ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப் பகுதியில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வனத்துறை சார்பாக புதிய “பேக்கேஜ் டூர்’ திட்டம்
வரும் ஏப்ரல் முதல் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனைமலை புலிகள் காப்பக பகுதியிலுள்ள டாப்சிலிப் பகுதியில் புலி, சிறுத்தை, மான், காட்டுமாடு, பல்வேறு விதமான குரங்குகள் என அதிக அளவில் வனவிலங்குகள் உள்ளன. இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து தங்கி வனவிலங்குகளை ரசிப்பர். சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக வனத்துறை புதிய டூர் பேக்கேஜை வரும் ஏப்ரல் முதல் தேதி முதல் அறிமுகப்படுத்துகிறது. இந்த பேக்கேஜ் மதியம் 12.00 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 11.00 மணிக்கு நிறைவு பெறும். இதில், உணவு, தங்குமிடம், யானை சவாரி அடங்கும்.
இதற்கான கட்டணம் 4,300 ரூபாய் இரண்டு நபர்களுக்கு வசூலிக்கப்படும்.
கூடுதல் நபர் ஒன்றுக்கு 2,150 ரூபாய் வீதம் வசூலிக்கப்படும்.
விபரங்களுக்கு தொடர்பிற்கு
மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குநர் அலுவலகத்தையும்,
04259 – 225356, 235385 என்ற தொலைபேசி எண்ணிலும் அணுகலாம்.
நன்றி: தினமலர்
டாப்சிலிப் எங்கே உள்ளது?
- இது பொள்ளாச்சியிலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது.
- கோவையிலிருந்து 100 கி.மீ. தொவையில் உள்ளது.
எப்படி செல்வது?
- பொள்ளாச்சியிலிருந்து சாலை வழியாகச் செல்லலாம்.
- வழி: ஆனைமலை – வேட்டன்காரபுதூர் – சேதுமடை – டாப்சிலிப்
- 4 கி.மீ தொலைவில் பரம்பிக்குளம் அணை உள்ளது.
பஸ் வசதியும் உள்ளது.
பொள்ளாச்சியிலிருந்து டாப்சிலிப் வழியாக பரம்பிகுளம்
காலை 6.15 மற்றும் மாலை 3.15பரம்பிகுளத்திலிருந்து டாப்சிலிப் வழியாக பொள்ளாச்சி
காலை 8.45 மற்றும் மாலை 5.45பொள்ளாச்சியிலிருந்து டாப்சிலிப் :காலை 11:20
டாப்சிலிபிலிருந்து பொள்ளாச்சி மதியம் 1:00