என்னை கவர்ந்த இஸ்லாம்!

”இஸ்லாம் என்பதும் ஏதோ ஒரு சடங்குகள் அடங்கிய மதம். மற்ற மதங்களில் உள்ள கடவுள் போல் அரபியாவில் மரித்த ஒருவரைத் தான் அல்லாஹ் என்று கூறி அவரது சிலையை வணங்குகிறார்கள்.” இப்படித் தான் மாற்று மத சகோதர சகோதரிகள் பலர் நினைத்துள்ளனர். இதே கருத்தை உடைய பிராமண சகோதரி சுதா தன்னுடன் உள்ள கல்லூரி தோழிகளின் வித்தியாசமான செயல்களால் கவரப்பட்டார். சூடான பானத்தை அருந்தும் போதி ஊதி சாப்பிடக் கூடாது என்றும் சாப்பிடும் போது வீணாக்காமல் கையை சூப்பிச் சாப்பிடனும் போன்றன நபிகளாரின் நபிவழி என்பதை அறிந்து இஸ்லாத்தின் பால் ஆர்வம் கொண்டார். வணங்கக்கூடிய இறைவனது இலக்கணம் பற்றி அல்குர்ஆன் ”(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. ” என்று கூறியுள்ளது. .இந்த கருத்து இவரை உண்மையான கடவுள் யார் என்பதை காட்டிக் கொடுத்து. மேலும் விவரம் அறிய சகோதரியின் பேச்சை கேட்கவும்..