|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
6,341 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th April, 2011 இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. எந்த ஒரு தனிக்கட்சியும் தனித்துப் போட்டியிடும் தைரியத்தில் இல்லை என்பது, ஜனநாயகத்துக்கு நல்ல அறிகுறி அல்ல. இருந்தாலும், மத்தியிலாகட்டும் அல்லது மாநிலத்தில் ஆகட்டும் யாரும் யாருடனும் கூட்டணி வைக்கலாம் என்ற வணிக யுத்தியும் அதன் வழி புதிரான பேரங்களும் கடை விரித்திருக்கின்றன.
உங்கள் நர்கிஸ் ஒரு மாத இதழ் – வாசகர்கள் செல்போனிலும் ஈமெயிலிலும் ஏன்? ஃபேஸ் புக்கிலும் கேள்விகளை சரமாறியாகத் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,339 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st March, 2011 எனது மௌத் எங்கு நிகழ்ந்தாலும், அந்த இடத்தருகே உள்ள கப்ருஸ்தானில் சீக்கிரமே அடக்கிவிடவேண்டும். என் மீது பாசமுள்ள ஆலிம் தொழவைக்க வேண்டும். கப்ருக்கு எந்த அடையாளமும் வைக்க வேண்டாம். வீட்டாளர்களும் பிறரும் முடிந்தவர்கள் தானதர்மங்கள் – துஆ செய்ய வேண்டுகிறேன்.
என்று முன்பே எழுதிவைத்துவிட்டு, முஹர்ரம் ஆஷுரா நோன்புடன் அல்லாஹ்வின் அழைப்பில் மீண்ட திண்டுக்கல் யூசூபிய்யா மதரஸா முதல்வர் அல்லாமா ஜலீல் அஹ்மது கீரனூரி ஹழரத் அவர்கள் சமுதாயத்துக்கு, தம் வாழ்நாளில் ஆற்றிய அரும்பணிகளைப் பட்டியலிடமுடியாது.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,161 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th January, 2011 பெரும்பாலான தமிழ் முஸ்லிம்களின் – அதிலும் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் -வாழ்வியலுக்கு இரண்டு கால்கள் உள்ளன. ஒன்று தமிழகக்கால்; தென்கிழக்காசியாவின் நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், பர்மா, சைகோன், லாவோஸ், வியட்நாம், சிலோன் என்ற ஸ்ரீலங்கா போன்றவற்றில் மற்றது.
அந்தக்காலத்தில் 10 வருடங்களுக்கு ஒரு முறையும் அதற்கு மேலும் ‘சபுர்’ செய்தவர்கள் இருந்துள்ள வரலாறும் புதிய செய்தி அல்ல.
என்றாலும் சில ஊர்களைச் சேர்ந்த முன்னோர்கள் தங்களது குடும்பங்களுடன் குடிபெயர்ந்து அந்தந்த நாடுகளிலேயே தங்களது வாழ்வாதாரங்களை உருவாக்கிக் கொண்டார்கள். தங்கள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,736 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st January, 2011 “அஸ்ஸலாமு அலைக்கும்… ஹாஜியார் வீட்டிலிருந்து பேசுறேன்… ஹாஜியார் பணம் தரச் சொன்னாக” மென்மையான ஒரு குரல் … தொலைபேசியில்! “சரிம்மா… இன்ஷா அல்லாஹ் வந்து வாங்கிக்கிறேன்” நான் பதில் சொல்வேன்.
இராமநாதபுரம் சிங்காரத் தோப்பில் இருக்கும் அவர்களது வீட்டுக்குச் செல்வேன் … பணத்தைப் பெறுவேன்; அப்படியே கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதிர் மகளிர் கல்லூரிக்குச் சென்று முதல்வர் சகோதரி சுமையாவிடம் அந்தப் பணத்தை ஒப்படைப்பேன்; அது நாங்கள் செய்துவந்த கல்வி உபகாரநிதியில் சேரும்!
இப்படி எத்தனை முறை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,462 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd June, 2010 சிறுகதைப் போட்டிக்கு வந்துள்ள சிறுகதைகள் கருவிலும், உருவிலும், கதைசொல் முறைமையிலும் பல்வேறு தளங்களில் பயணிக்கின்றன. தேர்வாளர்கள் பெரும் சவால்களை சந்திக்கின்றனர்.
இஸ்லாமியச் சிறுகதை முன்னோடி எழுத்தாளர் தொடங்கி, வெகுஜன ஊடகங்களில் உயரத்தில் நிற்கிற திறன்மிக்கோர், சமுதாயப் படைப்பிலக்கியப் பாதையில் சாதனைகள் படைத்து முன்னிற்போர், துவக்க நிலை எழுத்தாளர்கள் என்று கடுமையான போட்டி நிலவுகிறது.
இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்தான் பரிசுப் பட்டியலைத் தர முடியும் என்ற நிலைமை.
இருந்தாலும் போட்டிக்கென வந்த ஒரு சிறுகதை, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,617 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd May, 2010 மகளிர் இட ஒதுக்கீடு: உள்ளொதுக்கீடு … தாமதம் கூடாது!
கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ரப்பராய் இழுக்கப்பட்டு திருமதி சோனியா காந்தியின் கடும் முயற்சியில், கலைஞர் போன்ற கூட்டணித் தலவர்கள், இடது சாரிகள், பிரதான எதிர்க்கட்சியான பாஜக உதவியுடன் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டு மசோதா தாக்கலாகியிருக்கிறது. ராஜ்ய சபாவில் வாக்கெடுப்பும் நடந்து வெற்றி பெற்றிருக்கிறது.
லோக்சபாவிலும் நிறைவேறி அது சட்டமாகிவிடும் என்ற நம்பிக்கை உறுதிப்பட்டிருக்கிறது.
லாலுவும், முலாயமும் முறையே பீஹார், உ.பி. மாநில முஸ்லிம்களின் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
8,208 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd March, 2010 ஒழுக்கம்தான் ஒரு மனிதனுக்கு உயிர்போன்றது. பிறர் ஒரு மனிதனின் தகுதியை அளவிடுவதில் முக்கியப்பங்கு வகிப்பதும் அதுவே! சாதாரண மனிதனுக்கே அது அவசியம் எனும்போது, தலைவர்களுக்கு அது மிக மிக முக்கியமானது அல்லவா?
எல்லா மொழிகளிலும் எல்லா அறநூல்களும் போதிக்கும் முதல் பாடம் ஒழுக்கம் சார்ந்ததுதான். எல்லா சமய நூல்களும் அதனைத்தான் முன்னிறுத்துகின்றன. நமது நாட்டின் அரசியமைப்புச் சட்டமும் ஜனாதிபதி முதல் சாதாரண பஞ்சாயத்துத் தலைவர் வரை ஒழுக்கத்தை- நாணயத்தை முன்வைக்கும் உறுதிமொழியை (சத்தியப் பிரமாணத்தை) . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,783 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd January, 2010 உலகத்தின் பொருளாதாரப் போக்கை நிர்ணயிக்கும் சர்வ வல்லமையுள்ள ஆயுதமாக அமெரிக்க டாலரையே உலகம் காண்கிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தால் தங்கத்தின் விலை சரிகிறது; அது சரிந்தால் தங்கத்தின் மதிப்பு உயர்கிறது. எனவே உலகத்தில் தங்கத்தின் மதிப்பைவிட உயர்ந்தது டாலர் என்ற மதிப்பீடு உலகில் நிலவுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. உலகத்தின் பெரும்பான்மை நாடுகள் தங்களுடைய சர்வதேச வணிகத்தொடர்புக்கு அமெரிக்க டாலரை பயன்படுத்துவதே அதற்கான காரணம். உலகம் இன்னொரு நாட்டின்
நாணயத்தை அல்லது ஒரு பொருளை (உதாரணம்: . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,480 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st January, 2010 20 -ம் நூற்றாண்டு முடிந்து 21-ம் நூற்றாண்டு பிறந்தது இப்போதுதான் நிகழ்ந்தது போலிருக்கிறது! ஆனால் இந்த நூற்றாண்டின் முதலாவது 10 ஆண்டுகள் ஒரு நொடிபோலப் பறந்து போய்விட்டது! இதோ… அடுத்த பத்தாண்டுக்குள் நுழையப் போகிறோம்!
கடந்த பத்தாண்டுகளில் உலகத்துக்கு நல்லவையும் நடந்தன; கெட்டவையும் நிகழ்ந்தன. ஆனால் … எட்டு ஆண்டுகாலம் அமெரிக்காவின் அதிபராக இருந்த புஷ் என்ற ஒரு மனிதரின் அவசரம் -அகங்காரத்தால் நிகழ்ந்த ‘அப்பாவி மரணங்கள்’தான் நம்மை இன்னும் கூட நம்மை எந்த முன்னேற்றத்தையும் ரசிக்க . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,028 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd December, 2009 லேமேன் பிரதர்ஸ் போன்ற உலகப் பெரும் வங்கிகள் திவாலானதைத் தொடர்ந்து இதுவரை சந்தித்திராத பொருளாதார நெருக்கடியில் உலகம் துவண்டு போய்க் கிடக்கிறது. உலகுக்குப் பொருளாதார முறைமைகளைக் கற்றுக்கொடுக்கும் ஆசான்களாகத் திகழ்ந்த அமெரிக்க – ஐரோப்பிய நிபுணர்கள் செய்வதறியாது கைபிசைந்து கொண்டு நின்ற வேளையில், இஸ்லாமிய ஷரீஅத் அடிப்படையிலான வங்கித் துறையும், அதனை தங்களது வழக்கமான வங்கிப் பரிவர்த்தனைகளுடன், இஸ்லாமிய வங்கி ஜன்னல்களையும் திறந்திருந்த சில பெரிய வங்கிகளின் அந்தக் குறிப்பிட்ட இஸ்லாமிய வங்கிக் கிளைகளும் எந்த பாதிப்பும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,866 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st December, 2009 ராஜகிரி தந்த நன்முத்து – ‘ஜமால்’ மெருகேற்றிச் செதுக்கிய மாண்பாளர், சமுதாய நற்பணியாளர் அப்துல் மாலிக் அவர்கள் நமையெல்லாம் விட்டுப் பிரிந்து, படைத்தவனின் அழைப்பில் பறந்துவிட்டார் என்ற செய்தி தந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாத நிலையிலேயே இந்த வரிகளைப் பதிவு செய்கிறோம்.
மாலிக் ஓர் அற்புதமான மனிதர் -விலைமதிக்க முடியாத மாணிக்கம் என்பதை அவருடன் பழகியவர்கள்-பயன்பெற்றவர்கள் தங்கள் உள்ளத்தில் மட்டுமல்ல -உடல்களின் ஒவ்வோர் அணுவிலும் சுமந்துகொண்டே சுவாசிப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு வழியே இல்லை!
அவரது ஆர்ப்பாட்டமில்லாத அணுகுமுறை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,847 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st November, 2009 இந்தியாவின் பிரதமராவதற்கு மிகவும் தகுதி வாய்ந்த மனிதர் நரேந்திர மோடி தான் என்று பாஜகவில் ஒரு பிரிவினர் குரல் கொடுத்த மறுநிமிடம் பாஜகவின் வெற்றிவாய்ப்பில் ஓட்டை விழுந்தது. தேர்தலில் அக்கட்சி தோல்வியைத் தழுவியது மட்டுமல்லாமல் “உன்னால நான் கெட்டேன்; என்னால நீ கெட்டே” என்று ஒருவர் மீது ஒருவர் ஏசிக்கொள்ளும் அசிங்கம் அரங்கேறி வருகிறது.
தேர்தல் தோல்வியை ஆய்வு செய்த உயர்மட்டக் குழு மோடியின் கோரமுகத்தையும், குட்டி மோடியாகிவிடக் கொக்கரித்த வருணையும் . . . → தொடர்ந்து படிக்க..
|
|