Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2015
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,422 முறை படிக்கப்பட்டுள்ளது!

இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் (Celery) செலரி

celeryஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி என்னும் அரிய காய்கறி செலரி (Celery) என்பது சாலட் கீரை வகையைச் சேர்ந்ததாகும். இதைச் சமைக்காமலேயே சாப்பிடலாம்.

செலரியின் இலை, இலைத் தண்டு, இலைக்  காம்பு முதலியவை உணவாக உபயோகப் படுத்தப்படுகின்றன. இந்தியாவில் கீரைத்தண்டு மாதிரி அடிக்கடி இதைச் சமைத்துச் சாப்பிடும் காலம் ஆரம்பமாகிவிட்டது.

காளானைப் போலவே இதுவும் ஓர் அரிய காய்கறியாகும். 1994 ஆம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மின்க்லீ என்பவர் இரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டார். தினமும் அவர் இரண்டு செலரித் தண்டுகள் வீதம் ஒரு வாரம் வரை சாப்பிட்டு, அத்தொல்லையிலிருந்து குணமாகி இயல்பான நிலைக்கு வந்துவிட்டார். இவர் மகன் குலாங் டிலீ, ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர். இவர் செலரியிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு வித இரசாயனப் பொருளை ஊசி மூலம் எலிகளுக்கு ஊட்டினார். அந்த எலிகளின் இரத்த அழுத்தம் 12 முதல் 14 சதவிகிதம் வரை குறைந்திருந்தது. இரத்த அழுத்தம் குறைகிறதே என்று இதை அதிகமாகச் சாப்பிடவும் கூடாது. இந்த உண்மையையும் இவர் கண்டுபிடித்துள்ளார். அளவுடன் செலரியை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்த நோயைப் பரிபூரணமாகக் குணமாக்கிக் கொள்ளலாம்.

குணமாகும் நோய்கள்!

உணவு செரிமானமின்மை, ஆஸ்துமா, இரத்த சோகை, சாகேமியா, உடற் பலவீனம், இதய நோய்கள், சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல், தூக்கமின்மை, மூட்டு வாதம், ஊளைச்சதை, நரம்புக் கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம் முதலிய நோய்களை செலரித் தண்டுகள் குணப்படுத்துகின்றன.

‘திடீர்’ நெஞ்சுவலி இனி இல்லை!

இதில் உள்ள மக்னீசியமும், இரும்புச் சத்தும் குறிப்பிடத்தக்கவை. அவ்விரண்டும் அதிக அளவில் இருப்பதால் இரத்த சோகை, லூகேமியா முதலிய நோய்கள் உடனே குணமாகின்றன. இரத்த விருத்தியும் விரைந்து ஏற்படுகிறது.

இதயமும், இதயத்திற்குச் செல்லும் நரம்புகளும் தடையின்றி இயங்க மக்னீசியம் கூடுதலாகத் தேவை. அந்தத் தேவையை செலரியில் உள்ள மக்னீசிய உப்புகள் பூர்த்தி செய்துவிடுகின்றன. இதனால் நெஞ்சுவலி, மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கப்படுகின்றன.

100 கிராம் செலரியில் கிடைக்கும் கலோரி 37 ஆகும். இதன் இலைகளில் 88% ஈரப்பதமாகும்; புரதம் 6.3%, கொழுப்பு 0.6%, நார்ச்சத்து 1.4%, கார்போஹைடிரேட் 1.6%, தாது உப்புகள் 2.1% ஆகும். தாது உப்புகளும் வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவற்றுடன் வைட்டமின் – ‘ஏ’, வைட்டமின் – ‘பி’ வைட்டமின் – ‘சி’ போன்றவையும் இருப்பதால் இது ஓர் அடிப்படை உணவும் ஆகிறது.

உடல் வளர்ச்சிக்குப் புரதம் தேவை. பிற காய்கறிகளில் அதிக பட்சம் 2% முதல் 3% வரை புரதம் உள்ளது. ஆனால், அது செலரியில் 6.3% ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் காரணங்களால் (தாது உப்புகளால்) இரத்தத்தில் புளிப்பு ஏற்பட்டு இரத்தம் கெட்டுவிடுவது தடுக்கப்படுகிறது. அத்துடன் இரத்தத்தில் நஞ்சுப் பொருள்கள் சேர்வதும் தடை செய்யப்படுகிறது. மேலும் கீல் வாதம், ???????????????????????????????ஊளைச் சதை நோய் போன்றவையும் குணப்படுத்தப்படுகின்றன.

செலரியின் தண்டுகளையும் இலைகளையும் சூப்பாகத் தயார் செய்து சாப்பிடலாம்; இல்லை எனில் சாறாக மாற்றி அருந்தலாம். செலரியின் விதையும் மருத்துவக் குணங்கள் நிரம்பியது. அதைக் சாறாக்கி வாத நோய்க்காரர்கள் அருந்தலாம்.

நரம்புக் கோளாறுகளுக்கு….

வலிப்பு நோயால் ஏற்பட்ட இசிப்பு நோய், நரம்புத் தளர்ச்சி நோய் முதலியவை குணமாகும். இதற்காகச் செலரித் தண்டு, இலை ஆகியவற்றின் சாற்றை காரட் சாறுடன் சேர்த்து அருந்த வேண்டும். இந்த முறையில் தினமும் ஒரு வேளை அருந்தினால் நரம்பு நோய்கள் குணமாகும்.

புற்றுநோய், நுரையீரல் அழற்சி, ஆஸ்துமா, தொண்டை தொடர்பான நோய்கள் ஆகியன குணமாகச் செலரி சூப் அருந்த வேண்டும். அல்லது இலை, தண்டு ஆகியவற்றுடன் சிறிதளவு நீர் சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து இறக்கிச் சாப்பிட வேண்டும்.

சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்கவும் இத்தண்டு பயன்படுகிறது. வாரத்திற்கு நான்கு நாள்களாவது செலரியைச் சமையலில் சேர்த்தால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படா. கற்கள் இருந்தாலும் இது கரைத்துவிடும்.

யுனானி வைத்தியத்தில் செலரி வேரைச் celery-natural-healing-foodசிறுநீரகக் கற்களைக் கரைக்க மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

சோடியம் உப்பு அதிகமாய் இருப்பதால் இது மூட்டு வீக்க நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இலைகளையும் மெல்லிய தண்டுகளையும் சாறாக்கி அருந்த வேண்டும். இந்த முறையில் அருந்தினால் மூட்டு வீக்கம் குணமாகும்.

சத்துணவு டானிக்!

உடல் பலவீனமானவர்களுக்கும் சத்துணவுக் குறைவால் ஊட்டம் இல்லாமல் இருப்பவர்களுக்கும் எளிய டானிக் ஒன்று இருக்கிறது. அது இதுதான்.

செலரியின் வேரைக் காய வைத்துப் பொடியாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி பொடியுடன் அதே அளவு தேனும் சேர்த்துச் சாப்பிட வேண்டும். தினமும் இரண்டு வேளை இப்படிச் சாப்பிட்டால் உடல் பலன் பெறும்.

‘சாலட்’ செய்வது உண்டா?

மிகவும் நறுமணமுள்ள காய்கறி இது. எனவே, இதை மற்றக் காய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்தால் மணமும் ருசியும் முன்னணியில் நிற்கும்.

வெள்ளரிக்காய், தக்காளி, முள்ளங்கி, காரட் போன்றவற்றை சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு சாலட் (Salad) செய்வார்கள். இதில் செலரியின் இலைகளையும், தண்டுகளையும் வெட்டிப் போட்டு எலுமிச்சைச் சாற்றையும் கலக்க வேண்டும். பச்சைக் காற்கறிகள் சேர்த்த இந்த சாலட் சத்துணவாக ஆகிவிடுகிறது.

செலரியின் கொட்டைகள் சிறுநீர் நன்கு பிரிய பயன்படுகின்றன. வயிற்றுப் பொருமலைக் குணமாக்குகின்றன. தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. நரம்புத் கோளாறுகளைக் குணமாக்குகின்றன. இந்த விதைகளைக் காயவைத்து இடித்துத் தூளாக வைத்துக்கொண்டு தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும்.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட செலரியின் தாயகம் சீனாதான். கி.மு. 5ஆம் நூற்றாண்டில் இருந்தே செலரியை இவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஐரோப்பாவிலும் இதே காலகட்டத்தில் செலரியைப் பயிர் செய்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் செலரியின் மருத்துவக் குணங்களுக்காகத் தோட்டங்களில் வளர்க்க ஆரம்பித்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்புதான்.

செலரியை அடிக்கடி உணவில் சேர்த்து உடல் உறுதி பெறுவோம்.