Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2011
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,807 முறை படிக்கப்பட்டுள்ளது!

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!

தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாவும் இருக்கு.

அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச, கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா?

அப்படி எனக்கு தெரிஞ்ச ஒரு யுக்தி என்னன்னா, தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ண வேண்டுமாம். நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள உறக்கம் வந்துவிடுமாம். இதை நான் எத்தனையோ தரம் முயற்சி செஞ்சி பார்த்திருக்கேன்.

பலன் என்னவா இருக்கும்னு நினைக்கிறீங்க…..?

வேற ஒன்னுமில்ல, குழப்பம்தான்! அட ஆமாங்க, சில சமயம் நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள தூக்கம் வந்துவிடும். பல சமயங்கள்ல 1000 வரை எண்ணிக்கிட்டிருந்தாக்கூட தூக்கமே வராது. இப்படியானா குழப்பம் வராம என்ன செய்யும் சொல்லுங்க….?

சரி இப்படி வேற எதாவது யுக்திகள் உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. அடுத்த முறை முயற்சி பண்ணி பார்க்குறேன். ஆனா, இப்போ, இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பத்தியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியல் பொருட்களையும் பத்தி விளக்கமா தெரிஞ்சிக்கலாம் வாங்க……

செர்ரி பழங்கள்!

“இத பார்த்த உடனே, ரெண்டு எடுத்து சாப்பிடனும்போல இருக்கே” அப்படீங்கிற மாதிரி இருக்குற செர்ரி பழங்களுக்கும், உறக்கத்துக்கும் ஒரு ரகசிய உறவிருந்தது இதுவரைக்கும் எனக்கு தெரியாமப்போச்சு!

என்ன….., உங்களுக்குமா?

“என்னது செர்ரி பழத்துக்கும் உறக்கத்துக்கும் சம்பந்தம் இருக்கா?” அப்படீன்றீங்களா…..?

அட ஆமாங்க! நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது, நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. இந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும்/தூண்டும் திறனுள்ள மெலடோனின் (melatonin) அப்படீங்கிற வேதியல் பொருளின் இயற்கை உறைவிடம்தான் நம்ம செர்ரி பழங்கள். செர்ரி பழங்களில் மிக அதிக அளவில் மெலெடோனின் இருப்பது கண்டறியப்பட்டது.

அதனால, இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவும், பயணங்களின்போதும் கொஞ்சம் செர்ரி பழங்களைச் சாப்பிட்டீங்கன்னா, இந்த தூக்கமானது “எங்கே எங்கே” அப்படீன்னு உங்கள தேடிகிட்டு வந்துடும்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! சாப்பிட்டுதான் பாருங்களேன்…..

வாழைப்பழம்!

இதுவரைக்கும் எனக்கு தெரிஞ்சி, நமக்கெல்லாம் நல்லா தெரிஞ்ச வாழைப்பழத்தை மலச்சிக்கல் இல்லாம இருக்குறதுக்காகத்தான் சாப்பிடனும்னு சொல்லி கொடுத்திருக்காங்க. ஆனா, இனிமே இரவு நல்லா உறங்கனும்னா நாம எல்லாரும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுறது நல்லதுன்னு சொல்றாங்க ஆய்வாளர்கள்!

ஏன்னா, இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நம்ம வாழைப்பழத்துல நெறைய இருக்குதாமாம். அதுமட்டுமில்லாம, எல்-ட்ரிப்டோபான் (L-tryptophan) அப்படீங்கிற அமினோ அமிலமும் வாழைப்பழத்துல இருக்குதாம். இந்த எல்-ட்ரிப்டோபான் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5-HTP அப்படீங்கிற ஒரு ரசாயனமா மாறிடும். அதன்பிறகு இந்த 5-HTP-யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.

மெலடோனின் என்ன செய்யும்னுதான் உங்களுக்கு இப்போ நல்லாத்தெரியுமே! அதனால இனிமே தூங்க போறதுக்கு முன்னாடி மறக்காம ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்க, சரியா?

டோஸ்ட்!

நாம பொதுவா காலை உணவா அதிகம் சாப்பிடுற டோஸ்டுக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! ஆனா எனக்குதான் இது நம்புற மாதிரி இல்ல…..

என்ன உங்களுக்குமா?

சரி விடுங்க, நம்ம சந்தேகத்தை நிவர்த்தி பண்றமாதிரியான விஞ்ஞானப்பூர்வ விளக்கங்களா இந்த விஞ்ஞானிங்க என்னதான் சொல்றாங்கன்னு பார்த்துடுவோம்.

அதாவது, மாவுச்சத்து நிறைந்த உணவுகள் எல்லாமே இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டுகிறதாம். இந்த இன்சுலின் ஹார்மோன் உறக்கத்தை தூண்டக்கூடியதாம். எப்படின்னா, இன்சுலின் ஹார்மோனானது மூளையிலிருந்து ட்ரிப்டோபான் மற்றும் செரடோனின் ஆகிய ரசாயனங்களை ரத்தத்தில் அதிகரிக்கச்செய்யும் சமிக்ஞைகளை உருவாக்குகிறதாம். மூளையிலிருந்து வெளியாகும் இவ்விரு ரசாயனங்களும் உறக்கத்தை தூண்டிவிடும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது!

ஓட் மீல்!

இந்த ஓட்ஸ் கஞ்சி சொல்லுவாங்களே அதத்தான் அமெரிக்கா காரைங்க ஓட் மீல் அப்படீங்கிறாய்ங்க! ஆமா, உங்கள்ல (வயதானவர்கள் மற்றும் இளைஞர்கள்) எத்தன பேரு ஓட்ஸ் கஞ்சி அல்லது ஓட்ஸ்+பால் சாப்பிடுறீங்க? கண்டிப்பா, மிக குறைவான எண்ணிக்கையிலான இந்தியர்கள், குறிப்பா தமிழர்கள்தான் ஓட்ஸ் சாப்பிடுறாங்கன்னு நெனக்கிறேன்?!

ஏன்னா, ஒரு நீயா நானா விவாதத்துல பார்த்தேன். சரி அத விடுங்க, நாம மேட்டருக்கு வருவோம்…..

அதாவது, மேலே சொன்ன டோஸ்டு மாதிரியே இந்த ஓட்ஸ் கஞ்சியும் ரத்தத்துல இருக்குற சர்க்கரை அளவை அதிகப்படுத்தி, அந்த சர்க்கரை இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டிவிட, அதன் விளைவாக உறக்கம் தூண்டும் மூளை ரசாயனங்கள் சுரந்து, கடைசியா…..

“உறக்கம் உன் கண்களை தழுவட்டுமே…… நிம்மதி நெஞ்சினில் மலரட்டுமே……”அப்படீன்னு நாம தூங்கிடலாம்னு சொல்றாங்க விஞ்ஞானிகள். (முக்கியமா ஓட்ஸுலயும் மெலடோனின் அதிகமா இருக்குதாமாம்!) என்ன முயற்சி செஞ்சி பார்க்குறீங்களா?

கதகதப்பான பால்!

உறக்கம் தரும் இயற்கை உணவுகள் தரவரிசையில நாம இன்னிக்கு பார்த்த, மேலே இருக்குற 4 உணவுகளுமே புதுசுதான். இல்லீங்களா?

ஆனா, கதகதப்பான பால் மட்டும் பழசுன்னு நெனக்கிறேன். ஆமாங்க, சின்ன வயசுலேர்ந்து “ஒரு டம்லர் பால் சாப்பிட்டு படுத்தா நல்லா தூக்கம் வரும்” அப்படீன்னு சொல்லிதான் நமக்கெல்லாம் அம்மா காய்ச்சின பாலை கொடுத்திருப்பாங்க, இல்லீங்களா?

ஆனா, நம்ம அம்மாவுக்கு அந்த பால்ல இருக்குற எந்த வேதியல் மூலப்பொருள் காரணமா நமக்கு தூக்கம் வருதுன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை! இப்போ அம்மாவா இருக்குற உங்கள்ல பலருக்கு அந்த வாய்ப்பு நம்ம விஞ்ஞானிகள் மூலமா கிடைச்சிருக்கு.

ஆமாங்க, வாழைப்பழத்துல இருக்குற எல்-ட்ரிப்டோபான் அமினோ அமிலம் பாலிலும் இருக்கிறதாம். அதுதான் செரடோனின் உற்பத்தி மூலமா உறக்கம் வரவைக்குதாம். அதுமட்டுமில்லாம, பாலில் அதிக கால்சியம் இருப்பது உங்களில் பலருக்கு தெரியும்னு நெனக்கிறேன். இந்த கால்சியமும் உறக்கத்தை தூண்டும் அப்படீங்கிறாங்க விஞ்ஞானிகள்!

ஆக, உறக்கம் நல்லா வரனும்னா இனிமே யாரும் தூக்க மாத்திரைகள சாப்பிடாதீங்க. அதுக்கு பதிலா மேலே சொல்லியிருக்குற ஐந்து வகையான இயற்கை உணவுகளை சாப்பிட முயற்சி பண்ணுங்க, சரிங்களா? ஏன்னா, அவசியமில்லாம மாத்திரைகள சாப்பிடுறது உடலுக்கு கேடுதான்!

என்னங்க, திடீர்னு எல்லாரும் காணாமப் போய்ட்டீங்க?

ஓ……செர்ரி பழங்கள்ல ஆரம்பிச்சி பால் வரைக்கும் வீட்ல இருக்குதான்னு தேட ஆரம்பிச்சிட்டீங்களா? சரி சரி, இதையெல்லாம் சாப்பிட்டு நல்ல உறங்கி உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்குங்க……!

நன்றி: மேலிருப்பான்