடிப்பு, ரத்தக்கசிவு, சிறுநீர் கழித்தல் குறைந்து விடும். மனப்பதற்றம், வாந்தி, உடல்தசை வலி, காய்ச்சல், தலைவலி, மஞ்சள் காமாலை, தசைவலி, கண்கள் சிவத்தல் மற்றும் கோமா நிலையை கூட அடையலாம்.
விளைவுகள்:கோமா, இறப்பு.
தடுப்பு முறைகள்:
*மஞ்சள் காய்ச்சல் பரவியுள்ள பகுதியில் நீங்கள் பயணிக்க நேரிட்டால், கொசு தடுப்பு சாதனங்களை பயன்படுத்தவும்.
*உடல் முழுவதும் மூடும்படியான உடைகளை அணியவும்.
*தோலுக்கடியில் தடுப்பு ஊசி போட வேண்டும்.
சிகிச்சை முறை:நோய்க்கேற்ற சிகிச்சையை, உரிய மருத்துவரை ஆலோசித்து, உடனே சிகிச்சை மேற்கொள்ளுதல் நலம் பயக்கும்.
குறுகிய கால தடுப்பு முறைகள்:
*’குளோரின்’ கலந்த நீர் காய்ச்சிக் குடித்தல்
*ஹெப்படைடிஸ் ஏ வைரஸ் தடுப்பு ஊசி
*மலேரியா தடுப்பு முறை
*காய்ச்சலின் அறிகுறி கண்டவுடன், உங்கள் மருத்துவர் மூலம் கண்டறிந்தவுடன் சிகிச்சை மேற்கொள்ளுதல்.
முக்கிய குறிப்புகள்:
*இருப்பிடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
*செருப்பு அணியாமல் நடக்கக் கூடாது
*சாலைகளில், வீடுகளின் வெளிப்புறத்தில் எச்சில் துப்புவதை தவிர்க்கவும்
*வீட்டிற்குள் வந்தவுடன் கை, கால்களை சுத்தமாகக் கழுவவும்
*பழைய, மீதமான உணவை பிரிட்ஜில் வைத்து மீண்டும் சூடுபடுத்தி உண்ணக் கூடாது
*வீட்டிற்கு அருகில் உள்ள நீர் தேக்கங்களை அப்புறப்படுத்தவும்.
டைபாய்டு காய்ச்சல்:
கிருமி:சல்மோனெலி டைபி.இந்த கிருமி மிகவும் பொதுவானது.
பரவும் முறை:அசுத்தமான உணவு, குளிர்பானங்கள் மற்றும் குடிநீர் வழியே பரவும்.
ஆரம்ப அறிகுறிகள்: காய்ச்சல், மாறுபட்ட உடல் சோர்வு, உடல்நல மாற்றம், வயிற்று வலி, வயிற்றிலும் அல்லது மார்பிலும் சிலருக்கு அரிப்பு தோன்றும். ‘ரோஸ் ஸ்பாட்’ என்றழைக்கப்படும் சிறு சிவப்புப் புள்ளிகளின் தோற்றம், வயிற்றில் குறிப்பிட்ட இடத்தில் பலவீனம், மலத்தில் ரத்தம், குளிர், பதற்றம், நிலையற்ற மனநிலை, தீவிர மயக்க நிலை, மெதுவான சோம்பல் நிலையுடன் சோர்வாகக் காணப்படும், உடலில் சோர்வு, தளர்ச்சி மற்றும் பலவீனம்.
பரிசோதனைகள்:
முழுமையான ரத்தப் பரிசோதனை
முதல் வாரம் – ரத்த வளர்சோதனை
இரண்டாவது வாரம் – ப்ளோரசன்ட் உடல் எதிர்ப்பிகள்
மூன்றாவது வாரம் – ரத்த தட்டை அணுக்கள் குறைவுபடும்
நான்காவது வாரம் – மலம் சோதனை
விளைவுகள்: குடலில் ரத்தக்கசிவு, குடலில் துளை ஏற்பட்டு ரத்தம் வெளியேற்றம், சிறுநீரகம் செயலிழத்தல்
எலி காய்ச்சல்
கிருமி: லெப்டோஸ்பைரா பாக்டீரியா
பரவும் வழி:அதிக எண்ணிக்கையாக எலி போன்ற பிராணிகளின் சிறுநீர் மூலம் பரவும்.
அறிகுறிகள்: 4 முதல் அல்லது 14 நாள் அன்று நோயின் அறிகுறி தென்படும்.
முதல் நிலை:சளிக்காய்ச்சல் போல் தென்படும். வறட்டு இருமல், அதிகமான காய்ச்சல், பயங்கர தலைவலி, உடல்வலி, வாந்தி, பேதி மற்றும் உடலில் நடுக்கம்.
இரண்டாம் நிலை:மூளைக்காய்ச்சல், ஈரல் பாதிப்பும், மஞ்சள் காமாலை, சிறுநீரக செயலிப்பு.
பரிசோதனை – நோயறியும் ஆய்வுகள்:
*ரத்தத்தில் எதிரூக்கிகள் அறிதல்
*முழுமையான ரத்தப் பரிசோதனை
*பெருமூளை தண்டு வட மண்டலம்
*ஈரல் செரிமான பொருள் வகை அறிதல்
*சிறுநீர் சோதனை
விளைவுகள்:*மூளைக்காய்ச்சல், ரத்தக்கசிவு
ஹெபடைடிஸ் ஏ வைரஸ்
கிருமி: ஹெபடைடிஸ் ஏ வைரஸ்
பரவும் முறை:வெளி உணவகங்களின் மூலம் உணவு உண்பதாலும், அசுத்தமற்ற முறையில் உணவு தயாரிப்பதன் மூலம் மலக்கழிவுகளாலும் ஏற்படும். சாக்கடை நீர் கலப்பினாலோ, கழிவுப் பொருட்களினால் உண்டாகிய காய், கனிகள் உண்பதன் மூலம் பரவ வாய்ப்புண்டு. நோய்த் தாக்கப்பட்டவரின் ரத்தம் அல்லது மலம் மூலம் பரவும்.
அறிகுறிகள்:தீவிரமற்ற வைரஸ் எனினும் அதன் தாக்கம், குறிப்பாக பெரியவர்களுக்கும் பல மாதங்கள் வரை நீடிக்கும். கருமையான சிறுநீர், மயக்கம், தோலரிப்பு, பசியின்மை, காய்ச்சல், வெளிர் அல்லது வண்ணமில்லா மலம், மஞ்சள் நிறத் தோல், கண்கள் மஞ்சளாகி, காமாலை காணப்படும்.
பரிசோதனை:மருத்துவ பரிசோதனையின் போது ஈரல் வீக்கமும், அதன் பாதிப்பும் மருத்துவர் கண்டறிவார்.
ரத்த பரிசோதனைகள்:
ரத்தத்திலுள்ள AST, ALT அளவுகள் அதிகரித்திருக்கும்.
ரத்தத்தில் Anti HAV காணப்படும்.
ரத்தத்தில் Anti Hav of lgM வகை காணப்படும்.
ஈரல் செயல் சோதனை.
விளைவுகள்:
ஆயிரத்தில் ஒருவருக்கு அச்சுறுத்தும் ஹெப்படைடிஸ் உயிர்க்கு அச்சமூட்டும்.
தடுப்பு முறைகள்:
*நோய் கிருமி பரவாமல் உரிய முறைகளை மேற்கொள்ளல்
*கைகளை சுத்தமாகக் கழுவவும்
*சுத்தமற்ற நீரையும், உணவையும் தவிர்க்கவும்
*தடுப்பு ஊசி, இந்நோய் பரவியிருக்கும் இடங்களுக்குச் செல்லும் முன், இந்த தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால் பாதுகாப்புக் கொடுக்கும்.
பயணிப்பவர் கடைபிடிக்க வேண்டியவை:
*பால் பொருட்களைத் தவிர்த்தல். பச்சையாகவோ அல்லது குளிரூட்டப்பட்ட இறைச்சி மற்றும் மீனை தவிர்க்கவும்.
மருத்துவர் பிரபுராஜ் –
pr******************@gm***.com
மழைக்கால நோய்கள் ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொரு விதமான காரணிகள் உள்ளதால், ஒரே தடுப்பூசி தயாரிக்க முடியாது; உலக சுகாதார நிறுவனமும், காலராவுக்குக்கூட தடுப்பூசியை பரிந்துரைப்பதை நிறுத்தி விட்டது. :- இளங்கோ – பொது சுகாதார சங்கத்தின் தமிழக தலைவர்
பாதுகாப்பான குடிநீர், சுகாதாரமான உணவு முறையும் தான், மழைக்கால நோய்களைத் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, நிலவேம்பு கஷாயம் தரப்படுகிறது. ஆங்கில மருத்துவத்தில் குறிப்பிடும் படியாக மருந்து இல்லை. :- குழந்தைசாமி – பொது சுகாதாரத் துறைஇயக்குனர்