Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2013
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,937 முறை படிக்கப்பட்டுள்ளது!

நான் – ஸ்டிக் பாத்திரம்

nonstickஉ‌ங்க‌ள் ‌வீ‌ட்டி‌ல் நா‌ன்‌ ‌ஸ்டி‌க் வாண‌லி ம‌ற்று‌ம் நா‌ன் ‌ஸ்டி‌க் தவா உ‌ள்ளதா? ஆ‌ம் எ‌ன்றா‌ல் இ‌னி முழு‌ச் சமையலு‌க்கு‌ம் அதையே‌ப் பய‌ன்படு‌த்துவது ந‌ல்லது.

அதாவது ம‌ற்ற பா‌த்‌திர‌ங்க‌ளி‌ல் கா‌ய்க‌றிகளை‌ச் சமை‌க்கு‌ம் போது அத‌ன் ச‌த்து‌க்க‌ள் வெ‌ளியா‌கி ‌விரையமா‌கி‌ன்றன.

எனவே நா‌ன் ‌ஸ்டி‌க் அதாவது எ‌ண்ணெ‌ய் ஒ‌ட்டாத வகை‌யி‌ல் வடிவமை‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம் பா‌த்‌திர‌ங்க‌ளி‌ல் கா‌ற்க‌‌றிகளை சமை‌ப்பத‌ற்கு‌ப் பய‌ன்படு‌த்‌தினா‌ல் அத‌ன் மூல‌ம் கா‌ய்க‌றிக‌ளி‌ல் இரு‌ந்து முழு ச‌க்‌தியு‌ம் நம‌க்கு‌க் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் சமைய‌ல் ‌நிபுண‌ர்க‌ள்.

மேலு‌ம், மு‌ட்டை பொ‌ரி‌ப்பத‌ற்கு‌ இதுபோ‌ன்ற நா‌ன் ‌ஸ்டி‌க் வாண‌லி அ‌ல்லது தவாவை‌ப் பய‌ன்படு‌த்‌தினா‌ல் ‌மிகவு‌ம் ‌சிற‌ப்பாக இரு‌க்கு‌ம் எ‌ன்று‌ம் ஆலோசனை வழ‌ங்கு‌கிறா‌ர்க‌ள்.

எதுவாக இரு‌ந்தாலு‌ம் ‌நா‌ன் ‌ஸ்டி‌க் பொரு‌ட்க‌ளி‌ல் அத‌ற்கென இரு‌க்கு‌ம் மர‌க் கர‌ண்டியை ம‌ட்டு‌ம் பய‌ன்படு‌த்தவு‌ம். ‌மிருதுவான நா‌ர்களை‌க் கொ‌ண்டு தே‌ய்‌த்து கழு‌வினா‌ல் ‌நீ‌ண்ட நாளை‌க்கு நா‌ன் ‌ஸ்டி‌க் தவா‌க்க‌ள் ‌நிலை‌த்து வரு‌ம்.

நான் – ஸ்டிக் கடாய், தவா போன்ற பாத்திரங்களை பயன்படுத்துகிறீர்களா? கீழே உள்ள குறிப்புகளை படித்து, மனதில் பதித்துக் கொள்ளவும்.
* குறைந்த மிதமான சூடு போதுமானது.
* சமைக்கும் பொருட்கள் ஏதுமின்றி, தீயின் மேல் இருக்கக் கூடாது. அப்படி அதிக நேரம் வைத்தால், பூசப்பட்ட கோட்டிங் பாழாகி விடும்.
* மென்மையான துணி அல்லது ஸ்பாஞ்ச் போன்றவற்றால் துடைக்க வேண்டும்.
* உபயோகிக்கும் முன்பும், பின்பும், பாத்திரத்தை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும்.
* சுத்தம் செய்யும் போது, சோப்புத் தூள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். கிளீனிங் பவுடர் பயன்படுத்தக் கூடாது.
* கூர்மையான உலோகக் கரண்டி மற்றும் கத்தியை பாத்திரத்தில் பயன்படுத்தக் கூடாது.
* மரத்தினாலான கரண்டியோ அல்லது பிளாஸ்டிக் கரண்டியோ பயன்படுத்துவது நல்லது.
* நான் – ஸ்டிக் பாத்திரங்களை, மற்ற பாத்திரங்களோடு உரசல் ஏற்படாமல், அதற்கென்று உள்ள ஆணியில் மாட்டி பாதுகாக்க வேண்டும்.
* பல முறை உபயோகித்த பின், சில காரணங்களால் பாத்திரத்தில் கறையோ அல்லது படிவமோ தென்படலாம். அச்சமயம், பாத்திரத்தின் பாதி அளவிற்கு நீர் ஊற்றவும். அதில், ஒரு தேக்கரண்டி ப்ளீச்சிங் பவுடரை கலக்கவும். சிறிது வினிகர் ஊற்றவும். பிறகு மிதமான சூட்டில், பத்து நிமிடங்கள் சூடேற்றவும். கொதி வரும் நிலையில், மரக்கரண்டி கொண்டு, அழுத்தமில்லாமல் தேய்த்தால், சுத்தமாகி விடும். பின், சோப்பு நீரில் கழுவி, சிறிது எண்ணெய் தடவி பயன்படுத்தலாம்.

தொடர்புடைய ஆக்கங்கள்

  1. பல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..!