Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2016
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,053 முறை படிக்கப்பட்டுள்ளது!

காகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)

kaka1நமது உடலில் 80% நீர் உள்ளது. அதே போல், பழங்களிலும் 80% நீர்ச் சத்து உள்ளது. பொதுவாக நாம் உண்ணும் உணவில் நீர்ச் சத்து அதிகம் இருப்பது நல்லது.   நம்மில் பலருக்குத் தெரியாத ஒரு விஷயம், மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய அதிகம் உதவுவது பழங்கள்தான். பழங்கள் நமது மூளைக்கு நேர்மறை அதிர்வுகளைத் தருகின்றன. நல்ல பழங்களைத் தினமும் சாப்பிட்டால், எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் ஞாபகத்துக்குக் கொண்டு வரலாம்.  பழங்கள்  நார்ச் சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் சி நிரம்பியவை. அதோடு நமது திசுக்களை அழித்துவிடாமல் பாதுகாக்கும் பைடோ கெமிக்கல்ஸ் நிரம்பியவை. இதனால் பழங்களைச் சாப்பிடுவதால் நோய் வராமல் தடுக்க முடியும்.

அன்றாடம் பழங்களைச் சாப்பிடுவதால் புற்று நோய், இருதய நோய், மாரடைப்பு, மறதி, காட்ராக்ட் மற்றும் மூப்பில் வரக்கூடிய பல நோய்களைத் தடுக்கலாம். பழங்களைச் சாப்பிடுவதால் நமக்கு மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கலாம். இத்தனை நன்மைகள் இருந்தும் மக்கள் ஏன் அதிகம் பழங்களைச் சாப்பிடுவதில்லை? அவர்கள் மனதில் பழங்கள் மிக விலை உயர்ந்தவை என்ற எண்ணம் பதிந்துள்ளது. நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். பணத்தைப் பலவித உணவுகளுக்கு எப்படியெல்லாம் செலவழிக்கிறீர்கள்? அதில் சிலவற்றைத் தவிர்த்து, அதற்குப் பதில் பழங்களை வாங்கி சாப்பிட்டுப் பயனடையுங்கள்.

தற்போது சூப்பர் மார்கெட்டுகளுக்குச் சென்றால் வித்தியாசமான பழங்களைக் காண்போம். ஆனால் அவற்றை நாம் வாங்க மாட்டோம். இதற்கு அதன் சுவை எப்படி இருக்கும் என்று தெரியாததோடு, அந்த பழங்களின் வெளித்தோற்றம் விசித்திரமாக இருப்பதும் காரணம். அதுமட்டுமின்றி அவை விலை அதிகமானதும் கூட. ஆனால் அவைகளில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளதால், அவற்றை உட்கொண்டால் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் பலனைப் பெறலாம்.

உங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது  சுவைத்துப் பார்க்க வேண்டிய பழங்களில் ஒன்று தான் காகா அல்லது காகி பழம் என்று அழைக்கப்படும் பெர்ஸிமென்  (persimmon) ஆகும். இதன் தமிழ் பெயர் சீமை பனிச்சை என்பதாகும். அரபியில் காகா என்றும் சில மொழிகளில் காகி என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் டயோஸ்பரஸ் காகி (Diospyros kaki).  இவை உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாலி நியூட்ரியன்ட்டுகள் போன்றவற்றையும் அதிகமாக பெற்றுள்ளன. இன்று எல்லா நாடுகளிலும் இது மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது. இது ஜப்பானின் தேசிய பழமாக பெருமைபடுத்தப்படுகிறது.

kaka2பழுத்த பழத்தை பார்த்தால் தக்காளிப் பழம் போன்று தான் இருக்கும். விலையைக் கேட்டால் மயக்கமே வந்து விடும். அரபு நாடுகளில் 30 ரியால் வரை விற்கப்படுகிறது. சீசனில் 15 ரியாலுக்கு கிலோ கிடைக்கும்.  பெரும்பாலும் இதனுள் விதை இருக்காது. இதில் பல ரகங்கள் இருந்தாலும் பொதுவாக கடைகளில் இரண்டு வகைகளைப் பார்ககலாம். ஒன்றில் கசப்பு இருக்கும்  மற்றொன்றில் கசப்பு இருக்காது. கசப்பு என்றவுடன் இது என்ன பழம் என்று அஞ்ச வேண்டாம்.

ripepersiமுதல் வகை ஹச்சியா (Hachiya) பழுப்பதற்கு முன் சாப்பிட்டால் கசப்பாக இருக்கும். ஆனால் பழுத்தவுடன் அதன் ருசியே அலாதியானது. சாப்பிட்டவர்களுக்குத் தான் அதன் ருசியின் அருமை புரியும். மிகவும் வித்தியாசமான அற்புதமான ருசியைக் கொண்டது தான் இந்த பழம். நன்றாக பழுத்த பழம்  அழுகிய தக்காளிப் பழம் போன்று தோல் மிகவும் மிருதுவாக இருக்கும். சாப்பிடுவதற்கு மிகவும் சரியான பதம் இது தான்.

மற்றொன்று வகை ஃபுயூ (Fuyu). இந்த வகைப் பழத்தை முழுமையாக பழுப்பதற்கு முன்பும் சாப்பிடலாம். இனிமையாக இருக்கும். மற்ற வகையைவிட இது சற்று கடினமாக இருக்கும். இரண்டுமே தக்காளி போன்று ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.

இந்த பழம் பழங்காலத்திலேயே சீனாவைப் பூர்விகமாக கொண்டுள்ளது. அதன் பின் ஜப்பானுக்கு அறிமுகமாகியது. அதன் பின் அது அந்த நாட்டின் தேசிய பழமாகி விட்டது. ஜப்பானில் புதிய ஆண்டு கொண்டாட்டத்தை இந்தப் பழம் மூலம் கொண்டாடுகிறார்கள்.  இந்தப் பழம் 1800களில் கலிபோா்னியாவில் பயிரிடப்பட்டு அமெரிக்காவின் முதல் வியாபார ரீதியான பழம் என்று பெயர் பெற்றுள்ளது.

இந்த காகா பழத்தை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு சீனாவாகும். அதற்கடுத்ததாக ஜப்பான், கொரியா, பிரேசில் போன்றவனவாகும்.  ஓன்டோரியாவிற்கு அதிகமா ஏற்றுமதி செய்யும் நாடு இஸ்ரேலாகும். இந்த பழம் இஸ்ரேலின் ஷேரோன் பள்ளத்தாக்கில் பயிரிடப்படுவதால் இதன் பெயர் அங்கே ஷேரோன் பழம் என்றும் சொல்லப்படுகிறது. இவை கசப்பற்ற ஃபுயூ வகையைச் சோ்ந்ததாகும்.

இந்தப் பழம் நமது நாட்டில் ஜம்மு காஷ்மீர், மே. வங்காளம், உபி, தமிழகத்தில் குண்ணூர் போன்ற சில இடங்களில் பயிர்விக்கப்பட்டாலும் அதிகமாக விற்பனைக்கு வருவது இல்லை. காரணம் ஏற்றுமதியாகும்.

ஆரம்ப காலங்களில் கசப்பு உள்ள ஹச்சியா வகை தான் அதிகமாக பயிரிடப்பட்டது. ஆனால் இன்று 80 சதம் ஃபுயூ பழங்கள் தான் அதிகமாக விற்பனைக்கு வருகின்றன.

இவற்றில் மிக அதிகமாக ஆண்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின் A, மேக்னீஸ், நார்சத்து குறிப்பாக கரையக்கூடிய நார்சத்து உள்ளன.  அதிகமாக வைட்டமின் பி காம்பிளக்ஸ், பொட்டாசியம் மற்றும்  கால்சியம் உள்ளன.

பொதுவாக ஒரு நியாயமான அளவு கொண்ட ஒரு பழத்தில்

கலோரிகள்: 118
கார்போஹைட்ரேட்: 19 – 31g
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்: 6.7mg
ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள்: 65.5mg
புரதம்: 0.6 – 1 கிராம்
ஃபைபர்: 4 – 6 ஜி
வைட்டமின் A: 2733 – 3641 IU
வைட்டமின் பி 1: 0.1 – 0.5mg
வைட்டமின் B2: 0.03mg
வைட்டமின் B3: 0.2 – 0.17mg
வைட்டமின் B6: 0.2mg
வைட்டமின் சி: 12.6mg
வைட்டமின் E: 1.2mg
வைட்டமின் K: 4.4mcg
போலிக் ஆசிட்: 12.6 – 13.4mcg
கோலைன்: 12.8mg
பொட்டாசியம்: 270 மிகி
கால்சியம் 13.4 மி.கி.
மெக்னீசியம்: 15.1mg
பாஸ்பரஸ்: 28.6mg
இரும்பு: 0.3mg
துத்தநாகம்: 0.2mg
காப்பர்: 0.2mg
மாங்கனீசு: 0.6mg
செலினியம்: 1mcg

* மூலம்: NutritionData.com

இதனுள் அடங்கியுள்ள கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள், ஃபீனால்கள் (dietary fibers, total phenols, epicatechin, gallic and p-coumaric acids) எபிகாடெச்சின், பி-கியூமாரிக் அமிலங்கள் போன்றனவும், சில கனிமங்களும் ஆப்பில் பழத்தைவிட அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பழத்தின் சிறப்பம்சத்தை பற்றிய விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி இன்னும் முடிவு பெறவில்லை.  கட்டிகள் மற்றும் புற்று நோய் உருவாகுவதை தடுக்கும் சக்தியைப் பெற்றுள்ளது இதன் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.

இதில் உள்ள டானின் இரத்த உறைதலை முடுக்கி இரத்த அழுத்தத்தை குறைக்கவும் , இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. மேலும் இது தசைகளுக்கும் கல்லீரலின் செயல்பாட்டுக்கும் உதவுகிறது.

இந்தப் பழத்தை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் மலச்சிக்கல் அகலும். ஆனால் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கில் விட்டு விடும். சமைத்த பழம் வயிற்றுப்போக்கு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆக ஒரே பழத்தில் எதிர் விளைகள் உள்ளன.

என்ன! கடைக்கு கிளம்பி விட்டீர்களா?