Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2015
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,229 முறை படிக்கப்பட்டுள்ளது!

எது சிறந்த சட்டம்?

lawதனக்கு உரிமையுள்ளவை மட்டுமல்லாது அதற்கு மேலுள்ளவற்றையும் தனதாக்கிக் கொள்ளும் மனநிலையில் உள்ள ஒரு சமுதாயத்தில் நீதியை நிலைநாட்ட உபயோகப்படும் ஒரு கருவியாக சட்டம் உள்ளது. ஆனால் அந்தச் சட்டமே அநீதிக்குள்ளாக்கப்பட்டால்…? இதுதான் ஷரீஅத்தின் நிலை!

ஒருசில வர்க்கத்தினரிடம் ஷரீஅத் என்ற பெயரைச் சொல்லிப் பாருங்கள். அவர்களது முகங்களில் ஓர் இனம் புரியாத மாற்றம் வெளிப்படும். நீங்கள் அவர்களிடம் ஷரீஅத் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்று கேட்டுப் பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். ஷரீஅத் பற்றி அவர்கள் இவ்வளவு குறைவாகத் தெரிந்து வைத்திருக்கிறார்களே என்று.

அன்றொரு நாள் நான் பி.பி.சி. வானொலியைத் திருப்பினேன். ஓர் அமெரிக்கப் பேட்டியாளர் நேயர்கள் சிலரிடம் பேட்டி கண்டு கொண்டிருந்தார்.

அவர் அப்பொழுது கூறியதாவது: நான் இஸ்லாம் அல்லது முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தும்பொழுது கூட்டத்தினரைப் பார்த்து ஒரு கெள்வி கேட்பேன். இஸ்லாம் அல்லது முஸ்லிம்கள் என்றவுடனேயே உங்கள் மனதில் என்ன எண்ண அலைகள் ஊற்றெடுக்கின்றன என்று கெட்பேன்.

உடனே அவர்கள் “பயங்கரவாதம்” என்று கூறுவார்கள்.

ஆனால் பயங்கரவாதத்திற்கும், இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. அப்பாவி மக்களைக் கொல்வதற்கும் அப்பாவி மக்களின் சொத்துகளைச் சூறையாடுவதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.

இஸ்லாத்திற்கும், பயங்கரவதத்திற்கும் இந்தப் பிணைப்பை ஏற்படுத்தியது யார்? நீங்கள் அதை ஆராயப் போவீர்களானால் முதல் குற்றவளியாகவும், முக்கியக் குற்றவாளியாகவும் மேற்குலக ஊடகங்களைத்தான் காணுவீர்கள்.

இந்த மேற்குலக மீடியாவின் கருத்துகளைத்தான் அதிகமான முஸ்லிம் நாடுகளும் எதிரொலிக்கின்றன. இந்த முஸ்லிம் நாடுகளில் இந்தத் தவறான கருத்துகளைப் பரப்புவது  யார்? இஸ்லாமியப் பெயர்களை வைத்துள்ள சில அறிவுஜீவிகள்தான் இந்தக் கைங்கர்யத்தைச் செய்கின்றனர்.

இதுதான் ஷரீஅத்திற்கும் ஏற்பட்ட நிலைமை. சில வரங்களுக்கு முன்பு பி.பி.சி. வானொலியின் ஆய்வாளர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஷரீஅத் சட்டங்கள் குறித்த ஒரு கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறதாம். அதில் நான் கலந்து கொள்ள முடியுமா என்று கெட்டார்.

நான் எனது சம்மதத்தைத் தெரிவித்தேன். அதன் பிறகு அவர் என்னுடன் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். ஷரீஅத் சட்டங்கள் குறித்து அந்த உரையாடல் நீண்டது.

இஸ்லாமியச் சட்டங்கள் குறித்து பொதுவாக மக்களின் மனங்களில் உள்ள குறுகிய எண்ணங்களையும், இஸ்லாமியச் சட்டங்களுக்கும், இவர்களுக்கும் இடையிலுள்ள நீண்ட இடைவெளியையும் நான் அவரிடம் சுட்டிக் காட்டினேன். அத்தோடு எங்கள் உரையாடல் நிறைவுற்றது.

இரண்டு நாள்கள் கழித்து மீண்டும் அவரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. நான் எதிர்பார்த்தது மாதிரியே நீங்கள் அந்தக் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட மாட்டீர்கள் என்று அவர் என்னிடம் சொன்னார்.

அந்த நிகழ்ச்சியின் பொறுப்புதாரிகள் நான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை விரும்பவில்லையாம். அதாவது, அல்லாஹ் வகுத்து வழங்கிய குறைவில்லா ஷரீஅத் சட்டங்களைப் பற்றி மக்கள் வைத்துள்ள தவறான கருத்துகள் அப்படியே நிலைத்திருக்க வெண்டும். அது கலைந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் எவ்வளவு குறியாக இருக்கிறார்கள் பார்த்தீர்களா?

ஷரீஅத் சட்டம் என்றால் என்ன? இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் ஷரீஅத் என்ற பதத்திற்கு இஸ்லாம் என்றே பொருள் கொள்ளபபடும். ஆனால் மேற்குலக ஊடகங்களின் எழுத்தாளர்களையும் முஸ்லிம் நாடுகளிலுள்ள சில அறிவுஜீவிகளையும் அழைத்து ஷரீஅத் பற்றி நீங்கள் என்ன புரிந்து வைத்திருக்கின்றீர்கள் என்று கேட்டால் உடனே அவர்களிடமிருந்து ஒரு பதில் வரும் – அது கடுமையான குற்றவியல் சட்டங்களைக் கொண்டது, அது நாகரிகமடைந்த மனித சமூகத்திற்கு ஒத்து வராதது.

ஆனால் இஸ்லாத்தின் குற்றவியல் சட்டங்கள் அடக்குமுறைக்கு மிகத் தூரமனது. இஸ்லாத்தில் சில குற்றங்களுக்குத்தான் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அதாவது, 7 குற்றங்களுக்கு என்று சில அறிஞர்களும், 4 குற்றங்களுக்கு என்று சில அறிஞர்களும் கூறுகிறார்கள்.

ஆனால் இந்தக் குற்றங்களுக்கும் தண்டனை வழங்க வேண்டுமானால் உறுதியான ஆதாரங்கள் வேண்டும். தகுந்த சாட்சிகள் வைத்து அக்குற்றத்தை நிரூபிக்க வேண்டும். இஸ்லாமியச் சட்டங்களைக் குறை கூறுவோர் இது பற்றி மிகக் குறைவாகவே அறிந்து வைத்துள்ளனர். அதிகமனோர் ஒன்றும் அறியாதவர்களாகவே உள்ளனர்.

உண்மையில் முஸ்லிம் உலகில் உள்ள சில அறிவுஜீவிகளுக்கு இஸ்லாமியச் சட்டங்கள் குறித்து உண்மை வடிவம் நன்றாகவே தெரியும். அவர்களிடம் இஸ்லாமியச் சட்டங்கள் பற்றிக் கேட்டால் உடனே அவர்கள் இந்தக் கடுமையான தண்டனைகளின் நன்மைகளைப் பற்றியே வாக்குவாதம் செய்வார்கள்.

இஸ்லாம் கடுமையான தண்டனைகளைப் பற்றி மட்டும்தான் சொல்வது போல ஒரு பிரமையை ஏற்படுத்துவார்கள். மாறாக, இஸ்லாம் தனிப்பட்ட, குடும்ப, சிவில், சர்வதேசச் சட்டங்கள் எனத் தொடாத பகுதிகளே இல்லை.

இந்தச் சட்டம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது. மனித வாழ்வின் அனைத்து அம்சங்களையும் அரவணைத்துச் செல்லும் நெகிழ்வுத் தன்மையை அது கொண்டுள்ளது. தனிப்பட்ட முறையில் இஸ்லாமியச் சட்டங்கள் ஒவ்வொரு தனி மனிதரின் உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கிறது.

அதேபோல் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் என்று அனைவருக்கும் அவரவருக்குரிய சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கிறது.

மிக முக்கியமாக சமூகத்தில் பலஹீனர்கள் என்று கருதப்படுபவர்களை அது மிகக் கவனமாகப் பாதுகாக்கிறது. அந்த வகையில் பெண்களும், சிறுவர்களும் இந்தச் சலுகைகளைப் பெறுகின்றனர். ஓர் இஸ்லாமிய அரசு பெண்களினதும், சிறுவர்களதும் உரிமைகளைப் பாதுகாக்க வெண்டும். இஸ்லாமியச் சட்டங்களை ஒழுங்காக அமுல்படுத்தாத சமூகங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? பெண்கள் புண்படுத்தப்படுகிறார்கள். அவர்களது உழைப்பு சுரண்டப்படுகிறது. இன்று வரை இது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

இஸ்லாமியச் சட்டத்தில் ஆண்களுக்கு நிகரான சமூக அந்தஸ்து பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால், நிறைய விஷயங்களில் ஆண்களை விட அதிகமான பலன்கள் பெண்களுக்குத்தான் கிடைக்கின்றன.

வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், ஆரோக்கியம், சுயசார்பு நம்பிக்கை, அதனை வெளிப்படுத்துதல் ஆகிய உரிமைகள், வேலை செய்வதற்கான உரிமை, தனக்குச் சொந்தமானவற்றைத் தனதாக்கிக் கொள்ளும் உரிமை ஆகிய அனைத்து அடிப்படை மனித உரிமைகளும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அங்கே வழங்கப்படுகின்றன.

குடும்பவியல் சட்டத்தை எடுத்துக் கொள்வோம். அல்லாஹ் வாரிசு சட்டத்தை அழகாக வகுத்து வழங்கியுள்ளான். இதனால் வாரிசுதாரர்கள் அனைவருக்கும் நியாயமான பங்கீடு கிடைக்கிறது. இதில் ஏற்படும் அனைத்து சிக்கல்களையும் அது தீர்த்து வைக்கிறது.

அவமரியாதை, ஒருபக்கச் சார்பு, அநீதி ஆகியவை இஸ்லாமியச் சட்டத்தில் கிடையாது. திருமண உறவுகளை எடுத்துக் கொள்வோம். கணவன், மனைவி ஆகிய இரு பாலருக்கும் இஸ்லாம் கொடுக்கும் நியாயமான சட்டப்பூர்வமான உரிமைகள், இஸ்லாமிய மதிப்பீடுகள் வேறு எந்தச் சமூகத்திலும் நாம் காணக் கிடைக்காதவை.

அது இருவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. அவர்களின் குழந்தைகள் நல்ல முறையில் வளர்வதற்குண்டான ஆரோக்கியமான சூழலை அது வழங்குகிறது. இஸ்லாமியச் சட்டங்களை அமுல்படுத்துவதற்கு அரசு சிறு முயற்சி எடுத்தால் போதும். இது இஸ்லாமியச் சட்டத்தின் சிறப்பம்சமாகும்.

மனிதக் கரங்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களில் அதனை அமுல்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. காவல்துறையினரின் உதவியில்லாமல் அதனை அமுலாக்குவது சாத்தியமில்லாத ஒன்று. இஸ்லாமியச் சட்டங்களை அமுல்படுத்தும்போது இத்தனைக் கெடுபிடிகள் தேவையில்லை.

இஸ்லாமியச் சட்டங்கள் நிலைநாட்டப்படாத ஒரு சமூகத்தில் கூட குடும்பவியல் சட்டங்களில் முஸ்லிம்கள் நியாயமாக நடந்து கொள்கிறார்கள். வாரிசுதாரர்களுக்குப் பங்கீடு செய்யும்பொழுது எல்லோருக்கும் அவரவருக்குரிய பங்கு தங்கு தடையின்றி கிடைக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இஸ்லாமியச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறை இப்படித்தான் இருந்தது. அவர்கள் எப்பொழுதும் மக்களை அழைத்து இதன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்றுதான் சொல்வார்கள்.

இந்தச் சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்று அவர்கள் ஒருபோதும் கூறியதில்லை. அசைக்க முடியாத நம்பிக்கை வந்து விட்டால் மக்கள் தானாகவே அதனை அமுல்படுத்துவார்கள். யாரும் நிர்ப்பந்திக்கத் தேவையில்லை.

அனைத்தையும் அறிந்த அறிவாளன் அல்லாஹ் மக்களை விசுவாசம் கொள்ளவே அழைக்கின்றான். ஏனெனில் அந்த நம்பிக்கை அவர்களின் இதயங்களில் நிறுவப்பட்டு விட்டால் சட்டங்களை அமுல்படுத்துதல் என்பது இயல்பாகவே வந்து விடும்.

இன்று இஸ்லாமிய சமூகங்கள் இஸ்லாமியச் சட்டத்தின்பால் திரும்புகின்றன. எப்பொழுதோ கைவிட்டிருந்த அதனைத் திரும்ப எடுத்து ஆரத் தழுவிக் கொள்கின்றனர். இது ஏன் என்று மேற்குலகம் வியந்து  தன்னையே கேட்டுக் கொள்கிறது. இந்தக் கேள்விக்கு விடை மிக எளிது – அவர்கள் காலனியாதிக்கவாதிகள்.

பாராளுமன்றங்கள், சர்வாதிகாரிகள் இயற்றிய சட்டங்களை அமுல்படுத்திப் பார்த்து விட்டார்கள். இதில் யார் இயற்றிய சட்டமும் இஸ்லாமியச் சட்டம் வழங்கும் நீதிக்குப் பக்கத்தில் கூட வர முடியாததை அவர்கள் தெரிந்து கொண்டார்கள். ஏன், அவர்கள் தோற்றுப் போய்விட்ட இந்தச் சட்டங்களையெல்லாம் விட மிகச் சிறந்த வெற்றியாளனான அல்லாஹ்வின் பால் திரும்பக் கூடாது? அதைத்தான் இன்றைய முஸ்லிம்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆதில் ஸலாஹி

தமிழில் : MSAH – விடியல் வெள்ளி, செப்டம்பர் 2001