Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2011
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,289 முறை படிக்கப்பட்டுள்ளது!

கண்களைப் பாதுகாக்கும் கிரீன் டீ

அதிகாலையில் எழுந்த உடன் டீ குடிக்காவிட்டால் சிலருக்கு எதையோ இழந்தது போல இருக்கும். கிரீன் டீ எனப்படும் பச்சைத் தேநீர் அருந்துவது பலரிடம் இன்றைக்கு பிரபலமடைந்து வருகிறது. உடலுக்குத் தேவையான ‘ஆண்ட்டி ஆக்ஸ்டெண்ட்” கிரீன் டீயிலிருந்து மிக அதிக அளவில் கிடைக்கிறது. வைட்டமின் ‘சி” யிலிருந்து கிடைக்ககூடிய ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அளவை விட 100 மடங்கும் வைட்டமின் ‘ஈ” யிலிருந்து கிடைப்பதைவிட 25 மடங்கும் அதிகம் கிரீன் டீ யில் கிடைப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக பறிக்கப்பட்ட தேயிலை உடனடியாக உலர்த்தபடாவிட்டால் வாடி வதங்கி ஆக்ஸிஜனேற்றம் அடந்து அதில் உள்ள குளோரோபில் எனப்படும் பச்சையங்கள் சிதைவுற்று ‘டானின்” வெளிவருகிறது. இதுவே டீயின் துவர்ப்பு மற்றும் கசப்புத் தன்மைக்கு காரணமாகிறது.இது ஒருவகையான நொதித்தல் வினை போன்றதாகும்.
கிரீன் டீ தயாரிப்பில் இவ்வாறு நொதிக்க விடாமல் இளங்குருத்து தேயிலைகள் உலர வைக்கும் முன்பாக மிதமாக சூடாக்கப்படுவதால் அதில் உள்ள நொதிகளின் வினை மந்தமாக்கப் பட்டு கசப்பு சுவை தரக்கூடிய ‘பாலிபீனால்கள்” சிதையாமல் பாதுகாக்கப் படுகிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
கிரீன் டீயில் எபிகேடசின், எபிகேடசின் -3- கேலேட், எபிகேலோகேடசின், எபிகேலோ கேடசின் ஆகியவற்றோடு ஃபுளூரைடுகள், மாங்கனீசு, பொட்டாசியம், அரோடினாய்ட்ஸ், காஃபின், தெயோப்ஃலின், தெயோஃபிளேவின் போன்றவை காணப்படுகின்றன.
வசீகர தோற்றம்
உடம்பில் உள்ள கொழுப்புகளின் சிதைவை வேகப்படுத்தி, கார்போஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுப் பொருட்களின் செரிமானத்தை மந்தப் படுத்தவும்செய்வதால் ஒபிஸிட்டி எனப்படும் உடற்பருமனை குறைக்கிறது.
தோலில் சீக்கிரமே சுருக்கம் வந்து முதுமையடைவதை தடுப்பதில் கிரீன் டீ முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு நோய்களையும், வயோதிக தன்மையையும் ஏற்படுத்தும் அணுக்களுக்கு எதிராக செயல்படும் மூலப்பொருளுளான கேக்டிக்கைன்ஸ் அதிக அளவு கிரீன் டீ யில் காணப்படுகிறது.
கிரீன் டீ இலைகள் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு,முக வசீகரத்தைத் தருவதோடு புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்தும் காக்கிறது.
பற்களை பாதுகாக்கும்
ஈறுகளை பலவீனமாக்கும் பாக்டீரியாக்களை அழித்து பற்களை பலப்படுத்துவது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பற்கள் விழுவதற்கு காரணமாக இருக்கும் ப்ரீடாண்டல் நோயையும், கிரீன் டீ குடிப்பதன் மூலம் தடுக்க முடியும்.கிரீன் டீ யில் உள்ள ஃப்ளூரைடு பற்சிதைவு,பற்குழிகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
வாயில் உற்பத்தியாகக் கூடிய ‘பாக்டீரியா”க்கள் வளர்ச்சியைத் தடுக்கவும்,அதன் காரணமாக வரும் பல் சம்பந்தப்பட்ட நோய்கள்,வாய் துர்நாற்றம் போகவும் உதவுகிறது.
புற்றுநோய் செல்களை அழிக்கிறது
கிரீன் டீயிலுள்ள பாலிபினால்கள் டியூமர் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.அவற்றின் DNA உருவாக்கத்தை தடுப்பதோடு நல்ல திசுக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கான்சர் திசுக்களை அழிக்கின்றன.
கிரீன் டீ பாலிபினால்கள் அமிலோஸ் சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரையைத் தடுத்து, ஸ்டார்ச் மெதுவாக சிதைவடையச் செய்வதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப் படுகிறது.அத்துடன் இது ‘இன்சுலீனின்”செயல்பாட்டையும்”அதிகரிக்கிறது.
கண்களை காக்கும் டீ
கிரீன் டீயில் உள்ள கேட்டிக்கைன்ஸ் வயிற்றில் இருந்து குடல் வழியாக பயணித்து லென்ஸ், ரெக்டினா மற்றும் கண்களில் உள்ள திசுக்களை அடைகிறது. இதனால் கண்களின் திசுக்கள் பலப்பட்டு க்ளுக்கோமா உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
எலும்புகளை பலப்படுத்துகிறது.
ஆர்த்ரைட்டீஸ் எனப்படும் எலும்பு சம்பந்தமான நோய்களிலிருந்தும் காக்கிறது..மூட்டுக்களை பலப்படுத்துவதிலும் கிரீன் டீ யின் பங்கு உண்டு.
இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புச்சத்து LDL ,டிரைகிளிசரைடுகளின் அளவைக்கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பு எனப்படும் HDL ன் அளவை அதிகரிக்கச்செய்கிறது.
கேக்டிக்கைன்ஸில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ அதிக அளவில் உள்ளது. இதனால் பச்சைத்தேயிலை கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி, சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
இத்தனை நன்மைகளை அடக்கியுள்ள பச்சைத்தேயிலையை அதிக அளவில் பருகுவது பல்வேறு பக்க விளைவுகளுக்கு காரணமாக அமையும் என்கின்றனர் மருத்துவர்கள்