|
Mohamedia Higher Sec School HSC 2009
Results:
மேலும்
விவரங்களுக்கு
திருமண
வாழ்த்துக்கள்:
மணமகன்: K. செய்யது அப்துல் காதர் ரியாஸ்
மணமகள்: A. நிஃமத் நிஷா
நாள்: 15-05-2009
இடம்: சித்தார்கோட்டை
முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்
ரியாத் இந்திய பன்னாட்டுப் பள்ளியின் சேர்மனாக
தமிழர் தேர்வு.
சவுதி
அரேபியா ரியாத் மாநகரில் கடந்த 26 ஆண்டுகாலமாக
செயல்பட்டு வரும் இந்திய பன்னாட்டுப் பள்ளியில்
முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர்
சேர்மனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியத் தூதர் மேதகு M.O.H பாரூக்
அவர்களால் திருச்சியைச் சேர்ந்த
அஹமது இம்தியாஸ் அவர்கள் நியமனம்
செய்யப்பட்டுள்ளார். கடந்த 26
ஆண்டு காலமாக ரியாத்தில்
செயல்பட்டு வரும் பன்னாட்டு
பள்ளியில் ஒரு தமிழர் சேர்மனாக
தேர்வு செய்யப்பட்டுள்ளது இதுவே
முதல் முறையாகும்.
முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்
நர்கிஸ் - மல்லாரிப்
இணைந்து நடத்தும்
“முகம்மது இஸ்மாயில் - இபுறாஹீம் பீவி நினைவு”
சிறுகதை - கவிதைப் போட்டிகள்
இறுதி நாள்:
செப்டம்பர் மாதம் 30 -ம் தேதி
மொத்தம்: 36 பரிசுகள்!
முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்
மீலாத் சிந்தனைகள்
- ஹிமானா - தலையங்கம்
இதோ நம் முன்னே இன்னொரு பரிசோதனைக்களம்!
அண்ணலெம்பெருமானார் (ஸல்) அவர்கள் அவணிக்கு வந்த நாளை
நினைந்து மகிழ்ந்து கொண்டாடுகிற இந்த வேளையில் நமக்கு நாமே
சுய பரிசோதனை செய்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு!
63 ஆண்டுகள் இந்த மண்ணில் வாழ்ந்த அந்த மனிதப் புனிதர் தம்
இறைவன் அவனது வேதத்தின் வழி தமக்கிட்ட கட்டளைகள்
அனைத்தையும் ஒன்றுவிடாமல் பூரணப்படுத்திவிட்டு
அல்லாஹ்விடம் மீண்டார்கள்!
திருமறையின் ஒவ்வொரு இழையையும் தமது வாழ்வின் ஒவ்வொரு
அசைவிலும் பிரதிபலித்து தமது உம்மத்துக்களின் இம்மை
வாழ்க்கைச் செழுமைக்கும் மறுமை வாழ்க்கைச் சிறப்புக்கும்
அதனையே மூலமாக்கிவிட்டு தமது நபித்துவத்தின் இம்மை ஏட்டை
நிறைவு செய்தார்கள்!
.முழுமைக்கு
இங்கே கிளிக் செய்யவும்
டாக்டர் ஹிமானா சையத் அவர்களின்
நூல்கள் வெளியீட்டு விழா
சிங்கப்பூரில்
டாக்டர் ஹிமானா சையத் அவர்களின்
ஊற்றுக்கண் - வெப்பமூச்சுகள் ஆகிய
நூல்கள்
வெளியீட்டு விழா
எதிர்வரும்
மார்ச் 1, 2009 ஞாயிறு அன்று பிற்பகல்
சரியாக மூன்று மணிக்கு
சிங்கப்பூர்
மஸ்ஜித் பென்கூலன் பன்னோக்கு மண்டபத்தில்
நடைபெற இருக்கிறது.
முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்
உலக அமைப்பில் கவுரவ அந்தஸ்து :
ராமநாதபுரம் மாணவரின் சாதனை
சீனாவில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் ராமநாதபுரம்
செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் விமானம்
மற்றும் ராக்கெட் இன்ஜின்களில் பயன்படும் திரவ இயக்கவியல்
பற்றி ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து உலக அமைப்பில் கவுரவ
உறுப்பினர் பதவியை பெற்றுள்ளார்.
கிரீஸ் நாட்டில் செயல்படும் உலக பொறியியல் விஞ்ஞான
அமைப்பின் சார்பில் சீனா சாங்காய் நகரில் கடந்த 10ம் தேதி
முதல் 12 வரை உலக அளவிலான விமானம் மற்றும் ராக்கெட்
வடிவமைப்பு பற்றிய கருத்தரங்கு நடந்தது. அமெரிக்கா உட்பட
105 நாடுகளை சேர்ந்த 135 இன்ஜினியரிங் துறை வல்லுனர்கள்,
35 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.
முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுத
இலவச பயிற்சி
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுத
விரும்பும் மாணவர்கள் சென்னையில் இலவச
பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம் என்று
மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை
துரைசாமி அறிவித்துள்ளார்.
சென்னையில் சைதை துரைசாமி நிறுவியுள்ள
மனிதநேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்காக இலவச
பயிற்சி அளித்து வருகிறது. இந்த
பயிற்சியில் கலந்து கொள்ளும்
மாணவர்களுக்கு உணவு, உறைவிடம், பாட
நூல்கள், யோகா பயிற்சி வகுப்புகள்,
சீருடைகள், போக்குவரத்து வசதிகள் என
அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு இந்த அமைப்பில்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு 100
மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி
அளிக்கப்பட்டது. அதில் 12 பேர் தேர்வு
பெற்றுள்ளனர். இது மட்டுமல்லாமல்,
தமிழ்நாடு தேர்வாணையக்குழு நடத்தும்
துணை மாவட்ட ஆட்சியர், காவல்துறை
துணை சூப்பிரண்டு போன்ற குரூப்-1
பணிகளுக்கான முதல்நிலை தேர்விலும் 22
மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த மே மாதம் இந்த மையத்தின்
சார்பில் 90 மாணவர்கள் முதல் நிலை
தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வு
முடிவுகள் ஆகஸ்டு மாதம் முதல்
வாரத்தில் வெளியாகிறது. இவர்களுக்கான
முதன்மை தேர்வு பயிற்சி வகுப்புகள்
ஜூலை முதல்வாரத்தில் தொடங்கப்படுகிறது.
முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்
விஞ்ஞான சகாப்தத்தில் உங்கள்
சிந்தனைக்கோர் ஒப்பற்ற விருந்து(வானத்திலிருந்து
இறக்கப்பட்ட இரும்புகள்! )
பூமியில் காணப்படும் இரும்புகள்
அனைத்தும் பூமியில் தாமாகவே
உருவாகவில்லை! மாறாக வானத்தில் வேறு
எங்கிருந்தோ பூமியை நோக்கி வந்தது
என்பது தற்காலத்தில்
கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான
உண்மையாகும்.ஆனால் இந்தப்
பேருண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே
அனைத்துலகங்களைப் படைத்த அந்த இறைவன்
உலக மாந்தர்களுக்கெல்லாம்
நேர்வழிகாட்டிட அவன் இறக்கியருளிய
அவனுடைய சத்தியத் திருவேதத்திலே இதைக்
குறித்து குறிப்பிட்டு மக்கள்
சித்தித்து தெளிபெறுமாறு
அறிவுறுத்துகிறான்.
அல்லாஹ் கூறுகிறான்: -“நிச்சயமாக
நம் தூதர்களைத் தெளிவான
அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்;
அன்றியும், மனிதர்கள் நீதியுடன்
நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும்
(நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்;
இன்னும், இரும்பையும் இறக்கினோம்.
அதில் கடும் அபாயம் இருக்கிறது;
எனினும் (அதில்) மனிதர்களுக்குப் பல
பயன்களும் இருக்கின்றன - (இவற்றின்
மூலமாகத்) தனக்கும், தன்னுடைய
தூதருக்கும் மறைமுகமாகவும் உதவி
செய்பவர் எவர் என்பதையும் (சோதித்து)
அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு
அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம்
மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்” (அல்குர்ஆன்:
57:25)
முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்
செல்போன்கள் -(அறிவியல் அதிசயம்)
தொலைபேசிகள் இயக்கத்திற்கு
வந்த பிறகும்கூட தொலைபேசியின் மூலம் அழைப்பது என்பது குதிரைக்
கொம்பாகவே இருந்தது. கிராமத்திற்கு ஒரு தொலைபேசியோ அல்லது பல
தெருவிற்கு ஒன்றோ என்று அங்கொன்றும் இங்கொன்று மாகத்தான் இருந்தன.
நாளடைவில் தொலை தொடர்பு துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் தாக்கத்தால்
பல வளர்ச்சிகள் ஏற்பட்டு இன்று வீட்டிற்கு ஒரு தொலைபேசி என்றாகி
தொலைது}ர அழைப்புகளுக்கு எஸ்.டி.டி. பூத்துகளுக்கு செல்வதைக்
குறைத்து இன்று மக்களே ஒரு நடமாடும் எஸ்.டி.டி. பூத்துகளாகவே
மாறுவதற்கு காரணமாய் அமைந்தது செல்போனின் வளர்ச்சி.
செல்போன் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பகாலமான 1990-ல் செல்போனின்
எடை இரண்டு கிலோ முதல் இரண்டரை கிலோ வரையும் சார்ஜரின் எடை 1 கிலோ
வரையும் இருந்த இது இப்படி படிப்படியாக குறைந்து இப்போது கிராம்
கணக்கில் வந்துள்ளது. இனி வரும் அத்தியாயங்களில் செல்போன் எவ்வாறு
இயங்குகிறது மற்றும் பலவிதமான நவீன செல்போன்கள் மற்றும் பல்வேறு
அம்சங்களை பற்றிப் பார்ப்போம்.
முழுமைக்கு
இங்கே கிளிக் செய்யவும்
|