Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,055 முறை படிக்கப்பட்டுள்ளது!

கிழக்கு கடற்கரை சாலை அமைத்தும் பயணநேரம்!

கிழக்கு கடற்கரை சாலை அமைத்தும் விரைவு பஸ்கள் மூன்று மணி நேர தூத்துக்குடிக்கு 5மணி நேரம் பயணம்

கிழக்கு கடற்கரை சாலையில் தூத்துக்குடி செல்லும் பஸ்கள் பழைய கால அட்டவணை அடிப்படையில் செல்வதாக கூறி, மூன்று மணி நேரத்தில் போகும் இடத்திற்கு ஐந்து மணி நேரமாக்குவதால் பயணிகள் உடல் வலியுடன் அவதிபடுகின்றனர்.ராமேஸ்வரம், ராமநாதபுரம் பகுதிகளிலிருந்து தூத்துக்குடிக்கு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுன் பஸ்களின் கால அட்டவணை பல ஆண்டுகளுக்கு முன் தயார் செய்யப்பட்டது. அட்டவணை தயார் செய்த காலத்தில், கிழக்கு கடற்கரை சாலை ஒரு வழிபாதைபோல் குண்டும் குழியுமாக இருந்தது. ரோடு மோசமாக இருந்ததை கணக்கில் கொண்டு ,ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடிக்கு நேரடியாக செல்வதை யாரும் விரும்பாததால், இடைபட்ட ஸ்டாப்புகளில் இறங்கும் பயணிகளுக்காக மட்டும் அட்டவணை நேரம் தயாரிக்கப்பட்டது. இந்த அட்டவணையின்படி ராமநாதபுரத்தில் கிளம்பும் பஸ் ஆடி அசைந்து ரோட்டில் கை நீட்டும் இடங்களில் எல்லாம் நின்று, தூத்துக்குடி செல்லும் போது ஒரு நாள் பொழுதே போய்விடும்.

பஸ்சில் ஏறும் பயணிகள் அனைவரும் கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி, வேம்பார் போன்ற இடையில் இறங்கும் பயணிகளாகவே இருந்தனர்.

தற்போது ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடி வரை கிழக்கு கடற்கரை சாலை நன்கு அகலமாக சர்வதேச அளவில் அமைக்கப்பட்டுள்ளது. குண்டும் குழியும் என்பதை பெயருக்கு கூட காணமுடியாத நிலையில் உள்ளபோது, பழைய காலஅட்டவணையின்படி முன்பு சென்றே அதே காயலாங்கடை பஸ்களையே இயக்குகின்றனர்.

இதற்கு உதாரணமாக ராமநாதபுரத்தில் அதிகாலை 3.45 மணிக்கு தூத்துக்குடி கிளம்பும் பஸ் காலை 8.15 மணிக்குதான் சென்றடைகிறது. இந்த பஸ் முன்பு போலவே கைநீட்டும் இடங்களில் நின்று, காலஅட்டவணை நேரம் இருக்கிறதே முன்னதாக சென்று என்ன பயன் என உருட்டி செல்கின்றனர். பஸ் டிரைவர்கள் ராமநாதபுரத்திலிருந்து சாயல்குடி சென்றவுடன் பஸ்சை 15 நிமிடம் நிறுத்திவிடுகின்றனர். பஸ் வேகமாக செல்லாமல் திருவாரூர் தேர் போல் ஆடி அசைந்து செல்வதால் பயணிகள் பஸ் பயணத்திலேயே இடுப்பு ஒடிந்துவிடும் நிலையில் உள்ளனர். காலத்திற்கு ஏற்றாற்போல் நல்ல ரோட்டில் அதிவிரைவு பஸ்களை இயக்கி, குறித்த நேரத்தில் பயணிகள் சென்றடையும்படி “கிழக்கு கடற்கரை எக்ஸ்பிரஸ்’ இயக்க போக்குவரத்து கழகத்தினர் முன்வரவேண்டும்.

ராமநாதபுரத்திலிருந்து இரண்டு மணி நேரத்தில் தூத்துக்குடி செல்லும் வகையில் ஒன் டூ ஒன், பி.பி., போன்ற பஸ்கள் இயக்கினால் தூத்துக்குடி வழியாக திருநெல்வேலி, கன்னியாகுமரி செல்லும் பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.