Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2011
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,935 முறை படிக்கப்பட்டுள்ளது!

இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த கேள்வி-பதில்

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு வழிகாட்டுவதற்காக, தினமலர் நாளிதழ் மற்றும் எஸ்.வி.எஸ்., கல்வி நிறுவனங்கள் சார்பில் உங்களால் முடியும் நிகழ்ச்சி, திருப்பூரில் நேற்று நடந்தது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர் கேட்ட கேள்விகளுக்கு, அண்ணா பல்கலை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் மற்றும் கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி ஆகியோர் அளித்த பதில்கள் வருமாறு:

பெண்களுக்கு பி.இ., சிவில் இன்ஜினியரிங் படிப்பு ஒத்துவருமா?
ஜெயபிரகாஷ் காந்தி: படிப்பில் ஆண், பெண் பேதமில்லை. எந்த படிப்பும் பெண்கள் படிக்கலாம்;, பணியாற்றலாம். கல்லூரியை தேர்வு செய்யும்போது, அருகாமையில் இருக்கும் கல்லூரி என்பதற்காக தேர்வு செய்யக் கூடாது; அதை விட, நல்ல கல்லூரிகள் பல இடங்களில் இருக்கும். அதனால், நல்ல கல்லூரியை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். அருகில் உள்ள கல்லூரியில் படித்தால், வேலை மட்டும் அருகில் கிடைக்குமா? வெளியே செல்ல வேண்டும்.

மார்க் ஷீட் வருவதற்கு முன், கவுன்சிலிங் விண்ணப்பம் அனுப்பி விட்டேன்; தற்போது என்ன செய்வது?
ரேமண்ட் உத்தரியராஜ்: தவறில்லை, தற்போது மார்க் ஷீட் வந்ததை ஜெராக்ஸ் எடுத்து, விண்ணப்ப எண் குறிப்பிட்டு அண்ணா பல்கலைக்கு கடிதம் எழுதுங்கள்; ஏற்றுக்கொள்ளப்படும்.

முன்னாள் ராணுவத்துக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு உள்ளது?
ரேமண்ட் உத்தரியராஜ்: 150 இடங்கள் உள்ளன. இதற்கு என தனியாக முதல் நாள் கவுன்சிலிங் நடக்கும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை சதவீதம் ஒதுக்கீடு?
ரேமண்ட் உத்தரியராஜ்: மூன்று சதவீதம் ஒதுக்கீடு உள்ளது. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சதவீதம் வரும். மாற்றுத்திறனாளிகளுக்கு என நடக்கும் கவுன்சிலிங்கிலும் பங்கேற்கலாம்; பொது கவுன்சிலிங்கிலும் பங்கேற்கலாம்.

பி.டி.எஸ்., தேர்வு செய்துள்ள நிலையில், மெடிக்கல் வெயிட்டிங் லிஸ்ட் கவுன்சிலிங்கிலும் பங்கேற்க முடியுமா?
ஜெயபிரகாஷ் காந்தி: நிச்சயம் முடியும். பி.டி.எஸ்., எடுத்து விட்டு வெளியில் வரும் போது, தவறாமல் வெயிட்டிங் லிஸ்ட் கவுன்சிலிங் குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் பதிவு செய்து வர வேண்டும். எம்.பி.பி.எஸ்., வெயிட்டிங் லிஸ்ட் கவுன்சிலிங் வரும்போது அழைப்பு வரும்.

இந்தாண்டு நான்கு இடங்களில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடக்குமா?
ரேமண்ட் உத்தரியராஜ்: இதுவரை அதுகுறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

கவுன்சிலிங் விண்ணப்பம் பென்சிலில் மட்டும் தான் பூர்த்தி செய்ய வேண்டுமா; பால்பாயின்ட் பேனாவில் பூர்த்தி செய்யலாமா?
ரேமண்ட் உத்தரியராஜ்: பென்சிலில் பூர்த்தி செய்தால், தவறு இருந்தால் அழித்து திருத்திக் கொள்ளலாம். அதற்காகவே பென்சிலில் எழுத அறிவுறுத்தப்படுகிறது. பேனாவில் பூர்த்தி செய்திருந்தாலும் தவறில்லை.

கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்புக்கு எதிர்காலம் உள்ளதா?
ஜெயபிரகாஷ் காந்தி: அண்ணா பல்கலை உள்ளிட்ட நல்ல கல்லூரிகளில் இடம் கிடைத்தால் நிச்சயம் படிக்கலாம்.

அண்ணா பல்கலை கழகம், நிகர்நிலை பல்கலை கழகம் வித்தியாசம் என்ன ?
ஜெயபிரகாஷ் காந்தி: அண்ணா பல்கலை பாடத்திட்டம் ஒரே மாதிரியாக இருக்கும், நிகர்நிலை பல்கலைகள் தாங்களாகவே பாடத்திட்டம் தயாரிக்கின்றன. வித்தியாசம் பெரிய அளவில் இல்லை. வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு அண்ணா பல்கலை கழகத்தில் படித்தால் சிறந்தது.

நன்றி: கல்விமலர்