Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2015
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,881 முறை படிக்கப்பட்டுள்ளது!

கதையல்ல நிஜம்!

என்னங்க..! உங்க அம்மாவை சேர்த்த ‘முதியோர் இல்லத்தில்’ இருந்து கடிதம் வந்திருக்கு . “உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க”…!!!என்ற மனைவியை திரும்பிப் பார்த்தான் அவன்.

ஏன் என்னவாம் …?

இப்ப தானே போன மாசம் போய் பார்த்துட்டு வந்தேன் என்றவனிடம் “இந்தாங்க கடிதத்தை வாசித்துவிட்டு போய் என்னனுதான் பாத்துட்டு வாங்க”…? நீங்க பாட்டுக்கும் இது ‘தான் சாக்குன்னு’ இப்பவே கூட்டிகிட்டு வந்துடாதீங்க…!

இங்க ஏற்கனவே ஏகப்பட்ட செலவு இருக்கு..! இதுக்கு நடுவுலே அவங்களை வேற பாக்க முடியாது. ‘பொண்ணு படிப்புச்’ செலவுக்கே இங்க ‘முழி’ பிதுங்குது, இதுலே உங்க அம்மா ‘வைத்திய செலவு’ வேற! செய்யமுடியாது பார்த்துக்கங்க’…என்றாள்

சரி… சரி… விடு நான் பார்த்துக்கறேன் என்ற அவன் மனதிலும் அம்மாவை பற்றிய இனம் புரியாத பயமும், அதே நேரம் மனைவி மீது கோபம் கோபமாய் வந்தது.

மறுநாள் காலை அம்மாவை பார்க்க’முதியோர் இல்லம்’ சென்ற சந்துரு அங்கிருந்த மேடத்திடம் விபரம் கேட்க,  அவங்க அம்மா கொடுக்க சொன்னதாக அவர்கள் அவன் கையில் ‘ஒரு கவரை’ கொடுத்தாங்க.

அதை பிரித்த பார்த்த போது அவன் பெயருக்கு ‘2 லட்ச ரூபாய்க்கான டி.டி யும்’, ஒரு கடிதமும் இருந்தது. படித்த அவன் அதிர்ந்து போனான் .

அதில்

அன்பு மகனுக்கு,
உன் தந்தை இறந்தபோது ‘உன்னை நான் சுமையாக’ அப்போது நினைக்கவில்லை.  இப்போதும் உனக்கு ‘நான் சுமையாக’ இருக்க விரும்பவில்லை.  உன் மனைவி எதிர்பார்ப்பது போல் என்னால் ‘உடல் உழைப்பை தர முடியவில்லை.  நீ கஷ்ட படுவதை பார்க்க என்னால் முடியவில்லை.  இந்த நிலையில் என்னால் என்ன செய்யமுடியும் ?

ஆனாலும் உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று ஏங்கிக்கொண்டிருந்தபோது செல்வந்தர் ஒருவருக்கு அவசரமாக கிட்னி தேவைப்பட்டது. அதனால் எனது “கிட்னீயை” விற்று அந்தப்பணத்தை உனக்கு கொடுத்திருக்கிறேன்.  கடனையெல்லாம் அடைத்து விட்டு என் ‘பேத்தியை’ நன்கு படிக்க வை..!.

அவள் நாளை ‘உன்னை உன் மனைவியை’ காப்பாத்துவா.! பாத்துக்க எல்லாத்தையும், நீங்க எல்லாம் ‘நல்லாருக்க’ நான் அந்த கடவுள் கிட்ட வேண்டிகிறேன்…! நான் போகிறேன்…? அன்பு அம்மா …!

அவன் அப்படியே ‘இடிந்து’ போய் விட்டான். இன்றுவரை ‘மனதிற்குள் சொல்லி’… சொல்லி… ‘அழுது’ கொண்டுதான் இருக்கிறான்…!
.
“நண்பா…! இது ஒரு “கதையல்ல நிஜம்”…!
.
நீதி: ‘அன்பு’ என்பது ‘அன்னையிடம்’ மட்டுமே எல்லா காலங்களிலும் ‘அமுதமாய்’ கிடைக்கும். ‘ “தாயின் அன்பை யாருக்காகவும் தள்ளி வைக்காதீர்கள்”…!

உலகத்தில் சிறந்த தலைவரும் வழிகாட்டியுமான முஹம்மது நபி (ஸல்) தாய் பற்றிக் குறிப்பிடுவதைப் பாருங்கள்:

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்)அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகுயார்?’ என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘பிறகு, உன் தந்தை’ என்றார்கள். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) – புகாரி 5971

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நற்செயல்களில் சிறந்தது எது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘தொழுகையை அதற்குரிய வேளையில் தொழுவது” என்று கூறினார்கள். ‘பிறகு எது (சிறந்தது?)” என்று கேட்டேன் அவர்கள், ‘பிறகு
தாய்தந்தையருக்கு நன்மை செய்வது” என்று பதிலளித்தார்கள். நான், ‘பிறகு எது (சிறந்தது?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இறைவழியில் அறப்போரிடுவதாகும்” என்று பதில் சொன்னார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) – புகாரி  2782

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (இருக்கிறார்கள்)’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு’ என்றார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) – புகாரி  5972
 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இறைவனுக்கு இணைகற்பிப்பது, தாய் தந்தையரை புண்படுத்துவதும், கொலை செய்வது, பொய்ச் சத்தியம் செய்வது ஆகியன பெரும் பாவங்களாகும்.  அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) – புகாரி – 6675

‘ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)’ என்றார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) – புகாரி  5973