Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2015
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,751 முறை படிக்கப்பட்டுள்ளது!

உடல் எடையை குறைக்க சூப் குடிங்க!…

   ஒவ்வொரு மனிதருக்கும் தங்கள் உடலை கட்டுடலாக, ஒல்லியாக மற்றும் கவர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். இந்த கட்டுடலைப் பெறுவதற்காக பட்டினியும் கிடப்போம், விதவிதமான உணவுகளையும் சாப்பிட முயற்சி செய்வோம். நாம் எதை சாப்பிட்டாலும், அது நமது உடலில் கொழுப்பாக இருந்து வேலை செய்யும் என்பதே உண்மை.

எனவே, நம் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும் மற்றும் எடையை குறைக்கவும் நாம் செய்ய வேண்டிய ஒரு ஸ்பெஷல் உணவு முறை உள்ளது – அது தான் சூப்! சூப்களை உணவுகளில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடலில் அதிகபட்ச கலோரிகள் கூடுவதை புத்திசாலித்தனமாக தவிர்க்க முடியும்.

வெள்ளை பீன்ஸ் சூப்

1குறைவான சர்க்கரை, கொழுப்பு மற்றும் சோடியம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இந்த சுவைமிக்க பானம் எடையையும் குறைக்கும். நல்ல சுவையும், எளிதில் தயாரிக்கக் கூடியதாகவம் மற்றும் நிறைய புரதங்களை கொண்டிருப்பதும் இந்த சூப்பின் சிறப்பாகும்.

ப்ராக்கோலி சூப்

2உங்களுக்கு ப்ராக்கோலியை பிடிக்காவிட்டாலும் கூட, எடை குறைப்பில் அதன் பலன்கள் அபரிமிதமானவை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். 100 கிராம் ப்ராக்கோலியில் 1.2 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளது. ஆனால் நிறைய நார்ச்சத்தும், அவசியமான பிற ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளன.

பரங்கிக்காய் சூப்

3பரங்கிக்காய் சூப் சாப்பிடுவதன் மூலமாக உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை உங்களால் வேகமாக குறைக்க முடியும். கொழுப்பும், சர்க்கரையும் குறைவாக இருந்தாலும், உடலுக்குத் தேவையான புரதங்களும், நார்ச்சத்தும் நிரம்பியிருக்கும் பானமாக இது உள்ளது.

கைக்குத்தல் அரிசியுடன் சிக்கன் சூப்

4வேகமாக எடையைக் குறைக்க உதவும் சூப்களில் ஒன்றான இதில், குறைவான அளவு சோடியமும், அதிக அளவு புரதங்களும் உள்ளன. 100 கிராம் பழுப்பு அரிசி சிக்கன் சூப்பில் 0.7 கிராம் மட்டுமே கொழுப்பு உள்ளது.

உருளைக்கிழங்கு சூப்

5இந்த சூப்பை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுப்பதுடன், எடையையும் உங்களால் குறைக்க முடியும். இந்த பானத்துடன் பல்வகை தானியங்களையும் சேர்த்துக் கொண்டு, குறைவான கொழுப்புடைய பண்டமாக சாப்பிடலாம்.

கேரட் சூப்

 6சுவைமிக்க கேரட் சூப்பில் கொத்தமல்லியை போட்டு குடிக்கும் போது அது குறைவான சர்க்கரையை கொண்டிருக்கும். 100 கிராம் அளவிற்கு இந்த சூப் உணவை சாப்பிடுபவர்களுக்கு 1.2 கிராம் அளவிற்கே கொழுப்புச் சத்து கிடைக்கும்.

பட்டாணி சூப்

7நீங்கள் தினந்தோறும் பட்டாணியுடன், உங்களுக்குப் பிடித்த காய்கறிகளை சேர்த்து சூப்பாக குடித்து வந்தால் உடலின் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக இருக்க முடியும். புரதங்கள் நிரம்பியதாகவும், குறைவான கொழுப்பு, சர்க்கரை மற்றும் சோடியம் கொண்டதாகவும் இருக்கும் பட்டாணி சூப் ஆரோக்கியமான தேர்வாகவே இருக்கும்.

காளான் சூப்

8100 கிராம் உணவில் 1.2 கிராம் அளவிற்கே கொழுப்பைத் தரும் குணம் கொண்ட காளான் சூப் எடையை குறைக்க தேர்ந்தெடுக்க வேண்டிய மிகச்சிறந்த சூப்களில் ஒன்றாகும். இது உடலுக்குத் தேவையான புரதங்களை கொடுப்பதுடன், தேவையற்ற எடையையும் திறமையுடன் குறைக்கிறது.

பருப்பு சூப்

9

மிகவும் ஆரோக்கியமானதாகவும், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிரம்பியதாகவும் உள்ள பருப்பு சூப் நீங்கள் எடையைக் குறைக்க தேர்ந்தெடுக்க வேண்டிய சரியான சூப் ஆகும். 100 கிராமில் 0.8 கிராம் அளவிற்கே கொழுப்பு உள்ள உணவாக இது உள்ளது.

தக்காளி சூப்

10எளிமையாக தயாரிக்கவும் மற்றும் சுவையாக இருக்கவும் கூடிய தக்காளி சூப்பினால் எடையைக் குறைக்க முடியும் என்பது ஆச்சரியமான விஷயமாக தோன்றுகிறதா? இந்த சூப் உங்களுக்குத் தேவையான பொட்டாசியம், புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்களை வழங்குகிறது. குறைவான கொழுப்பு மற்றும் சர்க்கரையைக் கொண்டிருக்கும் இந்த சூப்பில் வைட்டமின் சி உள்ளது.