Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2013
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,272 முறை படிக்கப்பட்டுள்ளது!

புது வருடமும் புனித பணிகளும்

 மனிதன் பல மணி நேரங்கள் பல வருடங்கள் செய்ய வேண்டிய நன்மைகளை ஒரு சில மணிநேரங்களில், ஒரு சில நாட்களில் செய்தால் அவைகளை அடைய முடியும் என்று கருதி, கருணை மிகு ரஹ்மான் சில அமல்களை எளிதாக்கித் தந்துள்ளான். அத்தகைய அமல்களில் ஒன்று தான் எம்மை எதிர்நோக்குகின்ற முஹர்ரம் மாதமாகும்.

 முஸ்லீம்களின் கணக்கின்படி இது மாதங்களில் முதலாவது மாதமாகும். முஹர்ரம் என்றால் சங்கை மிக்கது என்று பொருள். இம்மாதத்தையொட்டியே இக்கட்டுரை வரையப்படுகிறது. ஏதோ புது வருடமும் அதிலே ஆற்ற வேண்டிய பெரிய பணிகளும் இருப்பதைப் போன்று தலைப்பு இருந்தாலும் உண்மை அதுவல்ல. இம்மாதத்தில் எது புனித பணி? அது எத்தனை? எதனைச் செய்ய வேண்டும் எதனைச் செய்யக் கூடாது என்பவற்றையெல்லாம் அல்லாஹ்வின் தூதர் மிகவும் துள்ளியமாக தெளிவுபடுத்தி விட்டுச் சென்று விட்டார்கள்.

 முஹர்ரம் மாதம் சங்கைமிக்கதாகும்

நபியவர்கள் கூறினார்கள் ‘ரமழான் நோன்புக்கு அடுத்த நிலையில் மிகவும் சிறப்புக்குறிய நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பாகும். பர்ழான தொழுகைக்கு அடுத்த நிலையில் மிகவும் சிறப்புக்குரிய தொழுகை இரவிலே நின்று வணங்குவதாகும்|’ (முஸ்லிம்:1982)

 இம்மாதத்திலே நோன்பு வைப்பதனால் இம்மாதம் சிறப்புறுகிறது என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

 நபியவர்களிடம் முஹர்ரம் 10-ம் நாள் நோற்கப்படும் நோன்பு பற்றி வினவப்பட்ட போது அது ‘முன் சென்ற வருடத்திற்கு பரிகாரமாகும் என்று கூறினார்கள். (முஸ்லிம்:1977 இப்னு மாஜா:1728)

 அதாவது இவ்வருடம் அந்த நோன்பை நோற்றால் போன வருடத்தில் நிகழ்ந்த பாவங்களுக்கு இந்நோன்பு பரிகாரமாக அமைகிறது. பாவங்கள் அழிக்கப்படுகிறது. இரண்டு நாட்கள் நோற்கின்ற நோன்புக்கு 1 வருடம் செய்த பாவங்களை மன்னிக்கின்றான் என்றால் இறைவன் நம்மீது எவ்வளவு கருணையுள்ளவனாக இருக்கிறான் என்பதை சிந்திக்க வேண்டும். குறைந்த பட்சம் 1 வருடப் பாவத்துக்கு 1 வருடம் நன்மையாவது செய்தாக வேண்டும். ஆனால் மனிதனுக்கு அது சுமையாக அமையும் என அறிந்து வெறும் இரண்டே நாட்களில் அதனை எளிதாக்கியுள்ளான். இது அவனுடைய கருணைக்கு அளவு கோலே இல்லை என்பதைக் காட்டுகிறது.

 இது கட்டாயக் கடமையல்ல

இந்நோன்பைப் பொறுத்தவரை விரும்பியவர் நோட்கலாம் விரும்பியவர் விடலாம். யார் மீதும் குற்றம் கிடையாது. ஏனெனில் இந் நோன்பு ஆரம்ப கால கட்டத்தில் கடமையான ஒன்றாக இருந்து பின்னர் சுன்னத்தாக மாற்றப்பட்டது.

 அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) அறிவிப்பதாவது: ஜாஹி லியா (அறியாமைக் கால) மக்கள் முஹர்ரம் 10ம் நாள் நோன்பு வைப்பவர்களாக இருந்தனர். நபியவர்களும் முஸ்லீம்களும் ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னர் அந்நோன்பை நோற்று வந்தனர். எப்போது ரமழான் கடமையாக்கப்பட்டதோ அப்போது நபியவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக முஹர்ரம் 10ம் நாள் (ஆஷுறா) அல்லாஹ்வுடைய (அல்லாஹ் கணக்கில் கொள்ளும்) நாட்களிள் ஒன்றாகும். எனவே விரும்பியவர் அத்தினத்தில நோன்பு வைக்கலாம் விரும்பியவர் விடலாம். (முஸ்லிம்:1951)

 எனவே இந்நோன்பை தெரிவு செய்யும் உரிமை நம்மிடம் வழங்கப்பட்டுள்ளது. அதிக நன்மை சம்பாதித்துக் கொள்ள விரும்புபவர் மேற்கண்ட ஹதீஸ்களை கவனத்தில் கொண்டு நோன்பு நோற்கவோ விடவோ முடியும்.

 இதை எப்போது நிறைவேற்ற வேண்டும்?

இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிப்பதாவது: நபியவர்கள் மதீனாவிலிருந்த போது யூதர்கள் ஆஷ_ரா தினமன்று நோன்பு வைத்திருந்தார்கள். அதைப் பார்த்த நபியவர்கள் இன்று உங்களுக்கு என்ன நாள்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள் இது மகத்தான நாளாகும். அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவரது சமூகத்தாரையும் பாதுகாத்து பிர்அவ்னையும் அவனைச் சேர்ந்தவர்களையும் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்துமுகமாக மூஸா(அலை) இத்தினத்தில் நோன்பு வைத்தார். அதனால் நாங்களும் நோன்பு வைக்கிறோம் என்றனர்;. அதற்கு நபியவர்கள் “மூஸா (அலை) அவர்களை மதிப்பதற்கு உங்களை விட நெருக்கமானவர்களும் அதிக தகுதியடையோரும் நாங்களே! என்று கூறி தானும் நோன்பு நோற்று ஏனையோரையும் ஏவினார்கள்” (புஹாரி:2004)

 நாங்களும் சுன்னாவைப் பின்பற்றுகிறோம் என்று கூறுபவர்கள் நபியவர்களை உயிரை விடவும் நேசிக்கிறோம் என்று பாசாங்கு செய்பவர்கள் இந்த யூதர்களை விடக் கேவலமானவர்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும். ஏனெனில் அவர்கள் எம்மைப் போன்று நாங்களும் மூஸாவை (அலை) நேசிக்கிறோம் என்று கூறிவிட்டு சும்மா இருக்கவில்லை. அதை செயல்படுத்தி (நோன்பு நோற்று) காட்டினார்கள். அதனால்தான் நபியவர்கள் அவர்கள் நோன்பு நோற்றிருப்பதைப் பார்த்து இன்று உங்களுக்கு என்ன நாள்? என்று கேட்கிறார்கள்.

 ஆனால் அல்லாஹ்வுக்காக ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர்களுக்கு சுன்னா என்றால் அது உயிரை விட மேலாகத்தான் இருக்கும். அதிலே நடிப்போ கலப்போ இருக்காது.

 எத்தனை நோன்புகள்?

முஹர்ரம் பிறை 9,10 (அதாவது கத்தாரில் வரும் 13ம் 14ம் தேதிகளில் புதன் வியாழன்) ஆகிய இரு தினங்களிள் நோற்க வேண்டும்.

 இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிப்பதாவது: முஹர்ரம் 10-வது நாள் நபியவர்கள் நோன்பு நோற்று ஏனையோரையும் நோற்கும் படி ஏவிய போது ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதரே! அத்தினம் யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் தினமாகும் என்றனர். அதற்கு நபியவர்கள்: அப்படியானால் இன்ஷா அல்லாஹ்! வருகின்ற வருடம் 9-வது தினத்தையும் சேர்த்து நோன்பு வைப்போம் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன் நபியவர்கள் மரணித்து விட்டார்கள். மற்றுமொறு அறிவிப்பில் “நான் உயிருடனிருந்தால் 9-வது தினத்தையும் சேர்த்து நோன்பு வைப்பேன்” என்று கூறினார்கள். (முஸ்லிம்:1915,1916)

 இந்நோன்பின் சிறப்புக்கள்

  • இத்தினம் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்திற்குறியதாகும்.
  • முன் சென்ற 1வருடத்தில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரம்.
  • மூஸா (அலை)யை கண்ணியப் படுத்துதல்.
  • யூத கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்தல்.

ஆகியவை இந்நோன்புக்குரிய சிறப்பம்சங்களாகும்.

 இத்தினத்தில் செய்யக்கூடாதவை

குறிப்பாக “ஷீஆ”க்கள் (இஸ்லாத்தில் இல்லாத பிரிவினர்) இத்தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து அதனைப் பிரகடனப்படுத்தியுள்ளனர். காரணம் இதே தினத்தில்தான் ஹுசைன் (ரழி) கர்பலா எனும் இடத்தில் கொல்லப்பட்டார்கள் அதனால் இது கவலைக்குரிpய தினம் என்று கருதி “யா ஹு சைன் யாஅலீ” என்றெல்லாம் கூறி தங்கள் முகங்களை தாங்களே செருப்பால் அறைந்து ஆடைகளை கிழித்து வாள் கத்தி போன்றவற்றால் தங்களது உடல்களை கீறி கிழித்து அதிலே இறப்பவர் உயிர்த்தியாகி என்று கருதி இப்படி செய்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப் பொருத்தவரை இது மிக வண்மையாக தடை செய்யப்பட்ட ஒன்றாகும். நபியவர்கள் கூறினார்கள்: “யார் கண்ணங்களில் அறைந்து கொண்டும் ஆடையை கிழித்துக் கொண்டும் அறியாமைக் காலத்தில் சொல்லும் வார்த்தைகளைக் கூறி அழைக்கிறாறோ அவர் முஹம்மதின் மார்க்கத்தைச் சேர்ந்தவரல்ல”.(புஹாரி:1212)

 முஹம்மத் நபியின் மார்க்கத்தில் இல்லாமல் இருப்பவர்களை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள மேற்கூறிய ஹதீஸ் நல்ல அளவுகேளாக அமைந்துள்ளது. குறிப்பாக ஷீஆ”க்களையே பார்த்து கூறியதைப் போன்றுள்ளது.

 இன்னும் சிலர் எல்லா மதத்தவர்களுக்கும் புது வருடம் வருவது போன்று இஸ்லாத்தில் முஹர்ரம் வருகிறது. எனவே நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதி குளிக்கப் போய் சேத்தை அள்ளிப் பூசிய கதையாக மாரியுள்ளது. குறிப்பாக வாலிபக் கூட்டம் இதில் கலாச்சார மோகக் காற்றினால் சறுகுகள் போன்று ஆகிவிடுகின்றனர். இதற்கென வாழ்த்துக்களும் அதற்காக, இன்னும் அதை மெருகூட்ட மதுபானங்களும் பியர்களும் அவர்கள் இவ்வருடத்தை வரவேற்கிறார்களாம். கேவலம் என்னவோ இவர்கள் வரவேற்காவிட்டால் இந்த மாதம் வராமல் எங்கோ ஓடிப் போய் விடும் போலும்.

 இந்த வாலிபர்கள் நன்றாக விளங்கிக் கொள்ளட்டும்! இந்த மாதத்திலே இந்த நாளுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் தனிச் சிறப்பே தவிர இது புது வருடம் என்பதற்காக எந்தச் சிறப்பும் கிடையாது. இம்மாதத்தை வரவேற்கக் கூடாதா? அதில் என்ன தவறு? என்று நினைத்தால் உண்மையிலையே அம்மாதத்தை வரவேற்க விரும்பினால் முஹர்ரம் பிறை 9-ம் 10-ம் தினங்களில் வரும் நோன்பை நோற்றால் அதுவே போதும். இதற்காக வீண் செலவுகள் எதுவும் தேவை இல்லை. அதே போன்று யார் யாரெல்லாம் காதலர் தினம் பிறந்த தினம் இறந்த தினம் என்றெல்லாம் கொண்டாடுகிறார்களோ அவர்கள் எதுவித சிரமமும் இன்றி எளிதாக பாவத்தை மூட்டை மூட்டையாக வாங்கிக் கொள்கிறோம் என்பதை நினைவில் இருத்தி கொள்ளட்டும்!

 அவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்தில் போடப்படும் போதெல்லாம் உங்களுக்கு இது பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வரவில்லையா? என்று கேட்கப் படும்.”(முலக்:8)

 அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாப்பானாக.

அன்புடன்  அபூ அத்லாஃ