தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,090 முறை படிக்கப்பட்டுள்ளது!

பத்தமடைக்கு பெருமை பாஹீரா பானு!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது,இங்கு செய்யப்படும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய பாய் எனப்படும் படுக்கை விரிப்புகள் உலகப்புகழ் பெற்றவை. பாயில் மணமக்கள் பெயர்கள் எழுதுவது, ஒவியங்கள் தீட்டுவது, பட்டுதுணி போல மென்மையாக உருவாக்குவது என்பதெல்லாம் பத்தமடை பாயின் பெருமைகளாகும். இப்படி பாயினால் பெருமை அடைந்துள்ள பத்தமடைக்கு இன்னொரு பெருமை கிடைத்துள்ளது. இந்த பெருமைக்கு காரணமானவர் பாஹீரா பானு. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் எடுத்து தேர்வான 19 மாணவியரில் அரசு பள்ளி மாணவி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,589 முறை படிக்கப்பட்டுள்ளது!

“ரிஸ்க்” எடுப்பவரா நீங்கள்?

“வயசுப்பெண்கள் இருக்கும் வீட்டில் திண்ணை வீடு ரிஸ்க்! வீரப்பன் காட்டுப் பக்கம் பண்ணை வீடு ரிஸ்க்!”

என்று கவிஞர் வைரமுத்து சில வருடங்களுக்குமுன் ஒரு படத்திற்கு எழுதியிருந்தார். மனிதர்கள் இரண்டு விதம், “ரிஸ்க்” எடுத்துதான் பார்ப்போமே” என்று இறங்குபவர்கள், “எதுக்குங்க ரிஸ்க்” என்று பதுங்குபவர்கள். இந்த இரண்டு வகையான மனப்பான்மையும் எல்லோரிடமுமே எடுக்க வேண்டிய ‘ரிஸ்க்’கிற்கேற்ப மாறி மாறி வரும்.

ஆனால், எந்த ரிஸ்க் எடுக்கக்கூடியது, எது எடுக்க வேண்டாதது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,662 முறை படிக்கப்பட்டுள்ளது!

நாலு வித்தியாசங்கள்

தங்கள் வாழ்வில் தொடர்ந்து தோல்விகளையே சந்திப்பவர்களையும், ஒரு கட்டத்திற்குப் பிறகு சுதாரித்துக் கொண்டு வெற்றி பெறுபவர்களையும் இருபதாண்டுகளாக சந்தித்து வரும் மனவியல் பயிற்சி நிபுணர் ஒருவர், இருதரப்பினருக்கும் இருக்கிற நான்கு வித்தியாசங்களைப் பட்டியலிட்டிருக்கிறார். அவை என்ன தெரியுமா?

தோல்வியாளர்கள்

இவர்கள், அச்சத்தின் பிடியில் தவிப்பவர்கள். உலகமே இவர்களுக்கு அச்சமூட்டுகிற இடமாய் இருக்கிறது.

சராசரி வாழ்க்கையையும் பயந்து கொண்டே செய்பவர்களாக இருக்கிறார்கள். தங்கள் எதிர்காலத்தைக் காட்சிப்படுத்தும் திறமை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,460 முறை படிக்கப்பட்டுள்ளது!

பேக்கரி மஹராஜ்

என் கடைகளை வாடிக்கையாளர்கள் நடத்துகிறார்கள்.

புதுக்கோட்டை மஹாராஜ் பேக்கரி உரிமையாளர் திரு. சின்னப்பாவின் சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள்.

உங்கள் தொடக்க காலம் பற்றி எங்களோடு பகிர்ந்துகொள்ள முடியுமா?

எங்கள் முன்னோர்கள், காரைக்குடியில் பேக்கரி துறையில் மிகவும் சிறிய அளவில் ஈடுபட்டவர்கள். எங்கள் தாத்தா, ரொட்டிக்கு ஈஸ்ட் கிடைக்காத காலத்தில், புளிக்க வைப்பதற்காகவே பனங்கள்ளைப் பயன்படுத்தியவர். சிரமமான சூழ்நிலையில், காரைக்குடியில் நடத்தி வந்த பேக்கரிக்குப் பிறகு முதல் முதலாக . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,217 முறை படிக்கப்பட்டுள்ளது!

வென்றவர் வாழ்க்கை

“கார்களின் காதலர்” ஹென்றி ஃபோர்டு. வெறும் தொழிலதிபராக மட்டும் விளங்கியிருந்தால் காலம் அவரை கவனித்திருக்காது. பல புதுமைகளின் பிறப்பிடமாய் அவரது மெக்கானிக் மூளை இருந்தது. அதனால் அவரது காலகட்டத்தை “ஃபோர்டிஸம்” என்று வரலாறு புகழ்ந்தது.

மிச்சிகன் மாநிலத்தில் பிறந்தவர் ஹென்றி ஃபோர்டு. அவரது பெற்றோர் அயர்லாந்திலிருந்து வந்து குடியேறியவர்கள். ஆறு குழந்தைகளில் மூத்தவர் ஹென்றி. மிகச் சிறிய வயதிலேயே அவரது மூளை ‘மெக்கானிக்’ மூளை என்பது வெளிப் பட்டது. 12 வயதுச் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,915 முறை படிக்கப்பட்டுள்ளது!

உடலினை உறுதி செய்!

உடற்பயிற்சிக்கு நேரம் இல்லை என்று நினைப்பவர்கள் பின்னர் ஒருநாள் மருத்துவமனைக்குச் செல்ல நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும் – எர்வர்ர் ஸ்டேன்லி நான் ரொம்பவும் பிஸியாக இருக்கிறேன். எனக்கு உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்கிறார்கள் சிலர். பிஸியாக இருப்பது வரவேற்கத்தக்கதுதான். மன அழுத்தம் (Stress), மனச்சோர்வு (Depression) போன்ற மனநோய்களிலிருந்து விடுதலை பெற ஒரே வழி பிஸியாக இருப்பதாகும். பிஸியாக இருப்பவர் யார்? எல்லா பணிகளையும் செய்து முடிப்பவரைத்தான் பிஸியானவர் என்று கூற முடியும். “A . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,619 முறை படிக்கப்பட்டுள்ளது!

எது நல்ல வருமானம்?

ஒருவர் முக்கிய நெடுஞ்சாலை ஒன்றின் ஓரத்தில் பரோட்டாக் கடை நடத்திக் கொண்டிருந்தார். அயலூரில் தொழில் புரியும் அவருடைய மகன் விடுமுறைக்கு வந்திருந்தான். “அப்பா! பக்கத்திலே புதுசா ஹோட்டல் வரப்போகுதாம்! நல்ல வசதியான ஆளுங்க கடை போடறாங்களாம். நீங்க கடையை மூடிட்டு என்கூட ஊருக்கே வந்திடுங்க!”

“யோசிச்சு சொல்றேன்” என்றார் அப்பா. இரவு முழுவதும் யோசித்தார். விடிவதற்குள் முடிவெடுத்திருந்தார். ‘இல்லப்பா! என்னாலே முடிஞ்ச வரை நடத்தறேன். முடியாட்டி உன்கூட வந்துடறேன்”.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,385 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஐ.ஐ.டி.,க்களில் தமிழக மாணவர்கள!

ஐ.ஐ.டி.,க்களில் சேரும் தமிழக மாணவர்கள் எண்ணிக்கை குறைவதை தடுக்க, மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

ஜே.இ.இ., எழுத வேண்டும்: சென்னை, டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில், மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி.,க்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சேர, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையால் நடத்தப்படும், கூட்டு நுழைவு தேர்வுகளை (ஜே.இ.இ.,) எழுத வேண்டும்.கடந்த, 2012ல், இத்தேர்வு முறை, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 10,136 முறை படிக்கப்பட்டுள்ளது!

தொப்பையை கரைத்து இளமையை மீட்கும் யோகமுத்திரா!

ஆசனங்கள், தியானம், உடற்பயிற்சி என்று எதுவாக இருந்தாலும் வயிற்றில் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக இருப்பது அவசியம். அதற்கு யோக முத்திரா உதவுகிறது. யோக முத்திராவை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு முதுகுதண்டில் உள்ள இறுக்கம் நீங்குகிறது. இளமை ஏற்படுகின்றது. முதுகு தண்டுவடம் வழியாக செல்லும் உடலின் முக்கிய நரம்புகள் எல்லாம் பலம் பெறுகின்றன. நல்ல ஆரோக்கியத்தை எட்டுகின்றன. நாள் முழுவதும் சுறுசுறுப்பு தொடர்கிறது. முகத்தில் பொலிவும், தேஜசும் ஏற்படுகிறது. முக்கியமாக இரண்டு குதிக்கால்களும், பெருங்குடலும் இந்த . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,459 முறை படிக்கப்பட்டுள்ளது!

தன்னம்பிக்கை… விடா முயற்சி… அர்ப்பணிப்பு!

ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னஞ்சிறு கிராமம் தான் பகைவென்றி.

இக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம.மு.சிபிகுமரன். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வில் 3 முறை வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் அப்பணிக்கு அவர் செல்லவில்லை.

ஐ.ஏ.எஸ். முதல் நிலை மற்றும் முதன்மைத் தேர்விலும் வெற்றி பெற்று பின்னர் நேர்முகத் தேர்வு வரை சென்றிருக்கிறார் இவர். வெற்றி பெற்றாலும் வேலைக்குச் செல்லவில்லை.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,304 முறை படிக்கப்பட்டுள்ளது!

கூடைப்பந்து விளையாடுவது என்னுடைய ஹாபி!

பிரபல கணினி மற்றும் இணைய நிறுவனங்களான கூகுள் மற்றும் மைக்ரோ ஸாஃப்ட் ஆகியவை, ஹிஜாப் அணிந்த பெண்மணி ஒருவர் உருவாக்கிய மென்பொருளை வாங்க போட்டி போடுகின்றன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடமிருந்து வெள்ளை மாளிகைக்கு விருந்துண்ண வாருங்கள் என்று அழைப்பு வந்துள்ளது. உலகில் பல்வேறு இடங்களிலிருந்து பாராட்டு மழை பொழிகிறது.

தமது சாதனைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் விவரிக்க வாஷிங்டனுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார் அப்பெண்மணி.

யார் அவர்? அப்படி என்ன . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,727 முறை படிக்கப்பட்டுள்ளது!

சதீஷ்கரில் சாதனை படைத்திட்ட தமிழ் பெண் கலெக்டர்

நக்சசல்பாரிகள் உள் நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பவர்கள் என்று பிரதமராலேயே சொல்லப்படுபவர்கள். இவர்களை சமாளிப்பதுதான் மாநிலத்தின் மிகப்பெரிய சவால் என்று மாநில முதல்வரால் விவரிக்கப்படுபவர்கள்.

இவர்களுக்கு ஜனநாயக வழியிலான தேர்தல் முறையில் விருப்பமில்லை. சட்டத்தின் ஆட்சி என்பது பிடித்தமானதல்ல. தேர்தலை புறக்கணிப்போம் என்ற பிரச்சாரத்தை முன் நிறுத்துபவர்கள். தேர்தலுக்கு ஆதரவானவர்களை அடிப்பது உதைப்பது கடத்திச் செல்வது கொடூரமாய் கொல்வது என்பதெல்லாம் இவர்களது வழிமுறைகள்.

வாக்குச்சாவடியை கைப்பற்றுவது, ஓட்டளிக்க . . . → தொடர்ந்து படிக்க..